惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
Recent Announcements
Recent Announcements
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
Docker
Microsoft Security Blog
Microsoft Security Blog
宝玉的分享
宝玉的分享
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
GbyAI
GbyAI
博客园 - Franky
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog RSS Feed
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
月光博客
月光博客
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜூலை 1-ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல் போராட்டம்: மாற்றுத்...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

Updated on: 

சென்னை: 125 நாட்​கள் வேலை வழங்​கும் வி.பி.ஜி ராம் ஜி புதிய சட்​டத்தை திரும்ப பெறக் கோரி, தமிழகத்​தில் 200-க்​கும் மேற்பட்ட மையங்​களில் ஜூலை 1ல் கருப்​புக் கொடி ஏந்தி மறியல் போராட்​டத்​தில் ஈடுபட தமிழக அனைத்​து​ வகை மாற்​றுத்​ திறனாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்கத்தினர் முடிவு செய்​துள்​ளனர்.

இது குறித்​து, சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் தோ.​வில்​சன், மாநில பொதுச்​செய​லா​ளர் பா.ஜான்​சி​ ராணி ஆகியோர் கூட்​டாக வெளியிட்ட அறிக்​கை: அண்​மை​யில், எங்​கள் சங்​கத்​தின் மாநிலக் ​குழு கூட்​டம் கன்​னி​யாகுமரி மாவட்​டம் திற்​பரப்​பில் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்றப்​பட்​டன.

அதில் ஒன்​றாக, மாற்​றுத்​திற​னாளி​கள் உட்பட கிராமப்​புற விவசாய கூலித் தொழிலா​ளர்​கள் பயன்​பெற்று வந்த “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​துக்​குப்” பதிலாக ஜூலை 1 முதல் விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்​டத்தை மத்​திய அரசு அமல்​படுத்தி மாற்​றுத்​ திற​னாளி​களின் வாழ்​வா​தா​ரத்தை சிதைக்க திட்​ட​மிட்​டுள்​ளதை கண்​டித்​தும், இந்த புதிய சட்​டத்தை உடனே திரும்​பப் பெற கோரி​யும், தற்​போது நடை​முறை​யில் உள்ள மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​தையே தொடர்ந்து அமல்​படுத்த வலி​யுறுத்​தி​யும், புதிய சட்டம் அமலுக்கு வரும் ஜூலை 1ம் தேதியை கருப்பு தின​மாக அனுசரித்​து, கருப்​புக் கொடி ஏந்​தி​ தமிழகம் முழு​வதும் 200-க்​கும் மேற்​பட்ட மையங்​களில் மறியல் போராட்​டம் நடத்த முடிவு செய்யப்​பட்​டது.

மாற்​றுத்​ திற​னாளி​களுக்கு தமிழக அரசால் வழங்​கப்​படும் மாதாந்​திர உதவித்​ தொகைக்கு புதி​தாக விண்​ணப்​பித்த ஆயிரக்கணக்​கான மாற்​றுத்​ திற​னாளி​கள் கடந்த பல மாதங்களாக உதவித்​தொகை கிடைக்​காமல் காத்​திருக்​கின்​றனர். மாற்​றுத் ​திற​னாளி​களை போராட்​டத்​துக்கு இட்​டுச் செல்​லாமல் அவர்​கள் அனை​வருக்​கும் உடனடி​யாக உதவித்​ தொகை வழங்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.