惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
The Cloudflare Blog
IT之家
IT之家
V
V2EX
雷峰网
雷峰网
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
S
SegmentFault 最新的问题
GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
博客园 - 叶小钗
Blog — PlanetScale
Blog — PlanetScale
C
Check Point Blog
A
About on SuperTechFans
B
Blog
月光博客
月光博客
宝玉的分享
宝玉的分享
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மீடியம் லாங் ஷாட்: முழுமைக்கும் நெருக்கத்துக்கும் இடைப்பட...
2026-04-29 · via hindutamil
சி.ஜெ.ராஜ்குமார்

Updated on

3 min read

சினி​மா​வில் ஒரு கதா​பாத்​திரத்தை எவ்​வளவு தூரத்​தில் காட்​டு​கிறோம் என்​பது அந்த கதா​பாத்​திரத்​துக்​கும் பார்​வை​யாள​ருக்​கும் இடையி​லான உறவைத் தீர்​மானிக்​கிறது.

‘லாங் ஷாட்’ என்​பது ஒரு நிலப்​பரப்பை விவரிக்​கிறது; ‘மீடியம் ஷாட்’ என்​பது உணர்ச்​சிகளைவிவரிக்​கிறது. இவை இரண்​டுக்​கும் இடைப்​பட்ட மிக முக்​கிய​மான புள்​ளி​தான் மீடி​யம் லாங் ஷாட் -எம்​எல்​எஸ் (Medium Long Shot - MLS).

ஒரு கதா​பாத்​திரத்​தின் தலை​யி​லிருந்து முழங்​கால் வரை (3/4th of the body) காட்​டும் இந்த ஷாட், ‘ஃபுல் ஷாட்’ போலக் கால்​களை​யும் தரையை​யும்முழு​மை​யாகக் காட்​டா​மல் தவிப்​பதே இதன் தனிச்​சிறப்​பு.

ஏன் மீடி​யம் லாங் ஷாட் முக்​கிய​மானது?

ஒளிப்​ப​தி​வில் ஓர் உரு​வத்தை வடிவ​மைக்​கும்​போது (காம்​போசிஷன்), தேவையற்ற இடைவெளி​களைத் தவிர்ப்​பது அவசி​யம். கவனம்: ‘ஃபுல் ஷாட்’ வைக்​கும்​போது தரை​யின் பரப்பு அதி​க​மாகத் தெரி​யும்.

இது பார்​வை​யாளரின் கவனத்​தைச் சிதறடிக்​கக்​கூடும். ஆனால் எம்​எல்​எஸ்​-ல் முழங்​காலுக்​குக் கீழ் உள்ள பகு​தி​களைத் தவிர்ப்​ப​தன் மூலம், கதா ​பாத்​திரத்​தின் முக​பாவனை​களும் உடல் மொழி​யும் இன்​னும் தெளி​வாகத் தெரி​யும்.

சுற்​றுச்​சூழல் : இது ஒரு ‘மீடி​யம் ஷாட்’ போல மிக​வும் நெருக்​க​மாக​வும் இருக்​காது. கதா​பாத்​திரத்​தைச் சுற்​றி​யுள்ள நிலப்​பரப்​பு, பின்​னணி மற்​றும் சூழல் ஆகிய​வற்றை இது ஓர் அகன்ற கோணத்​தில் உள்​வாங்​கிக்கொள்​ளும்.

ரோஜர் டீக்​கின்​ஸின் விருப்​ப​மான கோணம்

உலகின் மிகச்​சிறந்த ஒளிப்​ப​தி​வாளர்​களில் ஒரு​வ​ரான ரோஜர் டீக்​கின்​ஸ், நீண்ட தூரக் காட்​சிகளை விட, மீடி​யம் லாங் ஷாட்​களையே அதி​கம் விரும்​பு​கிறார். அவரது கூற்​றுப்​படி, ஒரு நிலப்​பரப்பு எவ்​வளவு பிரம்​மாண்​ட​மாக இருந்​தா​லும், அதில் மனிதனின் உணர்ச்சி கலந்து இருக்க வேண்​டும்.

‘1917’ அல்​லது ‘பிளேடு ரன்​னர் 2049’ போன்ற படங்​களில் அவர் கதா​பாத்​திரங்​களை எம்​எல்​எஸ்​-ல் வைப்​ப​தன் மூலம், அவர்​கள் அந்​தப் பிரம்​மாண்​ட​மான உலகில் எவ்​வளவு சிறிய​வர்​கள் என்​ப​தை​யும், அதே நேரத்​தில் அவர்​களின் மனப்​போ​ராட்​டம் என்ன என்​ப​தை​யும் ஒரே சட்​டகத்​தில் கொண்டு வரு​வார். இது கதா​பாத்​திரத்தை அந்​தச் சூழலோடு ‘ஒட்​ட​வைக்​கும்’ ஒரு நுட்​பம்.

‘கவு​பாய்’ படங்​கள் மற்​றும் ‘பிளான் அமெரிக்​கன்’

மீடி​யம் லாங் ஷாட்​டுக்கு உலக சினி​மா​வில் மற்​றொரு பெயர் உண்டு - ‘பிளான் அமெரிக்​கன்’. இது 1940களில் அமெரிக்க ‘வெஸ்​டர்ன்’ அல்​லது கவு​பாய் படங்​களில் உரு​வானது.

‘எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்​ஸ்’, ‘த குட்,த பேட் அண்ட் த அக்​லி’:

கவு​பாய் வீரர்​களின் இடுப்​பில் இருக்​கும் துப்​பாக்கி (Holster) தெளி​வாகத் தெரிய வேண்​டும் என்​ப​தற்​காக முழங்​கால் வரை காட்​டும் இந்த எம்​எல்​எஸ் கோணத்​தைப் பயன்​படுத்​தி​னார் இயக்​குநர் செர்​ஜியோ லியோன்.

வீரர்​களின் முகம் மற்​றும் அவர்​களின் துப்​பாக்கி எடுக்​கும் வேகம் ஆகிய இரண்​டை​யும் ஒரே நேரத்​தில் காட்ட இதுவே சிறந்த வழி​யாக இருந்​தது.

பார்​வை​களின் போர்

இரு வீரர்​கள் நேருக்கு நேர் மோதிக்​கொள்​ளும் அந்​தப் புகழ்​பெற்ற புரொஃபைல் ஷாட்​களுக்கு முன்​ன​தாக, அவர்​கள் நிற்​கும் அந்​தத் தோரணையை (Stance) விவரிக்க எம்​எல்​எஸ் பயன்​படுத்​தப்​பட்​டது.

<div class="paragraphs"><p>ரோஜர் டீக்​கின்ஸ்</p></div>

ரோஜர் டீக்​கின்ஸ்

ஜேம்ஸ் பாண்ட் மற்​றும் ‘ஸ்​கைஃ​பால்’

நவீன சினி​மா​வில், ஜேம்ஸ் பாண்ட் படமான ‘ஸ்​கைஃ​பாலி’ல் ரோஜர் டீக்​கின்ஸ் இந்த எம்​எல்​எஸ் நுட்​பத்தை ஒரு கலை​யாக மாற்​றி​யிருப்​பார். பாண்ட் ஒரு கட்​டிடத்​தின் உச்​சி​யில் நிற்​கும்​போதோ அல்​லது ஒரு பிரம்​மாண்​ட​மான மாளி​கைக்கு முன்​னால் வரும்​போதோ, அவர் எம்​எல்​எஸ்​-ல் காட்​டப்​படு​வார்.

இது பாண்​டின் கம்​பீர​மான ‘சூட்’ மற்​றும் அவரது உடல் அமைப்​பைச் சிதைக்​காமல் காட்​டு​வதுடன், அந்த இடத்​தின் பிரம்​மாண்​டத்​தை​யும் சேர்த்​துப் பிர​திபலிக்​கும். இது ஒரு கதா​பாத்​திரத்தை “ஹீரோ​வாக” நிலைநிறுத்த உதவும் மிகச்​சிறந்த கரு​வி.

லுக் ரூம், நெகட்​டிவ் ஸ்பேஸ் மற்​றும்

எம்​எல்​எஸ் மீடி​யம் லாங் ஷாட்டை அமைக்​கும்​போது கவனிக்க வேண்​டிய அம்​சங்​கள்: நெகட்​டிவ் ஸ்பேஸ் -ஒரு கதா​பாத்​திரத்​தைச் சுற்றி அதிக நெகட்​டிவ் ஸ்பேஸ் விட்டு எம்​எல்​எஸ் வைக்​கும்​போது, அவர்​கள் அந்​தப் பெரிய உலகில் எவ்​வளவு தனிமை​யாக இருக்​கிறார்​கள் என்ற ‘தனிமை’ உணர்வை உரு​வாக்​கும்.

லுக் ரூம் -கதா​பாத்​திரம் ஒரு திசையை நோக்கி நகரும்​போது, எம்​எல்​எஸ்​-ல் அவருக்கு முன்​னால் அதிக இடைவெளி விடு​வது, அவர் ஒரு நீண்ட பயணத்​தைத் தொடங்​கு​கிறார் என்​பதை உணர்த்தும்.

கதைசொல்​லலில் இதன் பயன்​கள்

ஒளிப்​ப​தி​வாளர்​கள் எம்​எல்​எஸ்​-ஐப் பயன்​படுத்​தும் சில முக்​கியக் காரணங்​கள்:

அதி​காரத்​தைக் காட்ட: ஒரு கதா​பாத்​திரம் அறை​யின் மையத்​தில் எம்​எல்​எஸ்​-ல் நிற்​கும்​போது, அந்த அறை​யின் மொத்​தக் கட்​டுப்​பாடும் அவரிடம் இருப்​பதை உணர்த்தலாம்.

பின்​னணித் தகவல்: ஒரு கதா​பாத்​திரம் பேசிக்​கொண்​டிருக்​கும்​போது, அவருக்​குப் பின்​னால் நடக்​கும் மற்ற விஷ​யங்​களை​யும் பார்​வை​யாளனுக்கு உணர்த்த இது உதவும்.

தடையற்ற இயக்​கம்: ஏற்​கெனவே நாம் பார்த்த ‘கட்​டிங் ஆன் ஆக் ஷன்’ செய்​யும்​போது, ஒரு வைட் ஷாட்​டிலிருந்து குளோசப்​புக்​குத் தாவாமல், இடை​யில் எம்​எல்​எஸ்​-ஐப்பயன்​படுத்​து​வது பார்​வை​யாளரின் கண்​களுக்கு இதமாக இருக்​கும்.

ஒளிப்​ப​தி​வாளர்​களுக்​கான நுணுக்​கம் 3/4 த் ரூல்: மீடி​யம் லாங் ஷாட் வைக்​கும்​போது “முழங்​கால் மூட்​டு​களில்” கட் செய்​யக் கூடாது என்​பது அடிப்​படை விதி.

முழங்​காலுக்​குச் சற்று மேலே அல்​லது கீழே கட் செய்​வதே அழகியல் ரீதி​யாகச் சரி​யாக இருக்​கும். இதுவே அந்த கதா​பாத்​திரத்​தின் உரு​வத்​தைச் சிதைக்​காமல் திரை​யில் காட்​டும் ரகசி​யம்.

சினி​மா​வின் முழு​மை​யான ஓவி​யம்

புரொஃபைல் ஷாட்​கள் ரகசி​யங்​களைப் பேசுகின்​றன, ‘ஸ்​மாஷ் கட்’ அதிரடி கொடுக்​கிறது. ஆனால், மீடி​யம் லாங் ஷாட் என்​பது கதை​யின் சூழலை உரு​வாக்​கு​கிறது. கதாபாத்​திரத்தை ஒரு முக​மாக மட்​டும் பார்க்​காமல், அவர் வாழும் உலகின் ஓர் அங்​க​மாகப் பார்க்க வைப்​பதே இந்த ஷாட்​டின் வெற்​றி.

‘ஸ்​கைஃ​பால்’ முதல் ‘வெஸ்​டர்ன்’ படங்​கள் வரை, எம்​எல்​எஸ் என்​பது சினி​மா​வின் வலிமை​யான காட்சி மொழி​யாகத் திகழ்​கிறது. ஒளிப்​ப​தி​வாளர் செதுக்​கும் ஒவ்​வொரு எம்​எல்​எஸ்​-ம் ஒரு முழு​மை​யான ஓவி​யம் போலத் திரை​யில் விரிகிறது.

(புதன்​தோறும் ஒளி​காட்​டுவோம்​)