惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
D
Docker
IT之家
IT之家
博客园_首页
罗磊的独立博客
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
美团技术团队
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
GbyAI
GbyAI
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - Franky
Martin Fowler
Martin Fowler
Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
月光博客
月光博客
G
Google Developers Blog
B
Blog
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்
2026-05-14 · via hindutamil

உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்ரா கார்க்.

Updated on

2 min read

சென்னை: தமிழக காவல் துறை​யின் உளவுத்​துறை ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டு, தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ராக கடந்த 10-ம் தேதி பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

இதையடுத்து ஐஏஎஸ் அதி​காரி​கள் மட்​டத்​தில் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. குறிப்​பாக 4 ஐஏஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டனர். இதன் தொடர்ச்​சி​யாக ஐபிஎஸ் அதி​காரி​கள் மட்​டத்​தி​லும் மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன.

முதல் கட்​ட​மாக, காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி.​யாக இருந்த அஸ்ரா கார்க் உளவுத்​துறை ஐ.ஜி.​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இதற்​கான உத்​தரவை உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்​தார்.

முன்​ன​தாக தமிழகத்​தில் தேர்​தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு உளவுத்​துறை ஐஜி.யாக அவி​னாஷ் குமார் நியமனம் செய்​யப்​பட்​டிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. நேர்மை மற்​றும் கண்​டிப்​புக்கு பெயர் பெற்ற அஸ்ரா கார்க், பஞ்​சாப் மாநிலம் பாட்​டி​யாலா​வைச் சேர்ந்​தவர்.

2004-ல் நேரடி ஐபிஎஸ் ஆக தேர்​வான இவர் தமிழகப் பிரிவு அதி​காரி​யாக பணி​யமர்த்​தப்​பட்​டார். பி.இ. பட்​டம் பெற்​றுள்ள அஸ்ரா கார்க் தமிழ், பஞ்​சாபி, இந்​தி, ஆங்​கிலத்​தில் சரள​மாக பேசக்​கூடிய​வர்.

வேலூர் மாவட்​டம் திருப்​பத்​தூரில் உதவி எஸ்​.பி.யாக பணி​யைத் தொடங்கி நெல்​லை, மதுரை, தரு​மபுரி மாவட்ட எஸ்​பி​யாக பணி​யாற்றி மக்​களுக்கு ஆதர​வாக பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்​டார். பின்​னர் பதவி உயர்வு பெற்று டெல்லி சிபிஐயில் பணி​யாற்​றி​னார்.

அதைத் தொடர்ந்து மீண்​டும் தமிழகம் திரும்​பிய அவர் தென்​மண்டல ஐ.ஜி.​யாக நியமிக்​கப்​பட்​டார். பின்​னர் வட சென்னை காவல் கூடு​தல் ஆணை​ய​ராகப் பணி​யாற்​றி​னார்.

அதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி.​யாக பணி​யாற்​றிய நிலை​யில் தற்​போது உளவுத்​துறை ஐ.ஜி. ஆகி​யுள்​ளார். தென் மண்டல ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் பணி​யாற்​றிய​போது போதைப் பொருள் உற்​பத்தி மற்​றும் சட்ட விரோதக் கடத்​தலை ஒழிப்​ப​தில் தீவிரம் காட்​டி​னார்.

இந்த சீரிய பணியை அங்​கீகரித்து தமிழக அரசு 2023-ம் ஆண்டு சுதந்​திர தின விழா​வில் அவருக்கு சிறப்​புப் பதக்​கம் வழங்கி கவுர​வித்​தது. கரூரில் விஜய் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில், அதுபற்றி விசா​ரிக்க அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

ஆனால் நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ராக சிபிஐ விசா​ரணை​யைக் கோரியது தவெக. தற்​போது தவெக அரசு பதவி​யேற்ற நிலை​யில் அஸ்ரா கார்க் உளவுத்​துறை ஐ.ஜி.​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்பு உளவுத்​துறை கூடு​தல் டிஜிபியாக டேவிட்​சன் தேவாசீர்​வாதம், ஐ.ஜி.யாக செந்​தில்​வேலன் நீண்ட காலம் பணி​யாற்​றினர். இவர்​களு​டன் டிஐஜி, எஸ்​.பி.க்​களும் பணி​யாற்​றினர்.

தேர்​தல் நெருங்​கிய நேரத்​தில் டேவிட்​சன் தேவாசீர்​வாதம் மாற்​றப்​பட்டு முழுப் பொறுப்​பை​யும், பிற அதி​காரி​களு​டன் ஐஜி செந்​தில்​வேலன் கவனித்​தார். இதையடுத்​து, இப்​பிரிவுக்கு டிஜிபியாக பால​நாகதேவி சமீபத்​தில் நியமிக்​கப்​பட்டு பணி​யில் உள்​ளார்.

தேர்​தல் அறி​விப்பு வெளி​யான பின்​னர் செந்​தில்​வேலன் மாற்​றப்​பட்டு ஐ.ஜி.யாக அவி​னாஷ் குமாரை தேர்​தல் ஆணை​யம் நியமித்​தது. இந்​நிலை​யில்​தான் அவி​னாஷ் குமார்​ மாற்றப்பட்டு அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.