惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
IT之家
IT之家
博客园_首页
量子位
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
博客园 - 聂微东
罗磊的独立博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
V2EX
爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
宝玉的分享
宝玉的分享
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
有赞技术团队
有赞技术团队
S
SegmentFault 最新的问题
Engineering at Meta
Engineering at Meta
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திமுக ‘கூட்டணி’ ஆட்சியா? - கருத்துக் கணிப்பு முடிவுகள் மீ...
2026-04-30 · via hindutamil
பாரதி ஆனந்த்

தமிழகத்தில் திமுக ஆட்​சி​யைத் தக்க வைக்​கும் என்றே பெரும்பாலான தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தாலும், அது தனிப்பெரும்பான்மை அல்லாத திமுக கூட்டணி ஆட்சியாகவே இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்தல் வாக்​குப்​ப​திவு கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடைபெற்றது. ஆளும் கட்​சி​யான திமுக தலைமையிலான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்டணி, பிர​தான எதிர்க்கட்சி​யான அதி​முக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, முதல் முறை​யாகத் தேர்​தலைச் சந்திக்​கும் விஜய்​யின் தவெக மற்​றும் சீமானின் நாதக என 4 முனைப் போட்டி நில​வியது .

இந்த நிலையில், தமிழகத்​தைப் பொறுத்​தவரை, பல்​வேறு நிறு​வனங்​களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக சாணக்​கியா ஸ்ட்​ராடஜிஸ், என்​டிடி​வி, ரிபப்​ளிக் டிவி கருத்​துக் கணிப்​பின்​படி திமுக தலை​மையி​லான கூட்டணி பெரும்பான்மை இடங்​களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், சிஎன்​என் கணிப்​பில் அதி​முக ஆட்​சி​யைப் பிடிக்​கும் எனவும், இந்​தியா டுடே முடிவு​களில் தவெக முன்னிலை வகிக்​கும் என்றும், காமாக்யா கணிப்​பில் தொங்கு சட்​டப்​ பேரவைக்கான வாய்ப்​பு இருப்​ப​தாக​ கூறப்பட்டுள்​ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி தேவை எனும் நிலையில், திமுக கூட்டணி 125 முதல் 145 வரையிலான தொகுதிகளை வெல்லும் என என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் தெரிவித்துள்ளது. 92 முதல் 110 வரை வெல்லும் என இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியாவும், 75 முதல் 95 வரை வெல்லும் என டைம்ஸ் நவ் - ஜேவிசியும், 125 முதல் 145 வரை வெல்லும் என ரிபப்ளிக் டிவி + பி-மார்க்கும், 122 முதல் 132 வரை வெல்லும் என ரிபப்ளிக் டிவி - மாட்ரிஸும் தெரிவித்துள்ளன.

அதேபோல், திமுக கூட்டணி 145 முதல் 160 இடங்கள் வரை வெல்லும் என சாணக்யா - ஸ்டார்டஜிஸும், 89 முதல் 101 வரை வெல்லும் என ஸ்பைக் மீடியாவும், 78 முதல் 95 வரை வெல்லும் என காமாக்யாவும், 103 முதல் 113 வரை வெல்லும் என சிஎன்பிசி டிவி 18 நிறுவனமும் கணித்துள்ளன.

இவற்றில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின் முடிவுகள், திமுக கூட்டணி குறைந்தபட்சம் 120 தொகுதிகளையும், அதிகபட்சம் சராசரியாக 140 இடங்களையும் வெல்லும் என கணித்துள்ளதால், இந்தக் கணிப்புகள் அப்படியே மே 4-ல் வெளிவரும் தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப்போகும் பட்சத்தில், தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் துணையுடன் திமுக கூட்டணி அரசு அமைவதற்கான சாத்தியம் அதிகம் என்று அரசியல் நோக்கர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.

அவ்வாறு, தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அல்லாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் நிலவும் பட்சத்தில், அதற்கு விஜய்யின் தவெக பிரிக்கக் கூடிய வாக்குகளே முதன்மைக் காரணியாக இருக்கக் கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

திமுக வாக்குகளை சற்று வசப்படுத்தியதால், அக்கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலும், அதிமுக வாக்குகளை வசப்படுத்தியதால் அக்கட்சி ஆட்சியைக் கைப்பற்ற முடியாத சூழலுக்கும் விஜய் வித்திட்டுள்ளார் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லக் கூடிய சேதியாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கருத்துக் கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்தேறுவதும் உண்டு, எதிர்மறையாக நடப்பதும் உண்டும். அதனாலேயே எப்போதும் அவை டிஸ்க்ளெயமருடன் வரும். இந்த முறை கூடவே கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் சில ‘ஹெல்த் அலர்ட்’ என்று குறிப்பிட்டு இவை கணிப்புகள் மட்டுமே உறுதியான முடிவு மே.4-ல் தெரியவரும் என்றும் கூறியிருக்கின்றன.

விஜய்யின் தவெக தேர்தலில் தனித்து நின்று, பரிச்சயம் இல்லாத முகங்களை வேட்பாளர்களாக இறக்கி தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுகவுக்கு இத்தகைய வலுவான போட்டியை ஏற்படுத்தியிருப்பதே அதன் வெற்றிதான் என்று சொல்கின்றனர் நிபுணர்கள். ஆரம்பமே முதலே தெளிவான திமுக எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கையில் எடுத்த விஜய் கூடவே தன்னை எம்ஜிஆர் போல கட்டமைத்த பிம்பம் தான் பெண்கள், மூதாட்டிகள் வாக்குகளையும் அவருக்கு மடைமாற்றியிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் சினிமாவில் கோலோச்சிய எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் அரசியலில் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜய் என்றால் அது நிச்சயம் மிகைமொழியல்ல என்றும் கூறுகின்றனர். விஜய் எஃபெக்ட் காரணமாகத் தான் தமிழகத்துக்கான கருத்துக் கணிப்பை துல்லியமாக இப்படித்தான் என்று சொல்ல முடியாமல் பல்வேறு கருத்துக் கணிப்பு நிறுவனங்களும் மாறுபட்ட கணிப்புகளை வெளியிட்டிருப்பதாக சுட்டிக்காட்டும் நிபுணர்கள், மே 4 ரிசல்ட் வரை காத்திருப்போம் என மக்கள் தீர்ப்பை பிரதானப்படுத்தி நழுவுகின்றனர்.