惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Last Week in AI
Last Week in AI
D
DataBreaches.Net
腾讯CDC
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
A
About on SuperTechFans
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
月光博客
月光博客
MyScale Blog
MyScale Blog
U
Unit 42
Martin Fowler
Martin Fowler
Stack Overflow Blog
Stack Overflow Blog
T
Tailwind CSS Blog
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
G
Google Developers Blog
博客园 - 【当耐特】
D
Docker
I
InfoQ
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்த...
செய்திப்பிரிவு · 2026-06-02 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழ்​நாடு டாக்​டர் எம்ஜிஆர் பல்​கலைக்​கழகத்​தின் பொறுப்பு துணைவேந்​த​ராக எஸ்​.புஷ்கலா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். சென்​னை, கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் பல்​கலைக்​கழகம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது.

இப்​பல்​கலைக்​கழகத்​தின் 11-வது துணைவேந்​த​ராக மருத்​து​வர் கே.​நா​ராயண​சாமி கடந்த 2023-ம் ஆண்டு தமிழக ஆளுந​ரால் நியமிக்​கப்​பட்​டார். துணைவேந்​தரின் பதவிக் காலம் 3 ஆண்​டு​கள் ஆகும்.

இந்​நிலை​யில், நாராயண​சாமி​யின் பதவிக் காலம் கடந்த மே 31-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. இதையடுத்​து, பல்​கலைக்​கழகத்​தின் நோய் எதிர்ப்​பியல் துறைத் தலை​வர் மருத்​து​வர் எஸ்​.புஷ்கலாவை பொறுப்பு துணைவேந்​த​ராக செயல்பட மருத்​துவ பல்​கலைக் கழக ஆட்​சி மன்​றக்​குழு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

அதன்​படி, நேற்று அந்த பொறுப்பை அவர் ஏற்​றுக்கொண்​டார். புதிய துணைவேந்​தரை தேர்வு செய்ய அரசு தரப்​பில் தற்​போது தெரிவுக் குழு அமைக்​கப்பட வேண்​டும்.

அக்​குழு​வின் ஒருங்​கிணைப்​பாளரை அரசே நியமிக்க வேண்​டும். அதில், உறுப்​பினர்​களாக செயல்​பட, பல்​கலைக்​கழக ஆட்​சிமன்​றக் குழு சார்​பில், முன்​னாள் துணை வேந்​தர் மருத்​து​வர் சாந்​த​ராமன் முன்​மொழியப்​பட்​டுள்​ளார்.

செனட் குழு சார்​பில், நரம்​பியல் மருத்​து​வர் டாக்டர் கே.செல்​வகு​மார் உறுப்​பின​ராக உள்​ளார். அரசு சார்​பில் ஒருங்​கிணைப்​பாளர் நியமிக்​கப்​பட்​டதும், அக்​குழு​வினர், தகு​தி​யானவர்​களிடம் விண்​ணப்​பங்​களை பெற்று பரிசீலனை செய்​வார்​கள்.

குறைந்​த​பட்​சம் 3 பேரை பரிந்​துரை செய்து பல்​கலைக்​கழகத்​தின் வேந்​த​ரான ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்​பு​வார்​கள். அவர்​களில் ஒரு​வரை நேர்​முக தேர்வு மூலம் தேர்ந்​தெடுத்து துணைவேந்​த​ராக ஆளுநர் நியமிப்​பார்.

3 மாதங்​களுக்​குள் இந்த நடை​முறை​கள் நிறைவடைய வேண்​டும். அப்​படி இல்லை என்​றால், பல்​கலைக்​கழகத்தை நிர்​வகிக்க சிறப்பு குழுவை அரசு அமைக்​கலாம்​.