

























Updated on
:
1 min read
சென்னை: நீட் மறுதேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தங்கள் தேர்வு மைய நகரத்தை மே 12-க்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நேரடி முறையில் நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது கண்டறியப்பட்டதால் தேர்வை என்டிஏ ரத்து செய்தது. மேலும், முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தங்கள் தேர்வு மைய நகரத்தை மாற்றிக் கொள்ள என்டிஏ தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in எனும் வலைத்தளத்தில் சென்று மே 25-ம் தேதிக்குள் நகரங்களை மாற்றிக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம் என்று என்டிஏ தகவல் தெரிவித்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。