
























Updated on:
சென்னை: ‘ஈரம் காயாத கையால் நெரிபட்டு மரணித்தது அரசியல் நெறி மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரிகமும் தான்’ என்று காங்கிரஸை திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஆ.ராசா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரிக’மும் தான். வாழ்க ஜனநாயகம்’ எனத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தவெகவுக்கு, மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியிருந்தார். இதனையடுத்து திமுகவுடனான உறவை முறித்துக்கொண்ட காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு கிடைத்துள்ளது.
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதால், திமுக தரப்பு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இதற்கு தவெகவும் பதிலளித்து வருகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。