惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
Blog — PlanetScale
Blog — PlanetScale
腾讯CDC
aimingoo的专栏
aimingoo的专栏
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans
J
Java Code Geeks
G
Google Developers Blog
N
Netflix TechBlog - Medium
Vercel News
Vercel News
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
I
InfoQ
Stack Overflow Blog
Stack Overflow Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
The Blog of Author Tim Ferriss
罗磊的独立博客
GbyAI
GbyAI
小众软件
小众软件
大猫的无限游戏
大猫的无限游戏
WordPress大学
WordPress大学
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மக்களுக்கு மட்டுமின்றி, தொழில், வணிகப் பிரிவுக்கும் மின் ...
தமிழினி · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை காரணம் காட்டி, வீடுகள் மற்றும் தொழில், வணிகப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6%க்கு மிகாமல் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆணை மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாமல் தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்த வகையான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது மக்களைக் கடுமையாக பாதிக்கும். முந்தைய திமுக ஆட்சியின் போது, 09.09.2022-ஆம் நாள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, அந்த ஆண்டில் 52% வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அதிகபட்சமாக 6%, அதற்கு முந்தைய நிதியாண்டின் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி திமுக ஆட்சியில் 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் வீடுகளுக்கான மின்கட்டணம், வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஆகிய இரண்டும், 2023, 2025 ஆகிய ஆண்டுகளில் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டன.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி, வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இது தொடர்பாக கடந்த மே 21-ஆம் தேதி மின்சாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “மின்சாரத் துறை இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

ஆனால், இப்போது அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுப்போம் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்களுக்கு பாதிப்பில்லை என்பதே தவறான வாதம் ஆகும். மின்கட்டண உயர்வால் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு மக்களின் தலையில் தான் சுமத்தப்படும். அதனால் எந்த வகையான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது மக்களை பாதிக்கவே செய்யும்.

திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணம் 40% வரை உயர்த்தப்பட்டது. கிலோவாட்டுக்கு 35 ரூபாயாக இருந்த நிலைக்கட்டணம் தடாலடியாக, 471 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மின்கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் 63 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இப்போது மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் குறைந்தது ஒரு விழுக்காடு சிறு, குறு தொழில் நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் வேலை இழப்பும், பிற பாதிப்புகளும் மிகவும் மோசமானவையாக இருக்கும்.

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கிடும் முறை அறிமுகம் செய்யப்படும் (வாக்குறுதி எண்: 9 ஏ 3) , அடுக்குமாடி குடியிருப்பு, சிறு, குறு தொழில்களுக்கான மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் (வாக்குறுதி எண்: 9 ஏ 4) என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை மறந்து விட்டு, திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை காரணம் காட்டி மின் கட்டணத்தை உயர்த்த துடிப்பது சரியல்ல.

எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவைக் காரணம் காட்டி, வீடுகள் மற்றும் தொழில், வணிகப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, கட்டண உயர்வு சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.