惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
雷峰网
雷峰网
GbyAI
GbyAI
Hugging Face - Blog
Hugging Face - Blog
N
Netflix TechBlog - Medium
博客园 - 聂微东
Y
Y Combinator Blog
罗磊的独立博客
博客园_首页
小众软件
小众软件
有赞技术团队
有赞技术团队
爱范儿
爱范儿
F
Fortinet All Blogs
C
Check Point Blog
Google DeepMind News
Google DeepMind News
云风的 BLOG
云风的 BLOG
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
M
MIT News - Artificial intelligence
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“புதிய நடுவர் மன்றத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல...
வெற்றி மயிலோன் · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: “மேகேதாட்டு விவகாரத்தில் ஒன்றிய அரசின் தன்னிச்சையான நகர்வுகளை முடக்குவதற்கும், காவிரி உபரி நீர் மீது தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் ஒரு தலைசிறந்த அணுகுமுறையாக புதிய நடுவர் மன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” என அமைச்சர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது குறித்த அரசின் முன்மொழிவுக்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் படியே புதிய நடுவர் மன்ற கோரிக்கை தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தனது உத்தியை மாற்றியுள்ளது. திட்ட அறிக்கை கொடுக்கச் சொல்லி கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்தால் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை அமைய வழிவகுத்து விடும். இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். கர்நாடகம் தனது உத்தியை மாற்றியுள்ளது. அதனால் நாமும் புதிய நடுவர் மன்றம் அமைக்க தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று கூறினார்.

இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் மேகேதாட்டு விவகாரம் குறித்து விரிவாக விளக்கம் அளித்த அமைச்சர் என்.ஆனந்த், “மேகேதாட்டு விவகாரத்தில் கடந்த மே 25 ஆம் தேதி அரசு தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய் மேல் நடவடிக்கை குறித்து ஆலோசித்தார். அதன் பின்னர் முதல்வர் மே 26-ல் பிரதமருக்கு கடிதம் வாயிலாகவும், மே 27-ல் பிரதமரை நேரில் சந்தித்தும் மேகேதாட்டு திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். முதல்வரின் உத்தரவின் படி, புது டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் தமிழக அரசின் சார்பாக மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்து மே 27-ல் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், ஜூன் 18 அன்று அமைச்சர்கள், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து மேகேதாட்டு திட்டத்தை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழியவும், அதற்கு உறுப்பினர்களின் ஆதரவைக் கோரவும் முடிவெடுத்தார்கள். இந்த தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த மார்ச் 4 ஆம் தேதி தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு மேகேதாட்டு விவகாரத்தில் ஒரு புதிய நடுவர் மன்றம் அமைக்க முன்மொழிவு அனுப்பியதை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன்படி ஜூன் 19-ல் நடுவர் மன்றம் அமைக்குமாறு வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை அன்றே தனது நேர்முக கடிதம் வாயிலாக பிரதமருக்கு முதல்வர் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு மேகேதாட்டு திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. ஆனால், நடுவர் அமைக்குமாறு கோருவது சரியான அணுகுமுறை இல்லை என சிலர் கருதுகின்றனர். சில தரப்பினர் பரப்பும் தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசின் நேர்த்தியான அணுகுமுறை குறித்து அவையில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

கடந்த நவம்பர் 13 அன்று மேகேதாட்டு அணை திட்டத்துக்கு எதிராக நாம் தொடர்ந்த வழக்கை, இத்திட்டம் ஆரம்ப நிலையில் தான் உள்ளது எனக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பின் பேரால் மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கர்நாடகா மற்றும் கேரளா தன்னிச்சையாக அனுமதிக்கப்படாத திட்டங்களை கையில் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

கடந்த டிசம்பர் 25-ல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக காவிரி நீர்வளத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மேலும், கடந்த மே மாதம் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சக கடிதம் மூலம், மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்ட அறிக்கை டிபிஆர் மீது தனது தொழில்நுட்ப கருத்துக்களை வழங்கி அடுத்த கட்ட நகர்வுக்கு காத்திருப்பது அம்பலமாகியுள்ளது. எனினும், இந்த வழிகாட்டுதல்களை கடுமையாக எதிர்த்து தமிழக அரசு ஜூன் 9 அன்று கடிதம் எழுதியுள்ளது. இந்தச் சூழலை கருத்தில் கொண்டு மே 27-ல் பிரதமரை சந்தித்தபோது மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான கவலைகளை குறிப்பிட்டு முதல்வர் கடிதம் அளித்துள்ளார்.

2018-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு உறுதி செய்யப்பட்ட நீர் பங்கீட்டை எந்த ஒரு புதிய நடுவர் மன்றமும் மாற்ற முடியாது. எனவே தமிழகத்துக்கு கர்நாடகா அளிக்க வேண்டிய 177. 25 டிஎம்சி யில் எந்த மாற்றமும் ஏற்படாது. 1956-ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப்பிரிவு 4, 1-ன் படி ஏற்கெனவே தீர்க்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் திறக்க சட்டத்தில் இடமில்லை.

2018-ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் உபரி நீர் குறித்து துல்லியமாக கணக்கிடப்படவில்லை, எனவே இதுபற்றி கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு அசல் வழக்கை தொடர்ந்தது. 1956-ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப்படி, இத்தகைய புதிய நதி நீர் பிரச்சினையை தீர்க்க புதிய நடுவர் மன்றத்தால் மட்டுமே முடியும் என்பது உச்ச நீதிமன்றத்தில் நமது வாதம் ஆகும். காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விட்டது எனக் கூறுவது முற்றிலும் தவறானது. காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வில்லை. மாறாக எவ்வித கருத்தும் கூறாமல் மத்திய நீர்வள ஆணையத்திடமே திருப்பி அனுப்பியுள்ளது. எனவே, ஆபத்து இன்னும் நீங்கவில்லை.

ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் புதிய வழிகாட்டுதலின் கீழ் மறைமுகமாக மேகேதாட்டு திட்டத்தை மேற்கொள்ள முற்படும் வேளையில் நாம் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. அந்த வகையில் ஒன்றிய அரசின் தன்னிச்சையான நகர்வுகளை முடக்குவதற்கும், உபரி நீர் மீது தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் ஒரு தலைசிறந்த அணுகுமுறையாக புதிய நடுவர் மன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.