惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
小众软件
小众软件
博客园 - 叶小钗
宝玉的分享
宝玉的分享
博客园_首页
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
S
SegmentFault 最新的问题
B
Blog RSS Feed
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
Google DeepMind News
Google DeepMind News
U
Unit 42
F
Fortinet All Blogs
IT之家
IT之家
Y
Y Combinator Blog
Martin Fowler
Martin Fowler
T
The Blog of Author Tim Ferriss
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல்: அமைச்சர் விக்னே...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக அரசு மூடிய 717 டாஸ்மாக் கடைகளின் பட்​டியலை, மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் விக்​னேஷ் வெளி​யிட்​டார்.

தமிழகத்​தில் 4,765 டாஸ்​மாக் மது​பான சில்​லறை விற்​பனை கடைகள் இயங்கி வந்த நிலை​யில், தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பெற்ற பின், வழி​பாட்டு தலங்​கள், கல்வி நிறு​வனங்​கள், போக்​கு​வரத்து முனை​யங்​கள் அரு​கில் இருக்​கும் 717 டாஸ்​மாக் கடைகளை மூட உத்​தர​விட்​டார்.

இதையடுத்​து, அத்தகைய கடைகளை மூடும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தது. இதற்​கிடையே, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், ‘அரசால் மூடப்​பட்​ட​தாக அறிவிக்கப்​பட்ட கடைகள் குறித்து தகவல் அறி​யும் உரிமை சட்​டத்​தில் கேட்​டபோது, அதை வெளி​யிட அரசு மறுப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார்.

இந்​நிலை​யில், அரசு அறி​விப்​பின்​படி 717 கடைகள் மூடப்​பட்​ட​தாக மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்​சர் விக்னேஷ் தெரி​வித்​துள்ளார். மேலும், மூடப்​பட்ட கடைகளின் பட்டியலை​யும் வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் கடைகளின் எண், எந்த மாவட்​டத்​தில் மற்​றும் மண்​டலத்​தில், மொத்​தம் எத்​தனை கடைகள் மூடப்​பட்​டுள்ளன என்ற தகவல்கள் இடம்​பெற்​றுள்​ளன. அதன்​படி, மதுரை மண்​டலத்​தில் அதி​கபட்​ச​மாக 290 கடைகள் மூடப்​பட்​டுள்​ளன.

இந்த மண்​டலத்​தில் தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் 63 கடைகளும், விருதுநகர் மாவட்​டத்​தில் 42 கடைகளும், மதுரை தெற்​கில் 39, திருநெல்​வேலி 33, ராம​நாத​புரத்​தில் 29, திண்​டுக்​கல்லில் 25, சிவகங்​கை​யில் 18, மதுரை வடக்கு 13, கன்​னி​யாகுமரி​யில் 15, தேனி​யில் 12 கடைகள் மூடப்​பட்​டுள்​ளன.

கோவை மண்​டலத்​தில் 179 கடைகள் மூடப்​பட்​டுள்​ளன. இந்த மண்​டலத்​தில் கோவை வடக்​கில் 48, ஈரோட்​டில் 42, திருப்​பூரில் 31, நீல​கிரி​யில் 27, கோவை தெற்​கில் 23, கரூரில் 8 கடைகள் மூடப்​பட்​டுள்​ளன.

சென்னை மற்​றும் சேலம் மண்டலங்​களில் தலா 82 கடைகள் மூடப்​பட்​டுள்​ளன. சென்னை மண்​டலத்​தில் திரு​வள்​ளூர் கிழக்​கில் 27 கடைகள், வடசென்னை 13, காஞ்​சிபுரம் வடக்கு 10, தென் மற்​றும் மத்​திய சென்​னை​யில்தலா 9, காஞ்​சிபுரம் தெற்கு 8, திரு​வள்​ளூர் மேற்கு 6 கடைகள் மூடப்​பட்​டுள்​ளன.

சேலம் மண்​டலத்​தில் சேலம் மாவட்​டத்​தில் 22, திரு​வண்​ணா​மலை 19, நாமக்​கல் 14, வேலூரில் 6, அரக்​கோணம், கிருஷ்ணகிரி, தரு​மபுரி​யில் தலா 7 கடைகள் மூடப்​பட்​டுள்​ளன. திருச்சி மண்​டலத்​தில் 84 கடைகள் மூடப்​பட்​டுள்​ளன.

இந்த மண்​டலத்​தில் கடலூரில் 21, புதுக்​கோட்டையில் 17, திருச்சியில் 15, விழுப்​புரத்தில் 9, நாகையில் 4, திரு​வாரூர், தஞ்​சை, பெரம்​பலூரில்​ தலா 6 கடைகள் மூடப்பட்டுள்ளன.