惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
U
Unit 42
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
有赞技术团队
有赞技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
爱范儿
爱范儿
博客园 - 司徒正美
Vercel News
Vercel News
I
InfoQ
GbyAI
GbyAI
C
Check Point Blog
B
Blog RSS Feed
Martin Fowler
Martin Fowler
B
Blog
MyScale Blog
MyScale Blog
腾讯CDC
博客园 - Franky
Blog — PlanetScale
Blog — PlanetScale
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Hugging Face - Blog
Hugging Face - Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஐபிஎல் தொடர் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக மாறிவிட்டது: சொல்க...
2026-05-22 · via hindutamil

Updated on

2 min read

கொல்​கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்​தி​யன்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 147 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கார்​பின் போஷ் 32, கேப்​டன் ஹர்​திக் பாண்​டியா 26, திலக் வர்மா 20, சூர்​யகு​மார் யாதவ் 15, ரோஹித் சர்மா 15 ரன்​கள் சேர்த்​தனர்.

148 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 148 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. மணிஷ் பாண்டே 45, ரோவ்​மன் பவல் 40 ரன்​கள் சேர்த்து அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர்.

கொல்​கத்தா அணிக்கு இது 6-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 6 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 13 புள்​ளி​களை பெற்று 6-வது இடத்​துக்கு முன்​னேறி உள்ளது.

அதேவேளை​யில் ஏற்​கெனவே பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்ட மும்பை அணிக்கு இது 9-வது தோல்​வி​யாக அமைந்​தது. 13 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 வெற்​றி, 9 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது.

கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் மும்பை அணி​யின் கேப்டன ஹர்​திக் பாண்​டியா கூறிய​தாவது: பேட்​டிங் குழு​வாக, நாங்​கள் 20 ரன்​கள் குறை​வாக எடுத்​து​விட்​டோம். பவர்​பிளே​யில் அதிக விக்​கெட்​டு​களை இழந்​து​விட்​டோம். திலக் வர்​மா​வும், நானும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளை​யாடி​யிருந்​தா​லும், மேலும் சில பார்ட்​னர்​ஷிப்​களை அமைத்​திருந்​தா​லும் 15-20 ரன்​களை கூடுதலாக எடுத்​திருக்க முடி​யும். இது நிகழ்ந்​திருந்​தால் எங்​களுக்கு வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பு இருந்​திருக்​கும்.

இந்த சீசன் முழு​வதும், நாங்​கள் ஃபீல்​டிங்​கில் மிக​வும் மோச​மாகவே செயல்​பட்​டுள்​ளோம். நாங்​கள் நிறைய கேட்​ச்களைக் கோட்டை விட்​டுள்​ளோம், இதை நிச்​சய​மாக யாரும் வேண்​டுமென்றே செய்ய விரும்​புவ​தில்​லை. ஆனால், ஆட்​டத்​தின் அந்​தப் பகு​தி​யில் இருந்து தப்​பித்து ஓட முடி​யாது. வெற்றி பெற வேண்​டும் என்​றால், கிடைக்​கும் வாய்ப்​பு​களை பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

கடின​மான கேட்​ச்களாக இருந்​தா​லும் கூட பிடித்​தாக வேண்​டும். ஆட்​டத்​தின் போக்​கையே மாற்​றக்​கூடிய கேட்​ச்களை தவற​விட்​டால் எப்​போதும் போட்​டி​யில் பின்​தங்​கியே இருக்க நேரிடும். மேலும் போட்​டி​யில் போராட வேண்​டிய நிலைக்​குத் தள்​ளப்​படு​வோம்.

பந்​து​வீச்​சாளர்​களுக்கு சாதக​மாக இருக்​கும் இது​போன்ற ஆடு​களத்​தில் விளை​யாடு​வதை நான் பொருட்​படுத்​து​வ​தில்​லை. ஏனெனில் ஐபிஎல் தொடர் முற்​றி​லும் பேட்​டிங்​கிற்கு சாதக​மான ஒன்​றாக மாறி வரு​கிறது. இதனால் பந்​து​வீச்​சாளர்​கள் தங்​களால் அணிக்கு உதவ முடிய​வில்​லை என உணர்​கிறார்​கள்​. இவ்​வாறு ஹர்​தி​க் பாண்டியா கூறினார்.

அபராதம் விதிப்பு: இந்த ஆட்​டத்​தின் 2-வது இன்​னிங்​ஸின்போது 10-வது ஓவரை மும்பை அணி​யின் கேப்​டன் ஹர்​திக் பாண்​டியா வீசி​னார்.

அப்​போது 4-வது பந்தை வீசுவதற்​காக தனது பகு​திக்கு சென்று கொண்​டிருந்தபோது ஸ்டெம்​பின் மேலிருந்த பெயில்​ஸ்​களை தட்​டி​விட்​டார். இது ஐபிஎல் நன்​னடத்தை விதி 2.2-ன்​படி குற்​ற​மாகும். இதனால் ஹர்​திக் பாண்​டி​யா​வுக்கு ஒரு தகுதி இழப்​புப் புள்​ளி​யும் போட்​டி​யின் ஊதி​யத்​தில் இருந்து 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.