惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

M
MIT News - Artificial intelligence
WordPress大学
WordPress大学
GbyAI
GbyAI
S
SegmentFault 最新的问题
量子位
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
J
Java Code Geeks
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
IT之家
IT之家
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ராகுல் காந்தியின் அணுகுமுறை இண்டியா கூட்டணியை வலுப்படுத்...
மோகன் கணபதி · 2026-06-13 · via hindutamil

Updated on: 

கோழிக்கோடு: “ராகுல் காந்தியின் அணுகுமுறை இண்டியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை. மாறாக, பாஜகவுக்கே உதவுகிறது” என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, கேரளத்தில் நிலவும் அரசியல் போட்டி காரணமாக பினராயி விஜயனைத் தழுவ மாட்டேன் என கூறியதாக செய்தி வெளியாகியது.

இந்நிலையில், கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முன்னாள் முதல்வரும், சிபிஎம் மூத்த தலைவருமான பினராயி விஜயனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பினராயி விஜயன், “யார் யாரைத் தழுவுகிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால், ராகுல் காந்தி, நரேந்திர மோடியைத் தழுவும் புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.

ராகுல் காந்தி, மோடியைத் தழுவுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அவரது கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் செய்தியை வெளிப்படுத்துகிறது. இது ராகுல் காந்தியின் அணுகுமுறையையும் அவர் இண்டியா கூட்டணியை எவ்வாறு பார்க்கிறார் என்பதையும் பிரதிபலிக்கிறது. இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் தேவை. ஆனால், இப்போது இது குறித்து நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.

நாங்கள் மட்டுமல்ல, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும், காங்கிரஸ் அல்லாத பிற முக்கிய கட்சிகளும் கூட கூட்டத்தின்போது ஆட்சேபனைகளை எழுப்பி உள்ளார்கள். காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசினார்கள்.

இந்தச் சூழலுக்கு காங்கிரஸின் அணுகுமுறையும் ராகுல் காந்தியின் அணுகுமுறையுமே காரணம். ராகுல் காந்தியின் இந்த அணுகுமுறை, இண்டியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை என்பதே உண்மை. மாறாக, நான் முன்பே கூறியதுபோல இது பெரும்பாலும் பாஜகவுக்கே உதவுகிறது. இத்தகையச் செயல்கள் மூலம் பாஜகவின் நலன்களுக்குச் சாதகமாகச் செயல்படுபவராக ராகுல் காந்தி மாறுகிறார்” என விமர்சித்துள்ளார்.