惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
博客园_首页
小众软件
小众软件
美团技术团队
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
腾讯CDC
P
Proofpoint News Feed
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
MyScale Blog
MyScale Blog
U
Unit 42
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Security Blog
Microsoft Security Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இப்படியும் சில பொறியாளர்கள்! | இளம் தொழில்முனைவோர்
2026-05-13 · via hindutamil
கார்த்திகா ராஜேந்திரன்

Updated on

3 min read

கட்டிடக்கலையின் பல்வேறு பிரிவுகளில் நகர்ப்புற வடிவமைப்பு (Urban planning), சாலை வடிவமைப்பு (Street design) போன்றவை தற்போது அதிகக் கவனம் பெற்றுவருகின்றன.

அதாவது ஒரு நகரத்தின் பொது இடங்களைக் கட்டி முடிப்பதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் ஏற்றாற்போல எப்படி வடிவமைப்பது எனக் கவனத் தோடு இயங்குவது இத்துறைகளின் பொறுப்பு.

கட்டிடக்கலை நண்பர்கள்

கல்லூரியில் கட்டிடக்கலை படித்துக் கொண்டிருந்தபோதே இத்துறையில் சாதிக்க வேண்டுமென உத்வேகத்தோடு இருந்த நண்பர்கள் குழு, இன்று பிசினஸ் பார்ட்னர்களாகிவிட்டனர்.

‘டிசைன் கோ: லேப்’ எனும் கட்டிடக்கலை நிறுவனத்தைத் தொடங்கி சென்னை, கோவை மாநகராட்சிகளோடு இணைந்து நகர்ப்புற வடிவமைப்பு, சாலை வடிவமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள் இந்த இளம் தொழில்முனைவோர்.

சென்னையைச் சேர்ந்தவர் பவித்ரா ஸ்ரீராம். இவரின் நண்பர்கள் ஹரிணி, ஆதித்யா ஆகியோர் ஒன்றாகக் கல்லூரியில் பயின்றவர்கள். 2013இல் கட்டிடக் கலை படிப்பை முடித்துவிட்டு, தனித்தனிப் பாதைகளில் பயணிக்கத் தொடங்கினார்கள். கட்டிடக்கலை துறையின்கீழ் உள்ள வெவ்வேறு கிளைகளில் பணியாற்றிய அனுபவத்தோடு மீண்டும் 2020இல் ஒன்றுகூடிய இவர்கள், சொந்தமாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கினர்.

மூன்று பேரோடு தொடங்கிய இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் இன்று மேலும் சிலர் பணியாற்றுகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை எடுத்து, திறம்படச் செயலாற்றியுள்ளனர். பொதுவாக பொறி யியல், மருத்துவம் போன்ற படிப்பு களுக்கே மாணவர்கள் முன்னுரிமை வழங்குவது வழக்கம். உண்மையில் கட்டிடக்கலைப் படிப்பும் வேலையும் சுவாரசியமானது என்கிறார் பவித்ரா.

“பெரும்பாலானோரின் வாழ்க்கை லட்சியம் - வீடு வாங்க வேண்டும் என்ப தாகவே இருக்கும். ஆனால், அது மட்டுமே லட்சியமாக இருக்கக் கூடாது. சொந்தமாக ஒரு வீட்டை, அலுவலகத்தைக் கட்ட வேண்டுமென்கிற திட்டம் இருக்கும்போது, அது எப்படி இருக்க வேண்டுமென்கிற திட்டமிடல் ரொம்ப அவசியம்.

கைக்கு எட்டும் இடத்தில் மொபைல் போன் சார்ஜ் பாயிண்ட் இருக்க வேண்டு மெனப் பலரும் நினைக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொருவரின் வசதியும் விருப்பமும் மாறி வந்துள்ளது. பொதுவாக உயரம் குறைவான ஒருவரால் ஸ்விட்ச் போர்டைப் பயன்படுத்த முடியுமா, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வீடுகள், கட்டிடங்கள் கட்டப்படு கின்றனவா என்கிற அம்சங்களில் கோட்டை விடுகிறோம் என்றே நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி ‘இன்குளூசீவ்’ ஆக இருப்பதே ஒரு கட்டிடக் கலை நிபுணராகத் தற்போதைய காலத்தின் தேவை. ஒருவருக்கு முதுமை, உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு.

<div class="paragraphs"><p>ஹரிணி - பவித்ரா - ஆதித்யா</p></div>

ஹரிணி - பவித்ரா - ஆதித்யா

எனவே, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிடாமல், இப்போதே அதற்கு ஏற்ப தனிப்பட்ட இடங்களையும் பொது இடங்களையும் உருவாக்க வேண்டும். இதில் பொது இடத்தை வடிவமைப்பது தொடர்பான பணிகளே நகர்ப்புற வடிவ மைப்பு (அர்பன் பிளானிங்). இதுவும் சுவாரசியமான வேலை” என நீண்ட விளக்கத்தைத் தந்தார்.

அனுபவம் அவசியம்

பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஏற்பப் பொது இடங்கள் இருப்பதில்லை. எடுத்துக்காட்டுக்கு, மெட்ரோ ரயிலை எடுத்துக்கொள்வோம். ரயிலை வடிவமைத்து இயக்கினால் மட்டும் போதுமா? பயணிப்பவர்களின் வசதிக்கேற்ப பிடிமானக் கம்பிகள், இருக்கைகள் இருந்தால் மட்டுமே அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமையும்.

ஒரு கட்டிடக்கலை நிபுணராக இக்கருத்தை வலியுறுத்துவதாகச் சொல்கிறார் பவித்ரா. “எங்களுடைய வேலையின்படி ஓர் இடத்தை அனைவருக்குமான இடமாகக் கட்ட வேண்டுமென வாடிக்கை யாளரிடம் முன்பே சொல்லிவிடுவோம்.

ஆனால், சிலர் அது தேவையற்றது என நினைப்பார்கள். இன்னும் சிலர் பணம் செலவாகும் எனக் காரணம் சொல்வார்கள். உண்மையில் ஒரு ஸ்விட்ச் போர்டை சற்று உயரத்தில் வைப்பதற்கும் சரியான உயரத்தில் வைப்பதற்கும் ஆகும் செலவு கிட்டத்தட்ட ஒன்றுதான். இதை வாடிக்கையாளரிடம் எடுத்துச்சொல்வதே ஒரு கட்டிடக்கலை நிபுணருக்குச் சவாலான வேலை” என்கிறார்.

அனைவருக்குமான இடம்

சென்னை மாநகராட்சியோடு இணைந்து ‘அனைவருக்குமான இடம்’ என்கிற கருப்பொருளில் ‘Gender and Policy Lab' ஆராய்ச்சி ஒன்றை இக்குழு மேற்கொண்டுள்ளது.

பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள், கடற்கரைகள், சுரங்கப் பாதைகள், மேம்பால நடைபாதைகள், சந்தைகள், பொதுக் கழிப்பிடங்கள், தங்குமிடங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பூங்காக்கள் உள்ளிட்ட இடங்கள் ‘அனைவருக்குமான’ இடங்களாக இருக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. சாலையோர விளக்குகள், அகலமான நடைபாதைகள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளி களுக்கு ஏதுவான பொதுக் கழிப்பிடங்கள், கூடுதல் அமர்விடங்கள், நிழற்பகுதிகள் ஆகியவை எக்காலத்துக்கும் ஏற்ற பயன்பாட்டு இடங்களாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படிப் பொறுப்புணர் வோடு இயங்கிவரும் இந்த இளம் படை கட்டிடக்கலையில் இன்னும் பல பணிகளைத் திறம்படச் செய்யத் திட்ட மிட்டுள்ளது!

டிசைன் கோ:

லேப் இன்ஸ்டகிராம் பக்கம்: https://www.instagram.com/designco.lab/

- karthiga.rajendran@hindutamil.co.in