惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
腾讯CDC
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
H
Help Net Security
J
Java Code Geeks
C
Check Point Blog
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
MongoDB | Blog
MongoDB | Blog
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிஏஏ மூலம் மதுவா நமாசுத்ரஸ் சமூகத்தினருக்கு குடியுரிமை: ப...
2026-04-27 · via hindutamil

மேற்குவங்கத்தின் அராம்பாக் நகரில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். படம்: பிடிஐ

Updated on

2 min read

கொல்கத்தா: சிஏஏ சட்​டத்​தின் மூலம் மதுவா நமாசுத்​ரஸ் சமூகத்​தினருக்கு குடி​யுரிமை வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​வங்​கத்​தில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. கடந்த 23-ம் தேதி முதல் கட்ட தேர்​தல் நடை​பெற்​றது. வரும் 29-ம் தேதி இரண்​டாம் கட்ட தேர்​தல் நடை​பெற உள்​ளது. கடந்த சில நாட்​களாக பிரதமர் மோடி மேற்​கு​வங்​கத்​தில் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்.

அங்கு பங்​கான் நகரில் நேற்று நடை​பெற்ற பாஜக பிரச்​சார கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சி​யில் மண், பெண், மனித நே​யத்​துக்கு மதிப்பு அளிக்​கப்​பட​வில்​லை. கடந்த 15 ஆண்​டு​களாக மாநிலத்​தில் காட்​டாட்சி நடை​பெற்று வரு​கிறது. மாநிலம் முழு​வதும் ரவுடிகள் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றனர்.

24 பர்​கானஸ் மற்​றும் ஹுக்ளிபகு​தி​கள் ஒரு காலத்​தில் தொழில்மையங்​களாக இருந்​தன. ஆனால் இரு பகு​தி​களி​லும் ஏராள​மான ஆலைகள் மூடப்​பட்டு உள்​ளன. குறிப்​பாக கடந்த 15 ஆண்​டு​களில் மேற்​கு​வங்​கத்​தின் தொழில் துறை முடங்​கி​யிருக்​கிறது. மாநில மக்​கள் வேலை தேடி இதர மாநிலங்​களுக்கு இடம்​பெயர்ந்து வரு​கின்​றனர்.

சந்​தேஷ்​காளி கொடூரத்​தில் பாதிக்​கப்​பட்ட பெண், கொல்​கத்தா ஆர்ஜி கர் மருத்​து​வ​மனை​யில் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்ட பெண் மருத்​து​வரின் தாய் ஆகியோர் பாஜக​வின் வேட்​பாளர்​களாக நிறுத்​தப்​பட்டு உள்​ளனர். பாஜகவை பொறுத்​தவரை பெண்​களுக்கு முன்​னுரிமை அளித்து வரு​கிறோம். பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​களை எதிர்த்து தீவிர​மாக போராடி வரு​கிறோம்.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது மேற்​கு​வங்​கத்​தில் தாமரை மலரும். மேற்​கு​வங்க இளைஞர்​கள் பன்​முகத் திறன் படைத்​தவர்​கள். ஆனால் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு மாநிலத்தை போதை​யின் பாதை​யில் அழைத்​துச் செல்​கிறது. இதனால் இளைஞர்​கள் வழிதவறி செல்​கின்​றனர்.

பாஜக ஆட்சி அமைக்​கும்​போது போதை பொருட்​களுக்கு எதி​ராக அதிதீ​விர நடவடிக்கை எடுக்​கப்​படும். மாநில இளைஞர்​களின் திறன்​களுக்கு மதிப்பு அளிக்​கப்​படும். அறி​வு​சார்ந்த தொழில் துறை வளர்ச்​சிக்கு முன்​னுரிமை வழங்​கப்​படும். இதன்​மூலம் வேலை​வாய்ப்​பு​கள் பெரு​கும்.

முதல்​கட்ட தேர்​தலில் திரிண​மூல் அரசுக்கு எதி​ராக மக்​கள் கொதித்​தெழுந்து வாக்​களித்து உள்​ளனர். இதன் ​காரண​மாகவே வாக்​குப்​ப​திவு சதவீதம் கணிச​மாக அதி​கரித்து உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் வாழும் மதுவா நமாசுத்​ரஸ் சமூகத்​தினருக்கு சிஏஏ சட்​டத்​தின் மூலம் குடி​யுரிமை வழங்​கப்​படும். பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்​றால் இந்த வாக்​குறுதி கண்​டிப்​பாக நிறைவேற்​றப்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

மதுவா நமாசுத்​ரஸ்? - மேற்​கு​வங்​கம் மற்​றும் அண்டை நாடான வங்​கதேசத்​தில் மதுவா நமாசுத்​ரஸ் மக்​கள் அதி​க​மாக உள்​ளனர். இந்த சமூகத்தை சேர்ந்த சுமார் 3 கோடி பேர் மேற்​கு​வங்​கத்​தில் வசிக்​கின்​றனர். இவர்​கள் மேற்​கு​வங்​கத்​தின் பூர்​வகுடி மக்​கள். கடந்த 1947-ம் ஆண்டு இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின்​போது கிழக்கு பாகிஸ்​தானில் இருந்து (வங்​கதேசம்) பெருந்​திரளான மதுவா நமாசுத்​ரஸ் மக்​கள் மேற்​கு​வங்​கத்​தில் குடியேறினர். கடந்த 1971-ம் ஆண்டு வங்​கதேச போரின்​போதும் இந்த சமூக மக்​கள் மேற்​கு​வங்​கத்​தில் தஞ்​சமடைந்​தனர். அவர்​களில் பெரும்​பாலானோருக்கு இன்​ன​மும் குடி​யுரிமை கிடைக்​க​வில்​லை.

பட்​டியலின பிரி​வில் உள்ள மதுவா நமாசுத்​ரஸ் சமூக மக்​கள், மேற்​கு​வங்​கத்​தின் 45 தொகு​தி​களின் வெற்​றி, தோல்​வியை முடிவு செய்​யும் சக்​தி​யாக உள்​ளனர். அண்டை நாட்​டில் இருந்து மேற்​கு​வங்​கத்​தில் குடியேறிய இந்த சமூக மக்​களுக்கு குடி​யுரிமை வழங்​கப்​படும் என்று பிரதமர்​ மோடி உறு​தி அளித்​திருப்​பது மிகுந்​த முக்​கி​யத்​து​வம்​ ​வாய்​ந்​த​தாகக்​ கருதப்​படுகிறது.