惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
IT之家
IT之家
博客园 - 聂微东
The Cloudflare Blog
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
H
Help Net Security
博客园 - 叶小钗
V
V2EX
WordPress大学
WordPress大学
J
Java Code Geeks
Hugging Face - Blog
Hugging Face - Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
C
Check Point Blog
B
Blog
D
DataBreaches.Net
美团技术团队
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பின்னலாடை தொழிலாளர்கள், நெசவாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏ...
ஆர்.தர்மலிங்கம் · 2026-04-17 · via hindutamil

Updated on: 

திருப்பூர்: திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது விசைத்தறி நெசவாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்லடம், தெக்கலூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் அதிக அளவில் உள்ளன. அதேபோல, திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் சுமார் 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பார்க்க திரண்ட கூட்டம்: தவெக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவிநாசி அருகே உள்ள ஆட்டையாம் பாளையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை, சாலை வலம் மேற்கொண்டபோது ஆயிரக்கணக்கானோர் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும், பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற பெருமாநல்லூர் நால் ரோட்டில் கூட்டம் நடைபெறுவதற்கு 5 மணி நேரத்துக்கு முன்னதாக இளைஞர்கள் மட்டுமின்றி, கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் காத்திருந்தனர்.

இதன் காரணமாக கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதுடன், பிரச்சாரக் கூட்டம் முடிந்தும் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விஜய்க்கு திரளும் கூட்டத்தால் தவெக கட்சியினர் உற்சாக மடைந்தாலும், மற்றொருபுறம் கூட்டம் நடிகரைப் பார்க்க வருவதாகவும், இது தேர்தலில் வாக்காக மாறாது என்றும் விமர்சனங்கள் உள்ளன.

விஜய் நெசவாளர்கள், பின்ன லாடைத் தொழிலாளர்களைக் குறிவைத்து அதிக அளவிலான வாக்குறுதிகளை அளித்துள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யும் வகையில் அரசுக்குச் சொந்தமான உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.

முக்கிய நகரங்களில் கைத்தறி விற்பனை நிலையங்கள், ஷோரூம்கள் அமைக்கப்படும். நிலையற்ற நூல் விலை, மின்சார நெருக்கடியைப் பகிர்ந்துகொள்ள கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் வங்கிகளின் மூலமாக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் செலுத்தப்படும். கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1,500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.

நெசவாளர்களுக்கு உற்பத்தி செலவைக் குறைக்க அவர்கள் வாங்கும் ரசாயனம், சாயங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் நெருக்கடியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ‘சேப் கிரெடிட் கியாரண்டி பண்ட்’ உருவாக்கப்படும்.

ஜவுளித் துறையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக்ஹவர்ஸ் மின் கட்டணம் நிறுத்திவைக்கப்படும். விரிவான ஆய்வுக்குப் பிறகு மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த, உலக அளவில் போட்டியிடும் வகையில் 35 சதவீத நேரடி மூலதன மானியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கப்படும்.

ஜவுளித் துறையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக்ஹவர்ஸ் மின் கட்டணம் நிறுத்திவைக்கப்படும். விரிவான ஆய்வுக்குப் பிறகு மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த, உலக அளவில் போட்டியிடும் வகையில் 35 சதவீத நேரடி மூலதன மானியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கப்படும்.