惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
Recent Announcements
Recent Announcements
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
罗磊的独立博客
博客园 - 【当耐特】
H
Help Net Security
腾讯CDC
大猫的无限游戏
大猫的无限游戏
GbyAI
GbyAI
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI
博客园 - 聂微东
Blog — PlanetScale
Blog — PlanetScale
A
About on SuperTechFans
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
P
Proofpoint News Feed
Y
Y Combinator Blog
C
Check Point Blog
博客园 - 司徒正美
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பறக்கும் ரயில் தடத்தை ‘மெட்ரோ’ நிர்வாகத்துடன் இணைக்க ரயில...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: சென்​னை​யில் தெற்கு ரயில்வே​யின் கட்​டுப்​பாட்டில் உள்ள பறக்​கும் ரயில் வழித்​தடத்தை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​துடன் இணைக்க ரயில்வே வாரி​யம் ஜூலை இறு​திக்​குள் ஒப்​புதல் அளிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தெற்கு ரயில்வேயின் கட்​டுப்​பாட்​டின்​கீழ் சென்​னை​யில் பறக்​கும் ரயில் வழித்​தடம் (எம்​ஆர்​டிஎஸ்) கடந்த 1997-ம் ஆண்டு முதல் பயன்​பாட்​டில் இருக்​கிறது. கடற்​கரை - வேளச்​சேரி இடையே 19 கி.மீ. தூரத்துக்கு பறக்​கும் ரயில் சேவை இயங்கி வந்​தது.

பிறகு, வேளச்​சேரி - பரங்​கிமலை வரை நீட்​டிப்பு செய்​யப்​பட்​டு, இத்​தடம் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் பயன்​பாட்​டுக்கு வந்​தது. தற்​போது பறக்​கும் ரயில் தடத்​தில் மொத்​தம் 24 கி.மீ. தூரத்​துக்கு மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்த ரயில்​களில் தின​மும் சராசரி​யாக 90 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணிக்​கின்​றனர். இதற்​கிடையே, பறக்​கும் ரயில் திட்​டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​தது.

இந்த திட்​டத்​துக்கு ரயில்வே வாரி​யம் கடந்த 2025 ஜூலை 31-ம் தேதி கொள்கை அளவில் முதல்​கட்ட ஒப்​புதலை வழங்​கியது. ஆனால், அடுத்த கட்ட செயல்​முறை மற்​றும் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், பறக்​கும் ரயில் தடத்தை மெட்ரோ ரயில் நிறு​வனத்​துடன் இணைக்க, ரயில்வே வாரி​யம் 6 வாரங்​களுக்​குள் ஒப்​புதல் அளிக்​கும் என்று கூறப்​படு​கிறது. ‘இதுகுறித்த கூட்டு முன்​மொழிவு சமீபத்​தில் வாரி​யத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இனி தாமதம் ஏதும் இருக்​காது. ஜூலை இறு​திக்​குள் ஒப்​புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என்று தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. ஒப்​புதல் கிடைத்த பிறகு, தெற்கு ரயில்வே - மாநில அரசு இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்.

இது, நிர்​வாகத்தை முழு​மை​யாக கையகப்​படுத்​த​வும், அடுத்​தடுத்த மாதங்​களில் உள்​கட்​டமைப்​பு​களில் படிப்​படி​யான மாற்​றங்​களைச் செய்​ய​வும் வழி​வகுக்​கும்.

இத்​திட்​டத்​தின் மதிப்​பீட்டு செலவு தற்​போது சுமார் ரூ.4,500 கோடி​யாக உள்ள நிலை​யில், புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாவதற்கு முன்​பாகவே அதற்​கான நிதி​யைத் திரட்​டு​வது குறித்து மாநில அரசு பல்​வேறு வழிகளை பரிசீலித்து வரு​கிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறும்​போது, “கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கும் பணி 2 மாதங்​களுக்​குள் முடிவடை​யும் என எதிர்​பார்க்​கிறோம். மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்ட பின்​னர் இந்த வழித்​தடம் அடியோடு மாற்​றப்பட உள்​ளது’’ என்​றனர்.