



























Updated on
:
1 min read
YourDesiCart நிறுவனத்தை வசப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள Garudavega, இதன்மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஷாப்பிங் இன்னும் எளிது என்று கூறியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: NexGen Logistics நிறுவனத்தின் ஒரு பகுதியான Garudavega, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பார்சல் சேவை நிறுவனமான YourDesiCart வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம் Garudavega (Garudavega.com) சர்வதேச e-commerce துறையில் தனது வல்லமையை அதிகரித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் சேவைகளை விரிவுபடுத்துகிறது.
2020-ல் தொடங்கப்பட்ட YourDesiCart (YourDesiCart.com), வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மிகவும் உதவிகரமான சேவையாக உள்ளது. 90,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். 220-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள எந்த கடையிலிருந்தும் (online அல்லது offline) பொருட்களை வாங்கி, YourDesiCart மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும். Locker address, parcel ஒன்றாக சேர்த்தல் (consolidation), assisted shopping போன்ற வசதிகளும் உள்ளன.
இப்போது Garudavega உடன் YourDesiCart இணைந்து செயல்படும். இதனால், டெலிவரி வேகம் அதிகரிக்கும், சேவைகள் நம்பகமானதாகும், செலவும் குறையும்.
NexGen Logistics நிறுவனத்தின் CEO சதீஷ் லக்கராஜு கூறும்போது, “YourDesiCart ஒரு சிறந்த தீர்வை உருவாக்கியுள்ளது. இப்போது நாங்கள் முழுமையான ஷாப்பிங் அனுபவத்தை வழங்க முடியும்” என்றார்.
“YourDesiCart நிறுவனத்தின் நிறுவனர் (Founder) சத்யா அய்யாகாரி கூறும்போது, “இந்திய பொருட்களை உலகம் முழுவதும் எளிதாக கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம். Garudavega உடன் இணைவதால், மேலும் வேகமாக வளர முடியும்” என்றார்.
தற்போது ஹைதராபாத்தில் செயல்படும் YourDesiCart, விரைவில் இந்தியாவின் பல நகரங்களுக்கு விரிவடைய உள்ளது. இதனால் டெலிவரி நேரம் குறையும், சேவை மேம்படும், இந்திய விற்பனையாளர்களுக்கு உலக சந்தையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。