惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
DataBreaches.Net
B
Blog
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் அனுப்பி ஐநாக்ஸ் ​நிர்வாக இயக...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

மும்பை: ஐநாக்ஸ் நிறு​வனத்​தில் துணை தலைமை மேலா​ள​ராகப் பணி​யாற்​று​பவர் கிரிஸ் அமின். இவருக்கு தெரி​யாத எண் ஒன்றில் இருந்து நிர்​வாக இயக்​குநர் சித்​தார்த் ஜெயின் போட்டோவுடன் வாட்ஸ் அப் தகவல் ஒன்று வந்​தது.

அதில் ‘இது எனது தனிப்​பட்ட போன் எண், இதை யாரிட​மும் தர வேண்​டாம். சித்​தார்த் ஜெயின்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 3-ம் தேதி அதே எண்​ணில் இருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்​தது. அதில் ஒரு வங்​கிக் கணக்கை குறிப்​பிட்​டு, கம்​பெனி கணக்​கில் இருந்து ரூ.46.5 லட்​சத்தை அனுப்ப​வும் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. அதன்படி அந்த வங்​கிக் கணக்​குக்கு ரூ.46.5 லட்​சத்தை அமின் அனுப்​பி​னார்.

இது​போல அடுத்​தடுத்து 63 முறை மொத்​தம் ரூ.10 கோடியே 40 லட்சத்து 71,924-ஐ அனுப்​பி​யுள்​ளார். இந்​நிலை​யில், கடந்த செவ்​வாய்க்​கிழமை அமின் தனது முதலா​ளியை அலு​வலக லேண்ட்லைன் மூலம் தொடர்பு கொண்டு அனுப்​பப்​பட்ட பணத்துக்கு ரசீதுகளைக் கேட்​டுள்​ளார். அப்​போது, சித்​தார்த் ஜெயின் நான் எப்​போது பணம் அனுப்ப சொன்​னேன் என்று கேட்டுள்​ளார். அப்​போது​தான் மிகப் பெரிய மோசடி நடை​பெற்​றது தெரிந்​தது.

இதுகுறித்து ஐநாக்ஸ் நிறு​வனம் சார்​பில் மும்பை போலீ​ஸில் புகார் அளிக்​கப்​பட்​டது. போலீ​ஸார் நடத்​திய புலன் விசாரணையில் பணம் டெல்​லி​யில் உள்ள வங்கி கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டது தெரிய வந்​தது. இதுகுறித்து டெல்லி போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. அவர்கள் சம்​பந்​தப்​பட்ட வங்​கி​களைத் தொடர்பு கொண்​டு, மோசடி நபர்​களின் வங்​கிக் கணக்​கு​களில் இருந்து யாராவது பணம் எடுக்க வந்​தால் தகவல் தெரிவிக்​கும்​படி கூறினர்.

4 பேர் கைது

டெல்லி ஐடிஎப்சி வங்கி ஜசோலா கிளை​யில் உள்ள வங்​கிக் கிளைக்​குத் தங்​கள் வங்கி கணக்​கில் இருந்து ரூ.8 லட்​சம் பணம் எடுக்க 2 பேர் வந்​தனர். வங்கி அதி​காரி​கள் அளித்த தகவலின்​படி போலீ​ஸார் விரைந்து வந்து அந்த 2 பேரை கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், தங்​கள் வங்கி கணக்குக்கு வரும் பணத்தை எடுத்​துக் கொடுத்​தால் ரூ.30,000 கமிஷன் தரு​வ​தாக சிலர் கூறிய​தால் தங்​கள் வங்கி கணக்கை மர்ம நபர்​களிடம் தெரி​வித்​த​தாக கூறினர். இதுதொடர்​பாக மேலும் 2 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். மோசடிக்கு மூளையாக செயல்​பட்டவரை போலீஸார் தேடி வருகின்றனர்​.