

























திருவாரூர்: திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்த தவெக ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த 27 வயதுடைய இளம் பெண், தனது தந்தை வருகைக்காக காத்திருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்தவரும், தவெக திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளருமான ஆனந்த் (34), இவரது நண்பர் அசோக்(32) ஆகியோர் தனியாக நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த இளம்பெண்ணின் தந்தை, அவர்களை கண்டித்ததுடன், தனது மகளுடன் சென்று திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த், அசோக் ஆகியோரை கைது செய்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。