惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 司徒正美
T
The Blog of Author Tim Ferriss
F
Fortinet All Blogs
Martin Fowler
Martin Fowler
罗磊的独立博客
The GitHub Blog
The GitHub Blog
L
LangChain Blog
A
About on SuperTechFans
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
DataBreaches.Net
宝玉的分享
宝玉的分享
U
Unit 42
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
N
Netflix TechBlog - Medium
The Cloudflare Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
H
Help Net Security
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
爱范儿
爱范儿
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பூந்தமல்லி - வடபழனி வ...
2026-05-04 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின் முதல் மெட்ரோ ரயில் சேவை, பூந்​தமல்லி - வடபழனி தடத்​தில் விரை​வில் தொடங்​க​வுள்​ளது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குபிறகு அமை​யும் புதிய அரசு, ரயில் சேவையை தொடங்கி வைக்​கும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சென்​னை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116.1 கி.மீ தொலை​வுக்கு 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இவற்​றில் கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித்​தடம் (26.1 கி.மீ) ஒன்​றாகும்.

இத்​தடத்​தில் ஒரு பகு​தி​யாக, பூந்​தமல்லி புறவழிச்​சாலை நிலை​யம் - வடபழனிவரை 14.64 கி.மீ. தொலை​வுக்கு உயர்​மட்​ட​பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இத்​தடத்​தில் மெட்ரோ ரயில் பாது​காப்பு ஆணை​யர் மற்​றும் அவரது குழு​வினர் கடந்த பிப்​ர​வரி​யில் ஆய்வு மேற்​கொண்​டனர்.

ரயில்வே தண்​ட​வாளத்​தின் தரம், மெட்ரோ ரயில் நிலை​யம், பிரேக்​கிங் தொழில்​நுட்​பம், பயணி​கள் பாது​காப்பு தொடர்​பாக ஆய்வு செய்​தனர். இதுத​விர, அதிவேக சோதனை ஓட்​டம் மேற்​கொண்​டனர்.

இதன்​முடி​வில், பூந்​தமல்லி முதல் வடபழனி வரை வழித்​தடத்தை பயன்​பாட்​டுக்கு கொண்டு வர மெட்ரோ ரயில் பாது​காப்பு ஆணை​யர் ஒப்​புதல் அளித்​தார்.

அதே​நேரத்​தில், பூந்​தமல்​லி- போரூர் வரை 15 நிமிட இடைவெளி​யில் மெட்ரோ ரயில்​களை இயக்​க​வும், போரூர் சந்​திப்பு முதல் வடபழனி தடத்​தில் ஒவ்​வொரு திசை​யிலும் ஒரு நேரத்​தில் 25 கி.மீ. வேகத்​தில் இயக்​க​வும் நிபந்​தனை விதிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, மார்ச் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், மார்ச் 15-ம் தேதி தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்​ட​தால், மெட்ரோ ரயில் சேவை தொடங்​கப்​ப​டாதநிலை உரு​வானது.

தற்போது சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை இன்று (மே 4) நடை​பெறவுள்​ளது. இதையடுத்து இன்​னும் ஒரு வார காலத்​தில் புதிய அரசு பதவி​யேற்​க​வுள்​ளது.

இந்​நிலை​யில், பூந்​தமல்லி முதல் வடபழனி வரை​யில் மெட்ரோ ரயில் சேவை விரை​வில் தொடங்​க​வுள்​ளது. ரயில் சேவை தொடங்​கும்​போது, பூந்​தமல்லி - போரூர் வரை அனைத்து நிலை​யங்​களில் நின்று செல்​லும்.

போரூர் முதல் வடபழனி வரை இடை​யில் உள்ள நிலை​யங்​களில் நிறுத்​தப்​ப​டாது. பூந்​தமல்லி முதல் வடபழனி வரை ரயில் இயக்​கப்​பட​வுள்​ள​தால், வடபழனி மெட்ரோ ரயில் நிலை​யத்​தில் பயணி​கள் இறங்​கி, சென்ட்​ரல் - பரங்​கிமலை (பச்சை நிற வழித்​தடம்) வழித்​தடத்​தில் இயக்​கப்​படும் மெட்ரோ ரயில்​களில் ஏறி, விரும்​பிய இடத்​துக்கு பயணிக்க இணைப்பு வசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: பூந்​தமல்லி - வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்க தயா​ராக உள்​ளது.

புதிய அரசு அமைந்​தவுடன், இத்​தடத்​தில் ரயில் சேவையை தொடங்கி வைக்​கும். இத்​தடத்​தில் முக்​கிய நிலை​யங்​களான போரூர், வடபழனி ஆகிய மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் தயா​ராக இருக்​கின்​றன.

போரூர் - வடபழனி தடத்​தில் ஆலப்​பாக்​கம், வளரச​வாக்​கம் போன்ற மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் இறு​திக்​கட்ட பணி​கள் நடை​பெறுகின்​றன. இது​போல, இத்​தடத்​தில் மற்ற ரயில் நிலை​யங்​களில் கட்​டு​மானப்​பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இந்த நிலை​யங்​களில் கட்​டு​மானப்​பணி​களை முடித்து, படிப்​படி​யாக பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.