
























இந்த அதிரடி நடவடிக்கை குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், "போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்குத் தெளிவான மற்றும் உறுதியான எச்சரிக்கையை விடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை இது உணர்த்தும்" என்று தெரிவித்தனர்.
போலீஸாரின் இந்த ‘புல்டோசர்' நடவடிக்கைக்கு ஜம்மு- காஷ்மீர் மாநில சுகாதார துறை அமைச்சர் சகினா இட்டூ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், நீதிமன்ற விசாரணை இன்றி வீடுகளை இடிப்பது சட்டத்திற்குப் புறம்பானது. போதைப் பொருள் கடத்தல் காரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, அவர்களது குடும்பத்தினர் வசிக்கும் வீடுகளை இடிப்பது முறையான செயல் அல்ல" என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。