惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
爱范儿
爱范儿
I
InfoQ
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
Google DeepMind News
Google DeepMind News
T
Tailwind CSS Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
F
Fortinet All Blogs
S
SegmentFault 最新的问题
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
M
MIT News - Artificial intelligence
Jina AI
Jina AI
H
Help Net Security
量子位
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நியூஸிலாந்து உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இ...
2026-04-28 · via hindutamil

Updated on

2 min read

ஆக்ரா/புதுடெல்லி: இந்​தி​யப் பொருளா​தார வளர்ச்​சி​யில் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக, இந்தியா மற்​றும் நியூஸிலாந்து நாடு​களுக்கு இடையி​லான வரலாற்​றுச் சிறப்​புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் டெல்​லி​யில் நேற்று கையெழுத்​தானது. மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மற்​றும் நியூஸிலாந்து வர்த்தக அமைச்​சர் டாட் மெக்லே ஆகியோர் முன்​னிலை​யில் இந்த ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் அடுத்த 15 ஆண்​டு​களில் இந்தியா​வுக்கு சுமார் 20 பில்​லியன் டாலர் ( இந்​திய மதிப்பில் சுமார் ரூ.1.88 லட்​சம் கோடி) மதிப்​பிலான முதலீடு​கள் கிடைக்​கும் என்​றும், இருதரப்பு வர்த்​தகம் இரு​மடங்​காக உயரும் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தோல் தொழிலுக்​குப் புத்​து​யிர்

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்​தாவதற்கு முன்​ன​தாக, ஆக்​ரா​வில் சிறு குறு தொழில்​துறை​யினருடன் அமைச்​சர் பியூஷ் கோயல் ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: இந்​தி​யா-நியூஸிலாந்து இடையி​லான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் ஆக்​ரா​வின் தோல் பொருட்​கள் ஏற்​றும​திக்கு மிகப்​ பெரிய வாய்ப்புகளை வழங்​கும். இந்​தி​யா​விலிருந்து நியூஸிலாந்துக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும் அனைத்​துப் பொருட்​களுக்கும் இறக்​குமதி வரி முற்​றி​லும் ரத்து செய்யப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் தற்​போது 2.4 பில்​லியன் டால​ராக உள்ள இருதரப்பு வர்த்​தகம் பன்​மடங்கு அதிகரிக்கும். இவ்​வாறு கோயல் கூறி​னார்.

இந்​தி​யா - நியூஸிலாந்து வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முக்​கிய அம்சங்கள்:

வரி இல்லா ஏற்​றும​தி: ஜவுளி, பிளாஸ்​டிக், தோல் மற்​றும் பொறி​யியல் பொருட்​கள் உள்​ளிட்ட இந்​தி​யா​வின் அனைத்து ஏற்​றும​திப் பொருட்​களுக்​கும் நியூஸிலாந்து சந்​தை​யில் 100 சதவீத வரி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

வேலை​வாய்ப்​பு: இந்​தி​யத் தொழில்​துறை​யினருக்கு நற்​செய்​தி​யாக, தற்​காலிக வேலை​வாய்ப்பு விசா முறை அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் தகவல் தொழில்​நுட்​பம் மற்​றும் இதர துறை​களைச் சேர்ந்த 5,000 இந்​திய வல்​லுநர்​கள் நியூஸிலாந்​தில் 3 ஆண்​டு​கள் வரை தங்​கிப் பணி​யாற்ற அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

சேவைத் துறை: தகவல் தொழில்​நுட்​பம், கல்​வி, நிதிச் சேவை​கள் மற்​றும் சுற்​றுலாத் துறை​களில் இந்​திய நிறு​வனங்​கள் நியூஸிலாந்​தில் கால்​ப​திக்​கச் சாதக​மான சூழல் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

விவ​சாயப் பொருட்​கள்: நியூஸிலாந்​தின் ஆப்​பிள், கிவிபழம் மற்​றும் தேன் வகைகளுக்கு இந்​தியா வரிச் சலுகை அளித்​துள்​ளது. இருப்​பினும், இவை குறிப்​பிட்ட அளவு மற்​றும் குறைந்​த​பட்ச இறக்​குமதி விலைக் கட்​டுப்​பாடு​களுக்கு உட்​பட்டே அனு​ம​திக்​கப்​படும்.

உள்​நாட்​டுத் துறை​கள்

இந்​திய விவ​சா​யிகளின் நலனைக் கருத்​தில் கொண்​டு, சில முக்​கி​யத் துறை​களை இந்த வரி விலக்கு ஒப்​பந்​தத்​திலிருந்து இந்​தியா விலக்கி வைத்​துள்​ளது.

அதன் விவரம் பின்​வரு​மாறு:

பால் பொருட்​கள்: பால், தயிர், பாலாடைக்​கட்டி போன்ற பால் பண்​ணைப் பொருட்​களுக்கு வரிச் சலுகை கிடையாது.

விவ​சா​யம்: வெங்​கா​யம், கொண்​டைக்​கடலை, சோளம் மற்​றும் பாதாம் போன்ற பொருட்​களுக்​கும் வரி விலக்கு அளிக்​கப்​பட​வில்​லை.

இதர பொருட்​கள்: தங்​கம், ஆபரணங்​கள், ஆயுதங்​கள் மற்றும் வெடிமருந்​துப் பொருட்​களும் இந்​தப் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

இந்​தி​யா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்​சு​வார்த்தை முதன்​முதலில் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்​கப்​பட்டது. பின்​னர் 2015-ல் நிறுத்தி வைக்​கப்​பட்ட பேச்​சு​வார்த்​தை, கடந்த 2025 மார்ச் மாதம் மீண்டும் தொடங்​கப்​பட்​டு, அதே ஆண்டு டிசம்​பரில் வெற்றிகர​மாக முடிக்​கப்​பட்​டது. 2024-25 நிதி​யாண்​டில் இரு​நாடு​களுக்​கும் இடையி​லான வர்த்​தகம் 1.3 பில்​லியன்​ டாலராக இருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.