惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
美团技术团队
博客园 - 司徒正美
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
阮一峰的网络日志
阮一峰的网络日志
S
SegmentFault 最新的问题
博客园_首页
雷峰网
雷峰网
V
V2EX
The Cloudflare Blog
博客园 - 三生石上(FineUI控件)
量子位
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 聂微东
V
Visual Studio Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
Jina AI
Jina AI
月光博客
月光博客
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கேரள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: காங். வரவேற்பு...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

திருவனந்தபுரம்: கேரள சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்பை காங்​கிரஸ் வரவேற்​றுள்​ளது. இடது​சாரி கட்​சி​யும் பாஜக​வும் நிராகரித்​துள்​ளன.

கேரள சட்​டப்​பேர​வை​யில் மொத்​த​முள்ள 140 இடங்​களுக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது. இதன் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக் கணிப்பு நேற்று வெளி​யானது. இதில் காங்​கிரஸ் தலை​மையி​லான யு​டிஎப் கூட்​டணி இங்கு ஆட்​சியை கைப்​பற்​றும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆளும் இடதுசாரி கூட்டணி தோல்வியை சந்திக்கும், பாஜக சில இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்படிருந்தது. இந்த முடிவு​களை காங்​கிரஸ் கட்சி வரவேற்​றுள்​ளது.

இதுகுறித்து கேரள மாநில காங்​கிரஸ் தலை​வர் சன்னி ஜோசப், கட்​சி​யின் மூத்த தலை​வர் கே.​முரளீதரன் ஆகியோர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “நாங்​கள் கணித்​தது போலவே கருத்​துக்​கணிப்பு முடிவு வெளி​யாகி​யுள்​ளது. இத்​தேர்​தலில் நாங்​கள் வெற்று பெறு​வது உறு​தி. மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கைக்கு பிறகு யுடிஎப் ஆட்சி அமைக்​கும். முன்​ன​தாக முதல்​வர் யார் என்று முடிவு செய்​யப்​படும்” என்று தெரி​வித்​தனர்.

எல்​டிஎப் கூட்​ட​ணி​யில் உள்ள இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் சாதிக் அலி ஷிகாப் தங்​கல் கூறுகை​யில், “கருத்​துக்​கணிப்பு முடி​வில் வெளி​யான தொகு​தி​களை விட கூடு​தல் தொகு​தி​களை நாங்​கள் பெறு​வோம்” என்​றார். அதேவேளை​யில் இந்த முடிவு​களை மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணி​யும் (எல்​டிஎப்), பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யும் ஏற்​க​வில்​லை.

எல்​டிஎப் தரப்​பில் மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் எம்​.​வி.கோ​விந்​தன் உள்​ளிட்ட தலை​வர்​கள் கூறுகை​யில், “இந்​தக் கருத்​துக்​கணிப்பு முடிவு​கள் எவ்​வித முக்​கி​யத்​து​வ​மும் அற்​றவை. 2021-ம் ஆண்டு தேர்​தலில் எல்​டிஎப் தோல்வி அடை​யும் என கருத்​துக்​கணிப்​பு​கள் வந்​தன. ஆனால் அவை தவறென நிரூபிக்​கப்​பட்​டது.

இத்​தேர்​தலில் நாங்​கள் வெற்றி பெறு​வது உறு​தி. நாங்​கள் மூன்​றாவது முறை​யாக ஆட்​சிக்கு வரு​வோம். பாஜக 3 முதல் 14 இடங்​கள் வரை வெற்றி பெறும் என்​பதும் ஏற்க முடி​யாது. அக்​கட்சி ஒரு இடத்​தைக் கூட கைப்​பற்​றாது” என்று தெரி​வித்​தனர். பாஜக தலை​வர் பி.கே.கிருஷ்ண​தாஸ் கூறுகை​யில், “கேரளா​வில் ஆளும் கட்​சிக்கு எதி​ரான மனநிலை உள்​ளது. அதே சமயம் யுடிஎப் கூட்டணிக்கு சாதகமான அலை எதுவும் வீசவில்லை. கணிக்கப்பட்டதை விட அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.