惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
雷峰网
雷峰网
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
G
Google Developers Blog
腾讯CDC
B
Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Microsoft Security Blog
Microsoft Security Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园_首页
T
Tailwind CSS Blog
C
Check Point Blog
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
L
LangChain Blog
Engineering at Meta
Engineering at Meta
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆந்திராவில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு: கூகுள் ஏஐ டேட்டா...
2026-04-29 · via hindutamil

Updated on

2 min read

விசாகப்பட்டினம்: ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 3 இடங்​களில் ரூ.1.35 லட்​சம் கோடி முதலீட்​டில் கூகுள் ஏஐ டேட்டா மையம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவுடன் இணைந்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார். இதன் மூலம் 1.88 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும்.

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினம் தர்​ல​வாடா பகு​தி​யில் நேற்று கூகுள் ஏஐ டேட்டா மையத்​துக்​கான அடிக்​கல் நாட்டு விழா விமரிசை​யாக நடந்​தது. விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்ட மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் மற்​றும் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் அடிக்​கல் நாட்​டினர்.

ரூ.1.35 லட்​சம் கோடி முதலீட்​டில் அமைய உள்ள கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் 1.88 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்​ளது. ஒரு கிகா​வாட்​டுக்கு மேல் திறன் கொண்ட இந்த ஏஐ மையம், விசாகப்​பட்​டினத்​தில் 2028-ம் ஆண்​டுக்​குள் அமைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முதலில், தர்​ல​வா​டா​வில் 266.6 ஏக்​கரிலும், பின்​னர் அடவிவரம் பகு​தி​யில் 160 ஏக்​கரிலும், அனகாபல்லி மாவட்​டம் ராம்​பில்லி அருகே 174.80 ஏக்​கரிலும் இந்த டேட்டா மையங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. இந்த மையம் கட்​டப்​படும்​போதே சிவில், எலக்ட்​ரி​க்கல் மற்​றும் மெக்​கானிக்கல் பிரிவு​களில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்​ளது.

கேம் சேஞ்​சர்: விசாகப்​பட்​டினத்​துக்​குக் கூகுள் ஏஐ டேட்டா மையம் வரவு என்​பது ஒரு கேம் சேஞ்​சர் என ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார். அவர் மேலும் பேசி​ய​தாவது: விசாகப்​பட்​டினத்​துக்கு மட்​டுமல்ல, ஆந்​தி​ரா​வுக்கே இந்த நிகழ்வு ஒரு கேம் சேஞ்​சர்தான்.

ஆந்​திர வரலாற்​றில் இந்த நாள் மறக்க முடி​யாத நாளாகும். இதனால் நான் மத்​திய அரசுக்​கும், கூகுள் நிறு​வனத்​துக்​கும் மனதார நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் நம் நாட்​டின் தகவல் தொழில்​நுட்​பத்​தில் ஒரு புதிய அத்​தி​யா​யம் தொடங்கி உள்​ளது.

தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் ஆந்​தி​ரா​வின் பங்கு மிக முக்​கிய​மாக மாற உள்​ளது. சர்​வ​தேச டேட்டா நுழைவு வாயி​லாக ஆந்​திரா இருக்​கும். மேலும் பல்​வேறு பிரபல நிறு​வனங்​கள் ஆந்​தி​ரா​வுக்கு வர உள்​ளன. இந்த மையம் 2028 நவம்​பர் மாத இறு​திக்​குள் அமைக்​கப்​படும். வரும் ஜூலை மாதத்​தில் போகாபுரம் விமான நிலை​யத் திறப்பு விழா நடை​பெற உள்​ளது. நாங்​கள் நிறு​வனங்​களு​டன் வெறும் ஒப்​பந்​தங்​கள் மட்​டுமே செய்​வ​தில்​லை. அதை முனைப்​புடன் அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்​வ​தில் குறி​யாக உள்​ளோம். இதனால்​தான் பல நிறு​வனங்​கள் ஆந்​தி​ரா​வில் முதலீடு செய்ய முன்​வரு​கின்​றன. இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு பேசி​னார்.

ஏஐ பட்​டினம்: மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: நாடே பெரு​மிதம் அடை​யும் விதத்​தில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலை​வர் சந்​திர​பாபு நாயுடு. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலத்​தில் ஹைத​ரா​பாத்​தில் ஒரு சைப​ரா​பாத் நகரை உரு​வாக்கி அதை தகவல் தொழில்​நுட்பத் தலைநகர​மாக மாற்றி சாதனை படைத்​தவர் சந்​திர​பாபு நாயுடு.

தற்​போது விசாகப்​பட்​டினம் வருங்​காலத்​தில் ஏஐ பட்​டின​மாக மாறும் வித​மாக கூகுள் ஏஐ டேட்டா மையத்தை இங்கு கொண்டு வந்​துள்​ளார். பிரதமர் மோடி, முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகிய இரு​வரும் தொலைநோக்குப் பார்​வை​யுடன் நாட்டை முன்​னோக்கி கொண்டு செல்​பவர்​கள். இளைய சமூகத்​துக்கு எடுத்​துக்​காட்​டாக விளங்கி வருபவர் அமைச்​சர் லோகேஷ். இவருடைய தீவிர முயற்​சிகளால் பணி​கள் விரை​வாக நடை​பெறுகின்​றன.

எலக்ட்​ரானிக்ஸ் தயாரிப்​பில் இந்​தியா சிறந்து விளங்​கு​கிறது. செமி கண்​டக்​டர் தயாரிப்​பில் நம் நாடு முக்​கிய இடம் வகிக்​கிறது. ஒரு டாலர் மதிப்​புள்ள ‘சிப்’ கிடைக்​கா​விடில், மில்​லியன் டாலர் பொருட்​களின் உற்​பத்தி நின்று போய் விடும். ரயில்வே துறை மூலம் ஆந்​தி​ரா​வுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. ஒரு லட்​சம் கோடி மதிப்​புள்ள ரயில்வே பணி​கள் ஆந்​தி​ரா​வில் நடை​பெற்று வரு​கின்​றன. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஆந்​தி​ரா​வில் ‘தென் கடலோர ரயில்வே வட்​டம்’ தொடங்​கப்பட உள்​ளது. விரை​வில் புல்​லட் ரயில்​கள் தென் இந்​திய மாநிலங்​களில் பறக்க உள்​ளன.

இதனால், சென்​னை, அமராவ​தி, ஹைத​ரா​பாத், பெங்​களூரு நகரங்​கள் பயனடைய உள்​ளன. அமராவ​தி​யில் இருந்து ஹைத​ரா​பாத்​துக்கு வெறும் 70 நிமிடங்​களில்​ சென்​றடைந்​து விடலாம்​. இவ்​​வாறு அஸ்​வினி வைஷ்ணவ்​ கூறி​னார்​. ​நிகழ்​ச்​சி​யில்​ மத்​திய அமைச்​சர்​ ​ராம்​மோகன்​ ​நா​யுடு, ​மாநில அமைச்​சர்​ லோகேஷ், கூகுள்​ நிறு​வன பிர​தி​நி​தி​கள்​ உட்​பட மேலும்​ பல உயர்​ அ​தி​காரிகள்​ பங்​கேற்​றனர்​.