





















முக்கோண காதல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம், ‘சைக்கிள் கேப்’. டியூப் லைட் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நவாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷெர்ரி அகர்வால், பிரபு சாஸ்தா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள இப்படத்துக்கு சாலமன் போஸ் டி.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் பத்ம நாபன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குநர் எம்.ஆர்.பாரதி கூறும்போது, “உறவுகளை மையப்படுத்திய கதைதான் இந்தப் படம். இதில் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுகளுக்கு இசை, பாலமாக இருக்கும். நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப் பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。