惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
U
Unit 42
GbyAI
GbyAI
M
MIT News - Artificial intelligence
美团技术团队
罗磊的独立博客
雷峰网
雷峰网
量子位
博客园 - 【当耐特】
Last Week in AI
Last Week in AI
D
Docker
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学
V
V2EX
博客园_首页
腾讯CDC
The Cloudflare Blog
A
About on SuperTechFans
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எ...
2026-05-03 · via hindutamil

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸார். படம்: ர.செல்வமுத்துகுமார்

Updated on

2 min read

சென்னை: தமிழகம், புதுச்​சேரி உள்​ளிட்ட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை நாளை நடை​பெறுகிறது. தமிழகத்​தில் பாது​காப்​புக்கு 1 லட்​சம் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகம் உள்​ளிட்ட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யிட்​டது. அதன்​படி, புதுச்​சேரி, கேரளா, அசாமில் கடந்த ஏப்​.9-ம் தேதி​யும், தமிழகத்​தில் கடந்த ஏப்​.23-ம் தேதி​யும் ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடந்​தது. மேற்கு வங்​கத்​தில் ஏப்​.23, 29 ஆகிய தேதி​களி்ல் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. அங்கு 2-ம் கட்ட தேர்​தலில் முறை​கேடு புகார்​கள் எழுந்​த​தால், 15 வாக்​குச்​சாவடிகளில் நேற்று மறு வாக்​குப்​ப​திவு நடத்​தப்​பட்​டது.

இதே​போல, கோவா, குஜ​ராத், கர்​நாட​கா, மகா​ராஷ்டி​ரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 6 மாநிலங்​களில் காலி​யாக உள்ள பேர​வைத் தொகு​தி​களுக்கு ஏப்​.9, 23 ஆகிய தேதி​களில் இடைத் தேர்​தல் நடத்தப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தைப் பொருத்​தவரை, மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டுள்​ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். இதன்மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு நடந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் அனைத்​தும் சீலிடப்​பட்​டு, தமிழகம் முழு​வதும் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள 62 மையங்​களில் பாது​காப்பு அறை​களில் (‘ஸ்​டி​ராங் ரூம்’) வைக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு 4 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மற்​றும் இடைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது. இதற்​கான பாது​காப்பு ஏற்​பாடு​கள் தொடர்​பாக 5 மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களு​டன் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் நேற்று இணைய வழி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார்.

தமிழகத்​தில் செய்​யப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் விளக்​கி​னார். ‘‘தமிழகத்​தில் 62 மையங்​களில் 65 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் பாது​காப்பு பணி​யில் ஈடுபட உள்​ளனர். 18 ஆயிரம் போலீ​ஸாரும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். மாநிலம் முழு​வதும் சட்​டம் - ஒழுங்​கைப் பாது​காக்க சுமார் 1 லட்​சம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். தொகு​திக்கு ஒரு வாக்கு எண்​ணிக்கை பார்​வை​யாளர் என 234 பார்​வை​யாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்’’ என்று அவர் தெரி​வித்​தார்.

முழு அமை​தி, பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யில், தமிழகம் முழு​வதும் நாளை மதுக்​கடைகளை மூட​வும் அவர் உத்​தர​விட்​டுள்​ளார். தமிழகத்​தில் வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் 62 மையங்​களில் செய்​யப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​கள், குடிநீர், கழி​வறை, ஒளி, ஒலி வசதிகள், மின் இணைப்பு தொடர்​பாக மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள், தேர்​தல் நடத்தும் அலு​வலர்​கள் நேற்று ஆய்வு செய்​தனர்.

மேற்கு வங்​கத்​தில் வாக்கு எண்​ணிக்கை பாது​காப்​பாக, அமை​தி​யாக, வெளிப்​படை​யான சூழலில் நடை​பெறு​வதை உறுதி செய்ய 165 கூடு​தல் வாக்கு எண்​ணிக்கை பார்​வை​யாளர்​கள், 77 காவல் பார்​வை​யாளர்​களை தேர்​தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது. தமிழகத்​துக்கு அவ்​வாறு நியமிக்​கப்​பட​வில்​லை என தலை​மைத்​ தேர்​தல்​ அதி​காரி அலு​வல​கம்​ தெரிவித்​துள்​ளது.