惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
J
Java Code Geeks
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net
腾讯CDC
GbyAI
GbyAI
I
InfoQ
博客园 - Franky
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
Visual Studio Blog
Vercel News
Vercel News
博客园_首页
MyScale Blog
MyScale Blog
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium
V
V2EX
T
The Blog of Author Tim Ferriss
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
大猫的无限游戏
大猫的无限游戏
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருப்​பத்​தூர் தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்...
2026-05-13 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் முன்​னாள் அமைச்​சர் கே.ஆர். பெரியகருப்​பனை தோற்​கடித்த திருப்​பத்​தூர் தொகுதி தவெக வேட்​பாளர் சீனி​வாச சேதுபதி இன்று நடை​பெறவுள்ள நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பங்​கேற்க சென்னை உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. இந்த உத்​தரவை எதிர்த்து தாக்​கல் செய்​துள்ள மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் இன்று அவசர வழக்​காக விசா​ரிக்​க​வுள்​ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​தி​யில் திமுக முன்​னாள் அமைச்​ச​ரான கே.ஆர்​.பெரியகருப்​பன் 83,364 வாக்​கு​கள் பெற்​றார். தவெக வேட்​பாள​ர் சீனி​வாச சேதுபதி 83,365 வாக்​கு​கள் பெற்று ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றார்.

அதையடுத்து மறு​வாக்கு எண்​ணிக்கை முறை​யாக நடை​பெற​வில்லை என்​றும், தனது தொகு​திக்​கான ஒரு வாக்கு தொகுதி மாற்றி வேலூர் அரு​கே​யுள்ள திருப்​பத்​தூருக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளதாகவும் அந்த வாக்கை மீட்டு மறு​வாக்கு எண்​ணிக்கை நடத்த உத்​தர​விட வேண்டும் என்​றும், அது​வரை சீனி​வாச சேதுபதி நம்​பிக்கை வாக்​கெடுப்பில் பங்​கேற்​கக்​கூ​டாது என தடை விதிக்கக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு நீதிப​தி​கள் எல்.விக்​டோரியா கெளரி, என்.செந்​தில்​கு​மார் அமர்​வில் விசா​ரிக்​கப்​பட்​டது.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் நேற்று காலை பிறப்​பித்த தீர்ப்​பில், ”ஒரு தபால் வாக்கை அதே பெயர் கொண்ட வேறு ஒரு தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்​ட​தாக மனுதாரர் குற்​றம்சாட்​டி​யுள்​ளார். இது​போன்ற சிக்​கலான சூழல்​களில் சட்டரீதி​யாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்பன போன்ற நெறி​முறை​கள் தேர்​தல் ஆணைய விதி​முறை​களில் தெளிவுபடுத்​தப்​பட​வில்​லை. இதை ஒரு காரண​மாக சுட்​டிக்​காட்டி தேர்​தல் வழக்கு தொடரவும் சட்​டத்​தில் இடமில்​லை. ஏனெனில், வாக்​கு​களை முறையற்ற வகை​யில் ஏற்​றுக் கொண்​டது அல்​லது நிராகரித்​தது, முறை​கேடு​களில் ஈடு​படு​வது, உரிய சட்ட விதி​முறை​களை பின்​பற்​றாதது போன்ற செயல்​களை எதிர்த்​துத்​தான் தேர்​தல் வழக்கு தொடர முடி​யும்.

இருவருக்கும் இடையே ஒரு ஓட்டுதான் வித்​தி​யாசம் என்​ப​தால் இந்த வழக்கை முக்​கியமற்​ற​தாக​வும் கருத முடி​யாது. எனவே தவெக எம்​எல்ஏ சீனி​வாச சேதுபதி மறுஉத்​தரவு பிறப்​பிக்​கும் வரை நாளை (இன்​று) நடை​பெறும் நம்​பிக்கை வாக்​கெடுப்பு உள்​ளிட்ட சட்​டப்​பேரவை நடவடிக்​கை​களில் பங்​கேற்க இடைக்​காலத் தடை விதிக்​கப்​படு​கிறது.

ஒரு அரசு நீடிப்​பதும், கவிழ்​வதும் நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் தான் என்​ப​தா​லும், தற்​போதைய சூழலில் தவெக எம்​எல்ஏ சீனி​வாச சேதுபதி அதில் பங்​கேற்​ப​தை, நடுநிலை​மையை பாது​காக்​கும் வகை​யில் நாங்​கள் அனு​ம​திக்க முடி​யாது. அதே​நேரம் அவரது வெற்றி செல்​லாது என்​றும் அறிவிக்க முடி​யாது. மறுஎண்​ணிக்கை நடத்த வேண்​டும் என்​றும் நாங்​கள் தற்​போது உத்​தரவு பிறப்​பிக்​க​வில்​லை.

தேர்​தல் புனிதத்தை பாது​காக்க வேண்​டிய தேர்​தல் அதி​காரி​களின் செயல் அதிருப்தி அளிக்​கிறது. எனவே இந்த வழக்கு தொடர்பான வாக்கு எண்ணிக்கை ஆதா​ரங்​கள், அதே​போல ஒரு வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டிருந்​தால் அதை அடை​யாளம் கண்டு சீலிட்டு பாது​காக்க வேண்​டும். தபால் வாக்கு தொடர்​பான எண்​ணிக்​கை, நிராகரிப்பு தொடர்​பான வீடியோ பதிவு​களை​யும் பாது​காக்க வேண்​டும். இந்த வழக்​கில் தேர்​தல் ஆணை​யம், சீனி​வாச சேதுபதி ஆகியோர் பதிலளிக்க வேண்​டும். இவ்வாறு உத்​தர​விட்டு விசா​ரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளனர்.

இதனிடையே சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த இந்த உத்​தரவை எதிர்த்து உடனடி​யாக சீனி​வாச சேதுபதி தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை அவசர வழக்​காக விசா​ரிக்​கக்​கோரி உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்​வில் மனு​தா​ரர் தரப்பு மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முறை​யீடு செய்​தார். அதையேற்ற நீதிப​தி​கள், இன்று விசா​ரிப்​ப​தாக தெரி​வித்​துள்​ளனர்.

அதே​போல இந்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரிக்​கும்​போது தனது தரப்பு கருத்​தை​யும் கேட்க வேண்​டுமெனக்​கோரி பெரியகருப்​பன் தரப்​பிலும் கேவியட் மனு தாக்​கல் செய்யப்பட்டுள்​ளது.