惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

A
About on SuperTechFans
人人都是产品经理
人人都是产品经理
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
月光博客
月光博客
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
博客园 - 司徒正美
美团技术团队
博客园_首页
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
有赞技术团队
有赞技术团队
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு காலவரைய...
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

வாஷிங்டன்: ஈ​ரான் உடனான போர் நிறுத்​தத்தை கால​வரை​யின்றி நீட்​டிக்க உள்​ள​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

மேற்​காசிய நாடான ஈரானுக்கு எதி​ராக அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் கடந்த பிப்​.28-ம் தேதி போர் தொடுத்​தன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க ராணுவ தளங்​கள் அமைந்​துள்ள வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. இந்த நிலை​யில், கடந்த 8-ம் தேதி அமெரிக்கா - ஈரான் இடையே 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல்​படுத்​தப்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக, பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்​கா, ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையே கடந்த 11, 12-ம் தேதி​களில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில், அமெரிக்​கத் தரப்​பில் விதிக்​கப்​பட்ட சில நிபந்​தனை​களை ஈரான் ஏற்​க​வில்​லை. குறிப்​பாக, யுரேனி​யத்தை செறி

வூட்​டும் திட்​டத்தை (அணு ஆயுதம்) கைவிட ஈரான் திட்​ட​வட்​ட​மாக மறுத்​து​விட்​டது.

மேலும், ‘ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் கட்​டுப்​பாடு தொடர்ந்து ஈரான் கட்​டுப்​பாட்​டிலேயே இருக்​கும். இந்த ஜலசந்தி வழி​யாக செல்​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​களுக்கு சுங்​கவரி விதிப்​போம்’ என்​றும் ஈரான் அறு​தி​ யிட்டு கூறியது. அதே​போல, அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலால் ஏற்​பட்ட சேதத்​துக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தி​யது. இந்த 3 விவ​காரங்​களால் அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​த​தாக தகவல்​கள் வெளி​யாகின.

இஸ்​லா​மா​பாத்​தில் 2-ம் சுற்று பேச்​சு​வார்த்தை 22-ம் தேதி (நேற்​று) நடை​பெறக்​கூடும். அமெரிக்​கத் துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இதில் பங்​கேற்​பார் என்று தகவல் வெளி​யான நிலை​யில், அவரது பாகிஸ்​தான் பயணத்தை வெள்ளை மாளிகை நிறுத்தி வைத்​தது.

இதற்​கிடையே, அமெரிக்கா - ஈரான் இடையி​லான 2 வார போர் நிறுத்​தம் நேற்று முடிவடைய இருந்த நிலை​யில், போர் நிறுத்​தத்தை கால​வரை​யின்றி நீட்​டிக்க உள்​ள​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். பாகிஸ்​தான் கோரிக்​கையை ஏற்று இந்த நடவடிக்​கையை எடுப்​ப​தாக அவர் தனது ட்ரூத் வலை​தளப் பதி​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

போர் நிறுத்​தத்தை நீட்​டிக்க வேண்​டும் என்று ஈரான் தரப்​பில் எந்த கோரிக்​கை​யும் விடப்​ப​டாத நிலை​யில், ட்ரம்ப் தானாக முன்​வந்து இந்த அறி​விப்பை வெளி​யிட்​டுள்​ளார். இருப்​பினும், ஏற்​றுக்​கொள்​ளத்​தக்க ஒரு தீர்​வுக்கு ஈரான் வரும் வரை அந்​நாட்டு துறை​முகங்​கள், கடற்​கரைப் பகு​தி​களில் அமெரிக்க கடற்​படை​யின் முற்​றுகை தொடரும் என்​றும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகரின் ஆலோ​சகர் கூறும்​போது, ‘‘ட்​ரம்ப்​பின் இந்த அறி​விப்பு போலி​யானது. இது திடீர் தாக்​குதலுக்கு அவகாசம் பெறு​வதற்​கான தந்​திரம்’’ என்​றார். இதற்​கிடையே, ஈரான் அரசுக்​காக ஆயுதங்​கள், உதிரி​பாகங்​களை கொள்​முதல் செய்​து, அவற்றை கொண்டு செல்​லும் நெட்​வொர்க்கை குறி​வைத்​து, ஈரானுடன் தொடர்​புடைய 14 தனி​நபர்​கள், நிறு​வனங்​கள், விமானங்​களுக்கு அமெரிக்கா தடை விதித்​துள்​ளது.

அமெரிக்க கரு​வூலத் துறை​யின் வெளி​நாட்டு சொத்​துக் கட்​டுப்​பாட்டு அலு​வல​கம் இந்த நடவடிக்​கையை அறி​வித்​தது. இந்த தடை​யின்​கீழ் வருபவர்​கள்​ ஈரான்​, துருக்​கி, ஐக்​கிய அரபு அமீரகத்​தில்​ இருப்​ப​தாக​வும்​ கூறியுள்​ளது.