惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
Tailwind CSS Blog
Engineering at Meta
Engineering at Meta
MongoDB | Blog
MongoDB | Blog
爱范儿
爱范儿
小众软件
小众软件
MyScale Blog
MyScale Blog
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
V2EX
量子位
云风的 BLOG
云风的 BLOG
A
About on SuperTechFans
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
Martin Fowler
Martin Fowler
C
Check Point Blog
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாக்கு எண்ணிக்கையின்போது மிகுந்த எச்சரிக்கை அவசியம்: தவெக...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகச் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யா​வதற்கு இன்​னும் சில தினங்​களே உள்ள நிலை​யில், தவெக தலைமை, தனது வேட்​பாளர்​களுக்கு முக்​கிய அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​யுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கிறது.

தமிழகத்​தில் கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற்று முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான முடிவு​கள், வரும் மே 4-ம் தேதி வெளி​யாக​உள்​ளன. ஆட்​சிக் கட்​டிலில் அமரப்​போவது யார் என்​ப​தில் ஆளுங்​கட்​சி​யான திமுக, பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக மற்​றும் முதல் தேர்​தலைச் சந்​தித்​துள்ள தவெக ஆகிய மூன்று கட்​சிகளுமே அதீத நம்​பிக்​கை​யில் உள்​ளன.

குறிப்​பாக, முதல் தேர்​தலிலேயே ஆட்சி அமைக்​கத் தேவை​யான இடங்​களைப் பிடித்து விடு​வோம் என்​கிற நம்​பிக்​கை​யில் தவெக-​வினர் உற்​சாகத்​தில் இருக்​கிறார்​கள்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்​களாக பனையூரில் உள்ள கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில் தீவிர ஆலோ​சனைக் கூட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

வாக்கு எண்​ணிக்கை நாளன்று வேட்​பாளர்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நெறி​முறை​கள் மற்​றும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிந்​தைய அடுத்​தகட்ட நகர்​வு​கள் குறித்து இந்​தத் தொடர் கூட்​டங்​களில் விவா​திக்​கப்​பட்டு வரு​கிறது.

அதாவது தேர்​தலுக்​குப் பிந்​தைய கள நில​வரங்​கள் குறித்து தவெக கட்​சித் தலைமை நடத்​திய விரி​வான ஆய்​வில், அக்​கட்சி பல தொகு​தி​களில் வெற்றி பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் பிர​காச​மாக இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதனைத் தொடர்ந்து பனையூரில் புஸ்ஸி ஆனந்த், செங்​கோட்​டையன் ஆலோ​சனைக் கூட்​டத்தை நடத்​தி​யுள்​ளனர். இந்​தக் கூட்​டத்​தில்​,50,000-க்​கும் அதி​க​மான வாக்​கு​களைப் பெற வாய்ப்​புள்​ள​தாகக் கருதப்​படும் 40-க்​கும் மேற்​பட்ட முக்​கிய வேட்​பாளர்​கள் நேரில் அழைக்​கப்​பட்​டிருந்​தனர்.

அவர்​களிடத்​தில் புஸ்ஸி ஆனந்த், செங்​கோட்​டையன் தேர்​தல் முடிவு நாளில் பின்​பற்ற வேண்​டிய வியூ​கங்​கள் குறித்து முக்​கிய அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​யிருக்​கிறார்​கள்.

ஆலோ​சனைக் கூட்​டத்​தில் புஸ்ஸி ஆனந்த், செங்​கோட்​டையன் பேசுகை​யில், “தேர்​தலுக்கு பிந்​தைய கள ஆய்​வு​கள் நமக்​குச் சாதக​மாக உள்​ளன.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும்​போது, வேட்​பாளர்​கள் மற்​றும் முகவர்​கள் விழிப்​புடன் இருக்க வேண்​டும். ஒவ்​வொரு சுற்று முடி​விலும் பதி​வாகும் வாக்​கு​களைச் சரி​யாகச் சரி​பார்க்க வேண்​டும். அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வரும் வரை கவனக்​குறை​வாக இருக்​கக் கூடாது.

குறை​வான வாக்கு வித்​தி​யாசத்​தில் நாம் வெற்றி பெறும் தொகு​தி​களில், எதிர்க்​கட்​சி​யினர் மறு​வாக்கு எண்​ணிக்கை கோரவோ, வழக்​குத் தொடரவோ வாய்ப்​பு​கள் அதி​கம். அத்​தகைய சூழல்​களை எதிர்​கொள்ள சட்ட வல்​லுநர்​களு​டன் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும்.

முடிவு​கள் வெளி​யாகும் போது தேவையற்ற வாக்​கு​வாதங்​களைத் தவிர்த்​து, ஜனநாயக முறைப்​படி வெற்​றியை உறுதி செய்​வ​தில் மட்​டுமே கவனம் செலுத்த வேண்​டும்” எனத் தெரி​வித்​திருக்​கிறார்​கள்​. இத்​தகவலை தவெக வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.