惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
G
Google Developers Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog
T
The Blog of Author Tim Ferriss
J
Java Code Geeks
Y
Y Combinator Blog
月光博客
月光博客
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
P
Proofpoint News Feed
小众软件
小众软件
H
Help Net Security
Last Week in AI
Last Week in AI
B
Blog RSS Feed
宝玉的分享
宝玉的分享
N
Netflix TechBlog - Medium
博客园 - 叶小钗
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகம் முழுவதும் 40 ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் சோதனை: லஞ்ச ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனை.

Updated on: 

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கங்​களில் 40 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பிடிபட்டது.

அரசு அலு​வல​கங்​களில் பொது மக்​களுக்கு சேவை வழங்க அதி​காரி​கள் லஞ்​சம் பெறு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதையடுத்​து, சம்​பந்​தப்​பட்ட இடங்​களில் அடுத்​தடுத்து சோதனை நடத்த தமிழக லஞ்ச ஒழிப்​புத்​துறை இயக்​குநர் (கூடு​தல் டிஜிபி) அருண் அப்​பிரிவு அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார். அதன்​படி, கடந்த 4-ம் தேதி தமிழகம் முழு​வ​தி​லும் 62 சார் பதி​வாளர் அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், கணக்​கில் வராத ரூ.37.76 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் ஆர்​டிஓ (வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கம்) அலு​வல​கங்​களில் வாகனப் பதிவு, ஓட்​டுநர் உரிமம் வழங்​குதல், தகு​திச் சான்று உள்​ளிட்ட பணி​களுக்​காக பொது​மக்​களிடம் லஞ்​சம் பெறப்​படு​வ​தாக புகார் எழுந்​தது. இதையடுத்​து, அங்கு சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்​குநர் உத்​தர​விட்​டார்.

அதன்​படி லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கங்​கள், மோட்​டார் வாகன ஆய்​வாளர் அலு​வல​கங்​கள் மற்​றும் இடைத்​தரகர்​களாக செயல்​பட்ட ஓட்​டுநர் பயிற்சி பள்​ளி​களில் நேற்று பிற்​பகல் முதல் ஒரே நேரத்​தில் சோதனை மேற்​கொண்​டனர். குறிப்​பாக, சென்னை வளசர​வாக்​கம் புளியந்​தோப்​பு, கொளத்​தூர், அண்​ணாநகர், காஞ்​சிபுரம், வேலூர், பூந்​தமல்​லி, அரக்​கோணம், செங்​கல்​பட்​டு, கள்​ளக்​குறிச்​சி, சிதம்​பரம், திரு​வண்​ணா​மலை, திருச்சி மேற்​கு, அரியலூர், பெரம்​பலூர், குளித்​தலை, புதுக்​கோட்டை ஆலங்​குடி, கும்​பகோணம், தஞ்​சாவூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, கோயம்​புத்​தூர் மத்​தி,பெருந்​துறை, நீல​கிரி, கூடலூர், தருமபுரி, பாலக்​கோடு, கிருஷ்ணகிரி, திருப்​பூர் தெற்​கு,பரமத்​திவேலூர், சேலம் மேற்​கு, வாடிபட்​டி, பரமக்​குடி, ஸ்ரீவில்​லிபுத்​தூர், பழனி, உத்​தம​பாளை​யம், திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், தென்​காசி, தூத்​துக்​குடி, திருப்​பத்​தூர், காரைக்​குடி என 40 இடங்​களில் ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தினர்.

அப்​போது, அலு​வலக கதவு​கள் மூடப்​பட்டு உள்ளே இருந்த அதி​காரி​கள், பணி​யாளர்​கள் வெளியே செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. அவர்​களது செல்​போன்​கள் பெறப்​பட்டு தனி இடத்​தில் வைக்​கப்​பட்​டன. அலு​வல​கத்​துக்கு வந்த பொது​மக்​கள் வெளியே செல்ல வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​பட்​டது. இந்த சோதனை​யின்​போது அலு​வல​கங்​களில் இருந்த ஆவணங்​கள், பண பரிவர்த்​தனை விவரங்​கள் மற்​றும் முக்​கிய பதிவேடு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன. மேலும், அலு​வலக ஊழியர்​கள், இடைத்​தரகர்​கள் மற்​றும் அலு​வலக பணி​களு​டன் தொடர்​புடைய நபர்​களிடம் அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

சோதனை​யின் முடி​வில் கணக்​கில் வராத ரூ.31 லட்​சத்து 85,700 கைப்​பற்​றப்​பட்​டது. மேலும், ஜிபே மூலம் ரூ.5 லட்​சத்து 95,468 பரி​மாறியதும் கண்​டறியப்​பட்​டது.

குறிப்​பாக, ‘ஜிபே’ மூலம் காரைக்​குடி ஆர்​டிஓ அலு​வல​கத்​தில் ரூ.2.50 லட்​சம், திருப்​பத்​தூரில் ரூ.88,580, பெருந்​துறை​யில் ரூ.2,400, ஆலங்​குடி​யில் 1 லட்​சத்து 55,850, செங்​கல்​பட்​டில் ரூ.98,688 பெறப்​பட்​டிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

அதோடு ரொக்​க​மாக அதி​கபட்​சம் மயி​லாடு​துறை​யில் 1 லட்​சத்து 75,730 ரூபாய் பறி​முதல் செய்​யப்​பட்​டது. ஆலங்​குடி​யில் ஜிபே மூலம் பணப்​பரி​மாற்​றம் செய்​யப்​பட்ட நிலை​யில், ரொக்​க​மாக​வும் ரூ.3,000 பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதே​போல், சோதனை நடை​பெற்ற 40 இடங்​களி​லும் சிறிதும், பெரிது​மாக கணக்​கில் வராத கட்​டுக்​கட்​டாக பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டிருந்​தது.