惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
Jina AI
Jina AI
雷峰网
雷峰网
有赞技术团队
有赞技术团队
WordPress大学
WordPress大学
美团技术团队
V
V2EX
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
小众软件
小众软件
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
宝玉的分享
宝玉的分享
Last Week in AI
Last Week in AI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
量子位
IT之家
IT之家
人人都是产品经理
人人都是产品经理
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வினாத்தாள் கசிவு மோசடியில் கைதானவர் குடும்பத்தை சேர்ந்த 5...
2026-05-18 · via hindutamil

Updated on

3 min read

ஜெய்ப்பூர்: 2025-ம் ஆண்டு நடை​பெற்ற நீட் தேர்​வில் ஜெய்ப்​பூர் நகரிலுள்ள ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்​றுள்ள தகவல் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இவர்​கள்​தான் இந்த ஆண்டு நீட் வினாத்​தாளை கசிய விட்​டது தொடர்​பாக கைது செய்யப்பட்டவர்​கள் என்று போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் உள்​ளிட்ட மருத்​து​வப் படிப்​பு​களில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்​தேர்வு அவசி​யம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) ஒவ்​வொரு ஆண்​டும் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் கடந்த மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​த​தால் அந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்டு மறு தேர்வு தேதி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், நீட் மறுத்​தேர்​வுக்கு மாணவர்​கள் புதி​தாக விண்​ணப்​பிக்க தேவை​யில்லை என்​றும் விளக்​கம் அளிக்கப்​பட்​டுள்​ளது.

மறு​தேர்​வுக்​கான புதிய ஹால் டிக்​கெட் மற்றும் தேர்வு மையங்​கள் குறித்த விவரங்​கள் விரை​வில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக விரிவான விசா​ரணை நடத்த மத்​திய அரசு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சிபிஐ முதல் தகவல் அறிக்​கையை பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது. இதில் கேரளா, மகா​ராஷ்டிர மருத்​துவ மாணவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். மேலும், விசாரணைக்​காகச் சிறப்​புப் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இதனிடையே, நீட் வினாத்​தாள் கசிவு வழக்​கின் பின்​னணி ஒவ்வொன்​றாக வெளியே வந்து கொண்​டிருக்​கின்​றன. ராஜஸ்தானின் ஜம்வா ராம்​கரைச் சேர்ந்த சகோ​தரர்​களான மங்கிலால் மற்​றும் தினேஷ் பிவால் ஆகியோர், இந்த ஆண்டுக்கான நீட்​-​யுஜி வினாத் தாளை குரு​கி​ராம் மருத்​து​வர் ஒருவரிட​மிருந்து கடந்த ஏப்​ரல் 26ம் தேதி ரூ.30 லட்​சத்​துக்கு வாங்கியது தெரிய​வந்​துள்​ளது. இவர்​களில் ஒரு​வர், சிகார் பகுதியில் நீட் தேர்​வுக்​குத் தயா​ராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்​தாளைக் கொடுத்​துள்​ளார்.

பின்​னர் ஏப்​ரல் 29-ம் தேதி அவர்​கள் அந்​தத் தாளை பலருக்கு விற்றுள்​ளனர். ஜெய்ப்​பூர் அருகே உள்ள ‘சி​கார்' பகு​தி, இந்த வினாத்​தாள் கசிவு மோசடி​யின் மையப்​புள்​ளி​யாக மாறி​யுள்​ளது. சிகாரில் உள்ள எம்​பிபிஎஸ் ஆலோ​சனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்​ட​வாரியா என்​பவர் அந்​தத் தாளை வாங்​கி, கேரளாவில் எம்​பிபிஎஸ் பயிலும் சிகார் மாணவர் ஒரு​வருக்கு ரூ.30,000-க்கு விற்​றுள்​ளார். மேலும், அந்த மாணவர் தேர்​வுக்கு முந்தைய நாள் தனது தந்​தைக்கு (சி​காரில் விடுதி நடத்​துபவர்) அந்​தத் தாளை அனுப்​பி​யுள்​ளார். அவர் தனது விடு​தி​யில் தங்கியிருந்த மாணவி​களுக்கு அதனைப் பகிர்ந்​துள்​ளார். இந்த வழக்​கின் முக்​கிய நபராக குரு​கி​ராம் மருத்​து​வர் கருதப்படுகிறார்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​களில் ஒரு​வ​ரான தினேஷ் பிவாலுக்கு ஓர் அரசி​யல் கட்​சி​யுடன் தொடர்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதனிடையே கடந்த 2025-ம் ஆண்​டில் ராஜஸ்​தானின் மங்​கிலால் மற்​றும் தினேஷ் பிவால் குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்​வில் வெற்றி பெற்​றுள்ள தகவலும் அம்​பல​மாகி​யுள்​ளது. மேலும் இவர்கள் 5 பேரும் பிரபல​மான மருத்​து​வக் கல்​லூரி​களில் சேர்ந்து படித்து வரு​கின்​றனர்.

இதுதொடர்​பாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பர் 6-ம் தேதி ஃபேஸ்புக் சமூக வலை​தளத்​தில் ஒரு தகவலை தினேஷ் பிவால் பதிவு செய்​துள்​ளார். அதில் ‘‘எங்​கள் குடும்​பத்​தைச் சேர்ந்த ஐந்து பேர், அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் (எம்​பிபிஎஸ்) பயிலத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டிருப்​பது, எங்​கள் குடும்​பத்​துக்​குப் பெரு​மைக்​குரிய ஒரு விஷய​மாகும். அந்த பிள்​ளை​கள் அனை​வருக்​கும் ஒரு பொன்னான எதிர்​காலம் அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்’’ என்று தினேஷ் பிவால் பதிவு செய்​துள்​ளார்.

ஓராண்டு கழிந்​துள்ள நிலை​யில் தற்​போது வினாத்​தாள் கசிவு வழக்​கில் தினேஷ் பிவால் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். அவருடன் மங்​கிலால், மங்​கிலாலின் மகன் விகாஸ் ஆகியோ​ரும் போலீ​ஸின் பிடி​யில் சிக்​கி​யுள்​ளனர். மங்​கிலால் மகன் விகாஸ், நீட் தேர்​வில் 85.11 சதவீத மதிப்​பெண் பெற்று சவாய் மாதோப்​பூர் மருத்​து​வக் கல்​லூரி​யில் சேர்ந்​துள்​ளார். அவர் 2024 நீட் தேர்​வில் 720 மதிப்பெண்​களுக்கு வெறும் 270 மதிப்​பெண் மட்​டுமே பெற்றிருந்தார்.

அதே​போல் மங்​கிலாலின் மகள் பிரக​தி, டவுசா மருத்​து​வக் கல்லூரி​யில் 2025-ல் சேர்ந்​துள்​ளார். நீட் தேர்​வில் அவர் 89.08 சதவீத மதிப்​பெண் பெற்​றார். ஆனால் இவர் 2024 நீட் தேர்​வில் 332 மதிப்​பெண் மட்​டுமே பெற்​றிருந்​தார். 2024 நீட் தேர்​வில் தினேஷ் பிவாலின் மகள் கன்​ஜன் 355 மதிப்​பெண்​கள் மட்​டுமே பெற்ற நிலை​யில், 2025 தேர்​வில் அதிக மதிப்​பெண் பெற்று வாராணசியிலுள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் படிப்​பில் சேர்ந்​துள்​ளார்.

பிவால் குடும்​பத்​தைச் சேர்ந்த மற்​றொரு சகோ​தர​ரான கன்ஷியாமின் மகள் சானி​யா, 2025 நீட் தேர்​வில் 94.07 சதவீத மதிப்​பெண் பெற்று மும்பை அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் சேர்ந்துள்​ளார். கன்​ஷி​யாமின் மற்​றொரு மகள் பாலக், 2025 நீட் தேர்​வில் 98.61 சதவீத மதிப்​பெண் பெற்று ஜெய்ப்​பூர் அரசு மருத்துவக் கல்​லூரி​யில் சேர்ந்​துள்​ளார். இவர் 2024 நீட் தேர்​வில் 512 மதிப்​பெண்​கள் மட்​டுமே எடுத்​திருந்​தார்.

இவர்​கள் 5 பேருமே முந்​தைய நீட் தேர்​வில் குறைந்த அளவு மதிப்​பெண்​கள் மட்​டுமே எடுத்த நிலை​யில் 2025 நீட் தேர்​வில் அதிக அளவில் மதிப்​பெண்​களைக் குவித்து அனை​வருமே அரசு மருத்துவக் கல்​லூரி​களில் சேர்ந்​துள்​ளனர். தினேஷ் பிவால், மங்கிலால் ஆகியோர் கைதாகி​யுள்ள நிலை​யில், கடந்த ஆண்​டும் நீட் வினாத்​தாள் கசிந்​திருக்​குமா என்​பது குறித்து அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

ஆனால் கடந்த நீட் தேர்​வில் வினாத்​தாள் கசிந்​தது தொடர்​பாக இது​வரை எந்த அதி​காரப்​பூர்வ புகாரும் வரவில்​லை. இந்த விவகாரத்​தில் சிக்​கி​யுள்​ள ​நாசிக்​கைச்​ சேர்​ந்​த ஷுபம்​ கைர்​​னார், புனேவைச்​ சேர்​ந்​த ​யாஷ் ​யாதவ்​ ஆகியோரிடம்​ சிபிஐ அதிகாரிகள்​ தொடர்​ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​. இதில்​ ​யாஷ் யாதவ்​​தான்​, நீட்​ வி​னாத்​​தாளை பி​வால்​, மங்​கிலால்​ குடும்பத்தாருக்​கு கொடுத்​தது தெரியவந்​துள்​ளது.