惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
小众软件
小众软件
aimingoo的专栏
aimingoo的专栏
Recent Announcements
Recent Announcements
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Microsoft Security Blog
Microsoft Security Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
J
Java Code Geeks
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
博客园 - Franky
爱范儿
爱范儿
T
Tailwind CSS Blog
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
博客园_首页
B
Blog RSS Feed
博客园 - 司徒正美
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிரான்ஸில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு: அ...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

பிரான்ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு நேற்று தொடங்கியது. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் பார்வையிட்டனர்.

Updated on: 

பாரிஸ்: பி​ரான்ஸ் நாட்​டின் நீஸ் நகரில் அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்​ரானை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​தார். இரு தலை​வர்​களும் இணைந்து ‘பாரதத்​தின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள்’ மாநாட்டை தொடங்கி வைத்​தனர்.

பிரான்​ஸ், ஸ்லோவேக்​கியா நாடு​களில் பிரதமர் மோடி 6 நாட்​கள் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​கிறார். இதற்​காக டெல்​லி​யில் இருந்து கடந்த 13-ம் தேதி அவர் பிரான்ஸ் புறப்​பட்​டுச் சென்​றார். இந்​நிலை​யில், பிரான்​ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்​தின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள்’ என்ற 3 நாள் மாநாடு நேற்று தொடங்​கியது.

இந்​தி​யா​வைச் சேர்ந்த 150-க்​கும் மேற்​பட்ட தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள், ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் மாநாட்​டில் அரங்​கு​களை அமைத்​துள்​ளன. உலகம் முழு​வதும் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​கள் சிறப்பு விருந்​தினர்​களாக பங்​கேற்​றுள்​ளனர்.

பிரதமர் மோடி​யும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரானும் மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இந்​தியா - பிரான்ஸ் இடையே நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. இரு நாடு​களும் ஒன்​றிணைந்து பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கின்​றன. குறிப்​பாக, உலக நாடு​கள் எதிர்​கொள்​ளும் பல்​வேறு சவால்​களுக்கு இணைந்து தீர்வு காண்​கின்றன. சூரிய சக்​தி, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஆகிய துறை​களில் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றன.

‘இந்​தியா - பிரான்ஸ் புதுமை கண்​டு​பிடிப்​பு’ ஆண்டாக இந்த ஆண்டை அறி​வித்​துள்​ளோம். இதன் ஒரு பகு​தி​யாகவே ‘பாரதத்​தின் புதுமை கண்​டுபிடிப்​பு​கள்’ மாநாடு நடைபெறுகிறது. இதன்​மூலம் இந்​தியா, ஐரோப்பிய நாடு​களின் தொழில்​நுட்ப நிபுணர்​கள் இடையே நேரடி தொடர்பு ஏற்​படும்.

இந்​தி​யா​வில் ஸ்டார்ட்​அப் புரட்சி நடந்து வரு​கிறது. எங்​கள் நாட்​டில் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் செயல்​படு​கின்​றன. இதில் 125 நிறு​வனங்​கள் மாநாட்​டில் பங்​கேற்​றுள்​ளன. அதிக ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களைக் கொண்ட நாடு​களின் பட்​டியலில் இந்​தியா 3-வது இடத்​தில் உள்​ளது.

ஏஐ தொழில்​நுட்​பம் மூலம் இந்​திய கிராமங்​களில் வசிக்​கும் மக்​களின் வாழ்க்​கைத் தரம் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. ஹைட்​ரஜன் எரிசக்​தி, மின்​சார வாக​னங்​கள், புதிய பேட்​டரி தொழில்​நுட்​பங்​கள் என இந்​தி​யா​வில் மிகப்​பெரிய மாற்​றங்​கள் நிகழ்ந்து வரு​கின்​றன.

ஏஐ, குவான்​டம் கம்ப்​யூட்​டிங், பயோ டெக்​னாலஜி, விண்​வெளி தொழில்​நுட்​பம், கனிம வளம் சார்ந்த தொழில்​நுட்​பம் ஆகிய துறை​களில் இந்​தியா முன்​னோடி​யாக உரு​வெடுத்து வரு​கிறது. உலக நாடு​களின் தேவை​களை கருத்​தில் கொண்டு மனித குலத்​துக்கு சேவை​யாற்ற இந்​திய நிறு​வனங்​கள் புதிய தொழில்​நுட்​பங்​களைக் கண்​டு​பிடித்து வரு​கின்​றன. ஏஐ தொழில்​நுட்​பம் உலக மக்​கள் அனை​வருக்​கும் கிடைக்க வேண்​டும் என்​பதே இந்​தி​யா​வின் லட்​சி​யம்.

புது​மை​களைக் கண்​டு​பிடிப்​பது இந்​தி​யர்​களின் மரபணுவோடு கலந்​திருக்​கிறது. ஒரு காலத்​தில் உலகத்​தின் தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்​தும் நாடாக இந்​தியா இருந்​தது. இப்​போது உலகத்​துக்கு தொழில்​நுட்​பத் தீர்​வு​களை வழங்​கும் நாடாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது. இந்த நேரத்​தில் இந்​தி​யா​வில் முதலீடு செய்ய உலக முதலீட்​டாளர்​களுக்கு அழைப்பு விடுக்​கிறேன். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

பிரான்ஸ் அதிபர் மேக்​ரான் பேசும்​போது, ‘‘ஆ​ராய்ச்​சி, புதிய தொழில்​நுட்​பங்​களில் இந்​தியா முன்​னோடி​யாக உள்​ளது. புதுமை கண்​டு​பிடிப்​பு​களின் தலைநக​ராக உரு​வெடுத்​துள்​ளது. இந்​தி​யா​வோடு இணைந்து பணி​யாற்ற உலக நாடு​கள் ஆர்​வம் காட்​டு​கின்​றன. ஏஐ தொழில்​நுட்​பம் அனைத்து நாடு​களுக்​கும் கிடைக்க வேண்​டும் என்று இந்​தியா வலி​யுறுத்​துகிறது. இந்த கொள்​கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்​கிறது’’ என்று தெரி​வித்​தார்​.

பி​ரான்​ஸிடம் இருந்து புதி​தாக 114 ரஃபேல் போர் விமானங்​களை வாங்க மத்​திய அரசு முடிவுசெய்​துள்​ளது. இதில் 24 போர் விமானங்​கள் பிரான்​ஸில் தயாரிக்​கப்பட உள்​ளன. மீத​முள்ள 90 போர் விமானங்​கள் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படும். இதில் 60 சதவீத உதிரி​பாகங்​கள் இந்​தி​யா​வில் உற்​பத்தி செய்​யப்​பட்​ட​தாக இருக்​கும். ரஃபேல் போர் விமானத்​தின் மூலக் குறி​யீடு (சோர்ஸ் கோடு) இந்​தி​யா​வுக்கு இது​வரை வழங்​கப்​பட​வில்​லை.

இதை வழங்​கு​வது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்​ரானுடன் பிரதமர் மோடி விரி​வாக பேச்​சு​வார்த்தை நடத்​து​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பிரான்​ஸில் இருந்து பிரதமர் மோடி நேற்று ஸ்லோவேக்​கியா தலைநகர் பிராத்​திஸ்​லா​வுக்கு சென்​றார். அங்கு அந்​நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை இன்று சந்​திக்​கிறார். ஜி7 மாநாட்​டில் பங்​கேற்க பிரதமர் மோடி நாளை மீண்​டும் பிரான்ஸ் வரு​கிறார்.