惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园_首页
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
量子位
博客园 - 三生石上(FineUI控件)
Stack Overflow Blog
Stack Overflow Blog
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
V2EX
人人都是产品经理
人人都是产品经理
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
L
LangChain Blog
M
MIT News - Artificial intelligence
MongoDB | Blog
MongoDB | Blog
Last Week in AI
Last Week in AI
Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி மதிப்ப...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டை சிப்காட்டில் உள்ள ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எழுந்த கரும்புகை.

Updated on: 

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் செயல்​பட்டு வரும் ஹூண்​டாய் மொபிஸ் கார் உதிரி​பாகங்​கள் தயாரிப்பு தொழிற்​சாலை​யில் நேற்று ஏற்​பட்ட பயங்கர தீ விபத்​தில் பல கோடி மதிப்​பிலான உற்​பத்தி பொருட்​கள் எரிந்​த​தாக தகவல் வெளி​யாகி​உள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் ஹூண்டாய் மொபிஸ் என்ற நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. கார்​களுக்​கான டேஷ்​போர்​டு, ஏர்​பேக் தயாரிக்​கும் பிரி​வில் நேற்று திடீரென தீப்​பற்​றியது.

அப்​பகு​தி​யில் சேமித்து வைக்​கப்​பட்​டிருந்த பிளாஸ்​டிக், எளி​தில் தீப்​பற்​றக்​கூடிய மூலப்​பொருட்​களால் வேக​மாக தீ பரவிய​தாக கூறப்​படு​கிறது. தீ விபத்​தால் தொழிற்​சாலை வளாகம் முழு​வதும் அடர்ந்த கரும்​புகை சூழ்ந்​தது.

தகவலறிந்த ஸ்ரீபெரும்​புதூர், இருங்​காட்​டுக்​கோட்​டை, ஒரகடம் உள்​ளிட்ட பகு​தி​களி​லிருந்து 6-க்​கும் மேற்​பட்ட தீயணைப்பு வாக​னங்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்து தீயை கட்​டுப்​படுத்​தும் பணி​யில் ஈடு​பட்​டன.

பல மணி நேர போராட்​டத்​துக்​குப் பிறகு தீ பரவாமல் தடுக்​கப்​பட்​டது. தீ விபத்து ஏற்​பட்​டதும் தொழிற்​சாலை​யில் பணி​யாற்​றிய 500-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​ட​தால் உயிர்​சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்​தில் தயாரித்து வைக்​கப்​பட்​டிருந்த டேஷ்​போர்​டு​கள், ஏர்​பேக்​கு​கள் மற்​றும் பிற உதிரி​பாகங்​கள் முற்​றி​லும் எரிந்து சேதமடைந்​தன. சேத மதிப்பு பல கோடியைத் தாண்​டும் என முதற்​கட்​ட​மாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கோடை கால வெப்​பம் மற்​றும் மின் கசிவு உள்​ளிட்ட காரணங்​களால் தீ விபத்து ஏற்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்ள நிலை​யில், ஸ்ரீபெரும்​புதூர் காவல்​துறை​யினரும் தீயணைப்​புத் துறை​யினரும் இணைந்து தீ விபத்​துக்​கான காரணம் குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.