惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
月光博客
月光博客
D
DataBreaches.Net
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
T
The Blog of Author Tim Ferriss
Stack Overflow Blog
Stack Overflow Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
aimingoo的专栏
aimingoo的专栏
U
Unit 42
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MyScale Blog
MyScale Blog
T
Tailwind CSS Blog
N
Netflix TechBlog - Medium
B
Blog
博客园_首页
G
Google Developers Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - 【当耐特】
P
Proofpoint News Feed
博客园 - 司徒正美
Hugging Face - Blog
Hugging Face - Blog
MongoDB | Blog
MongoDB | Blog
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“பாஜகவுக்கு பணிந்துவிடாமல் சமாதான தமிழகச் சூழலை விஜய் பேண...
2026-05-05 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: “பாஜகவுக்கு அணுவளவும் பணிந்து விடாமல், உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி விடாமல் மதச்சார்பற்ற சகோதரத்துவ சமாதான தமிழகச் சூழலை விஜய் பேணிக்காக்க வேண்டும்” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட மாடல் திமுக‌ அரசு 2021 முதல் 2026 வரை மிகச் சிறப்பான நல்லாட்சியை மக்களுக்கு தந்தது என்பது மறக்க முடியாத உண்மை. திமுக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் தனி மனிதரையும் பல வழிகளில் சென்றடைந்து பயன் நல்கியுள்ளன. உயர்கல்வியில் இந்தியாவின் முதல் இடத்தை தமிழ்நாடு அடைவதற்கும் தரமான பள்ளிக்கல்வியை ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் பெறுவதற்கும் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் காரணமாக இருந்தன.

தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களில் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றியது திமுக ஆட்சி. ஒன்றிய அரசின் ஆவணங்களே அதற்கு சாட்சி . தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை பறிப்பதற்கும் பொருளாதாரத்தை நசுக்குவதற்கும் இந்தியை நம் மீது திணிப்பதற்கும் மத வெறி பாசிசக் கூடாரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கும் ஒன்றிய பாஜக அரசு செய்த சூழ்ச்சிகளை ஸ்டாலின் எதிர்த்து நின்றார்.

ஒன்றிய பாஜக அரசின் ஓயாத இடையூறுகளை மீறியே தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையிலும் நாகரிக அரசியலிலும் அவர் வழி நடத்தி வந்தார் என்பது ஆணித்தனமான உண்மை. இப்போது தமிழ்நாட்டு மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிக இடங்களில் வெற்றியை தந்துள்ளனர். பாசிச கோட்பாடு கொண்ட பாஜகவை விஜய் தனது கொள்கை எதிரி என்று பிரகடனம் செய்துள்ளார். ஆயினும் தேர்தல் பரப்புரைகளிலோ மற்ற கூட்டங்களிலோ பாசிச பாஜகவின் மதவெறி போக்கு குறித்து மௌனம் சாதித்து வந்த விஜய் இனியாவது மனந்திறக்க வேண்டும்.

மக்கள் நலன் பேணுவதிலும் மாநில உரிமைகளை காப்பதிலும் மதவெறி பாசிச பாஜகவுக்கு அணுவளவும் பணிந்து விடாமல் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி விடாமல் மதச்சார்பற்ற சகோதரத்துவ சமாதான தமிழகச் சூழலை பேணிக்காக்க விஜய் முன்னிருக்க வேண்டுமென இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். தமிழக வெற்றிக் கழகம் தமிழக நலம் காக்கும் வகையில் பாசிச பாஜகவை முறியடிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.