惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
U
Unit 42
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
月光博客
月光博客
D
Docker
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
DataBreaches.Net
阮一峰的网络日志
阮一峰的网络日志
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
Visual Studio Blog
博客园 - 聂微东
A
About on SuperTechFans
腾讯CDC
Jina AI
Jina AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் அ...
மோகன் கணபதி · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற் தவெக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை அமல்படுத்துவது குறித்து புதிதாக பதவி ஏற்றுள்ள தவெக அரசின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

அதாவது, நூறாண்டு வழக்கமா? நீதிமன்ற தீர்ப்பா? என்று யோசிப்பதாக அரசு கூறியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டத்தின் மாண்பை மதித்து நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தான் கடமை. நீதிமன்றம் தீர விசாரணை நடத்தும்போது தனது கருத்தை தெரிவிப்பதோடு அரசின் நிலைப்பாடு முடிவுக்கு வந்துவிடுகிறது.

ஆனால், தீர்ப்பை அமல்படுத்தாமல் தற்போது மக்களை குழப்புவது போல நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்வது தவெக அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிகாட்டுவதாக உள்ளது. மேலும், தவெக மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகிறது.

தவெக அரசானது திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுத்தான் ஆட்சியை தக்க வைத்துள்ளது. திமுகவின் இந்து விரோத, மக்கள் விரோத செயல்பாட்டை முதல்வர் ஜோசப் விஜய் தொடர நிர்ப்பந்திக்கப்படுகிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்களை மக்கள் தூக்கி எறிந்து ஜோசப் விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றால் அதற்கு காரணம் இந்து விரோதமாக செயல்பட்டு மக்களின் வெறுப்பிற்கு ஆளானதுதான். அதை உணராமல் தவெக இன்னும் ஒரு திமுகவாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையை பொய்த்துப் போக வைக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்த இந்து முன்னணி மாநில பொதுக்குழுவில், பக்தர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வருகின்ற கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, கடந்த ஆட்சியைப் போல நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காது, தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வாழும் முருக பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் ‌ஜோசப் விஜய் அரசு கருத்து தெரிவித்து இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு, நீதிமன்ற தீர்ப்பின்படி கார்த்திகை அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டுகோள் வைக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.