



























18 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தம்பதி
Updated on:
கொச்சி: கேரளாவில் 'ஆபரேஷன் தூஃபான்' என்ற பெயரில் தீவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கொச்சி அருகே வைபின் பகுதியை சேர்ந்த ஆயுஷ், அவரது மனைவி அனிகா ஆகிய இருவரை பெரும்பாவூரில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 18 கிலோ உயர்தர கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.18 கோடியாகும். இது குறித்து டிஐஜி யதீஷ் சந்திரா கூறுகையில்,"இந்த தம்பதியிடமிருந்து போதைப் பொருட்களை வாங்கிய சில்லறை வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை தேடி வருகிறோம்" என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。