


























வோண்டாகர்ள், திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான ‘ஏன்சியன்ட் சீட்’ மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து ‘டோன்ட் லுக் டவுன்’ போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் பங்கேற்று வந்த அவர், தற்போது ‘வாரி வாரி’ என்ற புதிய தமிழ்ப் பாடலை வெளியிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து இப்பாடலை தீ வெளியிட்டுள்ளார்.
நெருக்கமான மற்றும் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டும் காதல் பாடலான இது பற்றி தீ கூறும்போது, “இந்தப் பாடல் நம்மை விட்டுப் பிரிந்த, இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது. தொலைந்து போன ஓர் உணர்வைப் பற்றியது, இந்தப் பாடல் முழுவதும் வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。