惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MyScale Blog
MyScale Blog
U
Unit 42
M
MIT News - Artificial intelligence
小众软件
小众软件
P
Proofpoint News Feed
雷峰网
雷峰网
L
LangChain Blog
S
SegmentFault 最新的问题
腾讯CDC
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Vercel News
Vercel News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
Google Developers Blog
大猫的无限游戏
大猫的无限游戏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
Docker
N
Netflix TechBlog - Medium
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Recent Announcements
Recent Announcements
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டிஎம்சிக்கு ஆம் ஆத்மி கட்சியின் நிலையா? - கட்சியின் அதிரு...
2026-05-27 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்​தில் ஆட்​சியை இழந்த திரிணமூல் காங்​கிரஸ் கட்​சி​யின் எம்​.பி.க்​கள் (டிஎம்​சி) சிலர் பாஜகவை அணுக முயற்​சிப்​ப​தாகத் தெரி​கிறது. இதனால் ஆம் ஆத்மி கட்​சி​யைப் போல் திரிண​மூல் கட்சி மாறுகிறதா என்ற கேள்வி தற்​போது எழுந்​துள்​ளது.

டெல்​லி​யில் ஆம் ஆத்மி கட்​சித் தலைமை மீது முக்​கி​யத் தலைவர்கள் பலர் அதிருப்​தி​யில் இருந்​தனர். அதனால், ஆம் ஆத்மி​யின் 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் ராகவ் சத்தா தலைமையில் திடீரென பாஜக​வில் இணைந்​தனர். அதே நிலை மேற்கு வங்​கத் தேர்​தல் தோல்விக்​குப் பிறகு டிஎம்​சி​யில் உட்​கட்​சிப் பூசல் அதி​கரித்​துள்​ளது. முன்​னாள் முதல்​வர் மம்தா பானர்ஜியின் மரு​மகன் அபிஷேக் பானர்​ஜிக்கு எதி​ராகக் கட்சிக்குள் ஒரு பிரி​வினர் வெளிப்​படை​யாக எதிர்ப்​புக் குரல் எழுப்பத் தொடங்​கி​யுள்​ளனர்.

வேட்​பாளர் தேர்​வில் அபிஷேக் தன்​னிச்​சை​யாகச் செயல்பட்டதாக​வும் அரசு நிர்​வாகத்​தி​லும் இப்​பிரி​வினர் அதிருப்தி அடைந்திருந்​தனர். இதன் காரண​மாகவே, டிஎம்​சி​யின் நாடாளு​மன்ற எம்.பி.க்​களான ககோலி கோஷ் தஸ்​தி​தார், பராசத் மாவட்​டத் தலை​வர் மற்​றும் பல சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் கட்சி ஆலோ​சனைக் கூட்​டங்​களில் கலந்து கொள்​ள​வில்​லை. இதனால் அதிருப்தி தலை​வர்​கள் பலர், பாஜக​வுடன் தொடர்​பில் இருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

எனினும், அவர்​களை இணைத்​துக் கொள்​வது குறித்​து, அவரசரப்ப​டா​மல் நிதான​மாக முடிவு எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு டிஎம்சி தொண்​டர்​களை சேர்க்க பாஜக தற்​காலிகத் தடை விதித்​துள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிக்கு மாநிலங்​களவை​யில் 13 எம்.பி.க்களும், மக்​களவை​யில் 28 எம்​.பி.க்​களும் உள்​ளனர். இவர்கள் தேர்​தல் முடிவு​கள் சாதக​மாக அமை​யாத நிலை​யில், கட்சிக்​குள் இனி எதிர்​காலம் இல்லை என்று கருதுகின்​றனர்.

இதை சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொண்டு மாநிலங்களவையில் தனிப்​ பெரும்​பான்​மை​யைப் பெற, டிஎம்சி மாநிலங்​களவை எம்​.பி.க்​களைச் சேர்ப்​ப​தைத் தவிர பாஜக.வுக்கும் வேறு வழி​யில்​லை. மாநிலங்​களவை​யில் பெரும்பான்​மைக்கு 113 எம்​.பி.க்​கள் தேவை. தற்​போதைக்​குப் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்சிகளை எல்​லாம் சேர்த்​தால், மாநிலங்​களவை​யில் பெரும்பான்மை பலம் உள்​ளது.

டிஎம்சி எம்​.பி.க்​கள் இணைந்​தால், பாஜக.வுக்​கேத் தனிப்​பெரும்பான்மை கிடைக்க வாய்ப்​புள்​ளது. இது நடந்​தால் மகளிர் இட ஒதுக்​கீட்டை அமலாக்க பாஜக மீண்​டும்​ முயற்​சி செய்​யும்​ என்று எதிர்​பார்க்​கப்​படுகிறது.