惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
V
V2EX
博客园 - Franky
博客园 - 司徒正美
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
量子位
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
Google DeepMind News
Google DeepMind News
N
Netflix TechBlog - Medium
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
V
Visual Studio Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘அரிவாள் செல்’ எனும் மரபணுப் போர் | நட்சத்திரக் குழந்தைகள...
2026-05-19 · via hindutamil

Updated on

3 min read

ஆறு வயது கவியரசன், தெரு வில் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதை ஜன்னல் வழியாக ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கால்கள் மட்டும் அவனுக்கு ஒத்துழைத்திருந்தால் அந்த விளையாட்டில் முதல் உதை அவனுடையதாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், அவனது நரம்புகளுக்குள் ஓடும் ரத்தம், மென்மையான நதி போலன்றி, கூர்மையான அரிவாள்களைச் சுமந்து செல்லும் ஒரு போர்க்களமாக மாறியிருந்தது. ஒவ்வொரு முறையும் அந்தப் பிறை வடிவ அணுக்கள் அவனது மெல்லிய ரத்த நாளங்களில் சிக்கிக்கொள்ளும்போதும், உடலெங்கும் மின்னல் வெட்டுவது போன்ற கொடூர வலி அவனை நிலை குலைய வைக்கும்.

அது வெறும் ரத்த சோகை அல்ல, அவனது ஒவ்வொரு சுவாசத்திலும், ஒவ்வொரு அசைவிலும் மௌனமாகப் போராடும் சிக்கிள் செல் அனீமியா. பொதுவாக ரத்த சிவப்பணுக் கள் வட்ட வடிவில், மென்மையாக, ரத்த நாளங்களில் எளிதாகப் பாய்ந்து செல்லும் வகையில் இருக்கும். ஆனால், சிலருக்குச் சிவப்பணுக்கள் நிலவின் பிறை வடிவத்திலோ, புல் அறுக்கும் ‘அரிவாள்' வடிவத்தில் மாறிவிடும்.

இது சாதாரண மாற்றமல்ல; அந்த மனிதரின் வாழ்நாள் முழுவதையும் வலியால் நிரப்பும் ஒரு மரபணுப் போராட்டம். தந்தை, தாய் இருவருமே அரிவாள் செல் ரத்த சோகைக்கான (Sickle Cell Anemia) காரணியைச் சுமந்திருந்தால் பிறக்கும் குழந்தையை இந்நோய் முழுமையாகப் பாதிக்கும்.

ஒருவேளை பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால், தான் பாதிக்கப்படாவிட்டா லும் அடுத்த தலைமுறைக்கு நோயைக் கடத்துபவராக அந்தக் குழந்தை வளரும்.

ஒழிப்புத் திட்டம்

கடந்த காலத்தில் இந்த நோய்க்கு முறையான சிகிச்சை இல்லை. அறிவியல் வளர்ச்சியாலும் அரசுகளின் முன்னெடுப்பாலும் சமீபத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்திய அரசால் 2023இல் தொடங்கப்பட்டது, தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்புத் திட்டம் (2047). நோய்ப் பாதிப்பு அதிகம் உள்ள 17 மாநிலங்களில், 40 வயதுக்கு உள்பட்ட 7 கோடி பேருக்குப் பரிசோதனை செய் வதே இதன் இலக்கு.

தமிழ்நாடு இந்த நோயைக் கையாளு வதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. குறிப்பாக நீலகிரி, ஆனைமலை போன்ற பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கவனம் செலுத்து கிறது. பழங்குடியின வட்டாரங்களில் உள்ள அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார் களுக்கும் கட்டாயப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தாய்க்குப் பாதிப்பு இருந்தால், தந்தையும் பரிசோதிக்கப்படுகிறார். இருவருக்கும் பாதிப்பு இருந்தால், மரபணு ஆலோசனையும் கருவில் இருக்கும் குழந்தையைப் பரிசோதிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

மலைக் கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களைச் சென்றடைய நடமாடும் மருத்துவ வாகனங்கள் பயன்படுத்தப்படு கின்றன. இந்த வாகனங்களில் உள்ள ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை கிராமங் களுக்குச் சென்று அங்கேயே பரிசோத னைகளை மேற்கொள்கின்றனர்.

கல்விசார் தேவைகள்

கணிக்க முடியாத ‘வலி நெருக்கடிகள்’, அதீத சோர்வு, நோய்த்தொற்று களால் பாதிக்கப்படக்கூடிய தன்மையை இந்நோய் கொண்டி ருப்பதால், சிறுவயதி னருக்குக் கூடுதல் ஊக்கம் அவசியம். இம்மாணவர்களின் ஆரோக்கியத்தை விட்டுக்கொடுக்காமல் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை உறுதிப் படுத்த, பாரம்பரியமான, கட்டுப்பாடான பள்ளிக் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

அரிவாள் செல் ரத்த சோகை உள்ள ஒரு குழந்தைக்குத் தொடர்ச்சியான நீர்ச்சத்து, உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பது மிக அவசியம். சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும்போலிக் ஆசிட் நிறைந்த உணவு, சமச்சீர் உணவு வழங்கப்பட வேண்டும்.

பள்ளிகள் தடையற்ற குடிநீர் வசதியை யும், அடிக்கடி கழிவறை செல்வதற்கான இடைவேளைகளையும் வழங்க வேண்டும். ஏனெனில் நீர்ச்சத்து குறை பாடு கடுமையான வலியைத் தூண்டும்.

அதிக வெப்பம், குளிர் இரண்டுமே வலியைத் தூண்டும் என்பதால் வகுப் பறையில் அமரும் இடம் ஏசி துவாரங்கள் அல்லது ஜன்னல்களுக்கு அருகில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ஒரு மாணவர் தனக்கு வலி தொடங்குவதை உணர்ந்தாலோ அல்லது அதீத சோர்வைச் சந்தித்தாலோ, எவ்வித கேள்வியும் இன்றி உடனடியாக ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.

நெகிழ்வான பாடத்திட்டம்

பாதிக்கப்பட்ட மாணவர் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட லாம் அல்லது வீட்டில் ஓய்வெடுக்க வேண்டி இருக்கலாம். இதனால் அவர்கள் கல்வியில் பின்தங்கி விடாமல் இருக்கப் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை.

* வருகைப்பதிவு: மருத்துவக் காரணங்களுக் காகப் பள்ளிக்கு வராத நாள்களுக்கு அபராதம், தண்டனைகளைத் தவிர்க்க வேண்டும். மாணவர் வீட்டிலிருந்தே படிக்க ஏதுவாகப் பதிவு செய்யப்பட்ட பாடங்கள் அல்லது இணையப் பாடப் பொருள்களை வழங்க வேண்டும்.

* பாடச்சுமை குறைப்பு: வலி நெருக்கடியின்போது அல்லது அதற்குப்பிறகு, மாணவரின் சிந்திக்கும் ஆற்றல் குறைவாக இருக்கலாம். வீட்டுப் பாடங்களைக் குறைப்பதன் மூலமோ, முக்கியத் திட்டப்பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிப்பதன் மூலமோ அவர் களின் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

* தேர்வுச் சலுகைகள்: தேர்வில், இம்மாணவர்களுக்குக் கூடுதல் நேரம் வழங்குவது, தகுந்த வெப்பநிலையுள்ள அறையில் தேர்வு எழுத அனுமதிப்பது அவர்களின் சோர்வைச் சமாளிக்க உதவும்.

சோம்பேறி அல்ல

அரிவாள் செல் ரத்த சோகை உள்ள குழந்தைகளின் உளவியல் ஆரோக்கியத் துக்கு, அவர்களைப் புரிந்துகொள்ளுதல் முக்கியப் பங்களிக்கிறது. உடற்கல்வி வகுப்புகளில், இவர்களை முழுமையாக விலக்கி வைக்காமல் அவர்களது எல்லைக்கு உள்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும்.

குறைந்த உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டு களில் அவர்களை ஊக்குவிக்கலாம், அதேநேரம் அவர்கள் சோர்வாக உணரும் போது விளையாடுவதை நிறுத்தவும் ஓய்வெடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.

ஆசிரியர்களும் சக மாணவர்களும் இந்நோய் குறித்துத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்; அப்போதுதான் ஓய்வு தேவைப்படும் மாணவரை ‘சோம்பேறி' எனக் கருதாமல் ஆதரவான சூழலை உருவாக்க முடியும்.

பெற்றோர், ஆசிரி யர்கள், மருத்துவக் குழுவினரை உள்ள டக்கிய ஒரு தனிப்பயனாக்கப்பட்ட கல்வித் திட்டம் இம்மாணவர்களுக்குச் சிறந்த முறையில் உதவும். நோயற்ற சமூகத்தைப் படைக்க, அறிவி யலின் துணையோடு விழிப்புணர்வுப் பாதையில் பயணிப்போம்!

(ஒளிரும்)

- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com