惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
S
SegmentFault 最新的问题
Microsoft Security Blog
Microsoft Security Blog
J
Java Code Geeks
罗磊的独立博客
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
P
Proofpoint News Feed
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
L
LangChain Blog
F
Fortinet All Blogs
C
Check Point Blog
博客园_首页
I
InfoQ
Jina AI
Jina AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Engineering at Meta
Engineering at Meta
美团技术团队
Vercel News
Vercel News
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆந்திராவில் 65 கோயில்களில் விரைவில் அன்னதானம்
என்.மகேஷ்குமார் · 2026-06-23 · via hindutamil

ஆந்திர இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனம் ராம்​நா​ராயண ரெட்டி

Updated on: 

அமராவதி: ஆந்திராவில் 65 முக்​கிய கோயில்​களில் விரைவில் அன்​ன​தானம் வழங்​கப்படும் என மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண ரெட்டி தெரி​வித்​தார்.

இது குறித்து அவர் நேற்று அமராவ​தி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஆந்​தி​ரா​வில் தெலுங்கு தேசம்​-​பாஜக- ஜன​சேனா கூட்​டணி ஆட்சி அமைத்து 2 ஆண்​டு​கள் நிறைவடைந்​துள்​ளது. கடந்த 2 ஆண்​டு​களில் இந்து சமய அறநிலை​யத் ​துறை மிகச் சிறப்​பாக பணி​யாற்றி உள்​ளது. ஆனால் முந்தைய ஆட்சியில் இந்து கோயில்​கள் குறி​வைத்து தாக்​கப்​பட்​டன. ராம தீர்த்​தம் கோயி​லில் மூல​வர் ஸ்ரீராமரின் தலை துண்​டிக்​கப்​பட்​டது.

விஜய ​வாடா கனக துர்​கை​யம்​மன் கோயி​லில் வெள்ளி சிம்மாசனம் காணா​மல் போனது. அந்​தர்​வே​தி​யில் கோயில் ரதம் தீயிட்டு கொளுத்​தப்​பட்​டது. இவ்​வளவு நடந்​தும் கடந்த ஜெகன் அரசு யாரை​யும் கைது செய்​ய​வில்​லை. திருப்​பதி தேவஸ்​தானம் உட்பட மாநிலத்​தின் அனைத்து முக்​கிய கோயில்​களி​லும் பக்தர்களுக்கு சிறப்​பான சேவை அளிக்க வேண்​டும் என்​பதே முதல்​வரின் உத்​தர​வாகும்.

இதனால் ஆந்​தி​ரா​வில் சனாதன தர்​மத்தை காக்​கும் இடங்​களாக கோயில்​கள் மாறின. வரு​மானம் இல்​லாத கோயில்​களில் விளக்​கு​கூட ஏற்ற முடி​யாத சூழல் கடந்த ஆட்​சி​யில் இருந்​தது. ஆனால் தற்போது சிறு கோயில்​களுக்​கும் நிதி வழங்​கப்​படு​கிறது. பொது நிதி​யில் இருந்து 962 கோயில்​களும், திரு​மலை திருப்​பதி தேவஸ்தானத்​தின் ஸ்ரீ​வாணி அறக்​கட்​டளை நிதியி​லிருந்து 1,200 பஜனை கோயில்​களும் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

அனைத்து கோயில்​களி​லும் ஆன்​லைன் முறை கொண்டு வரப்பட்ட​தால், முறை​கேடு​கள் நடப்​பது மிக​வும் குறைந்து விட்டது. 2 ஆண்​டு​களில் 449 கோயில்​களுக்கு அறங்​காவலர்​கள், 970 கோயில்​களுக்கு தர்​மகர்த்​தாக்​கள் நியமனம் செய்யப்பட்டனர். வரும் நாட்​களில் 65 முக்​கிய கோயில்​களில் பக்தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட உள்​ளது. இவ்​வாறு அமைச்​சர்​ கூறி​னார்​.