惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
宝玉的分享
宝玉的分享
月光博客
月光博客
爱范儿
爱范儿
阮一峰的网络日志
阮一峰的网络日志
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 叶小钗
U
Unit 42
aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
V
Visual Studio Blog
腾讯CDC
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
செய்திப்பிரிவு · 2026-05-16 · via hindutamil

Updated on: 

சென்னை: நடப்பு மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேற்று செலுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல 15-ம் தேதி பணம் வரவு வைக்கப்பட்டதால், பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த திமுக ஆட்சியில் 2023-ம் ஆண்டு செப். 15-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. தகுதி வாய்ந்த பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்பு தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த பிப்.13-ம் தேதி வரவு வைக்கப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாதாந்திர உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. முன்னதாக, தவெக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்று தேர்தலின்போது அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இந்த சூழலில், முதல்வர் விஜய் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும். அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. எனினும், நடப்பு மே மாதத்துக்கான உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

திட்டத்தை மறுசீரமைக்கும் அரசின் முடிவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மாதம்தோறும் உதவித் தொகை பெற்று வந்த பெண்களும், உதவித் தொகையை எதிர்நோக்கி இருந்தனர். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று செலுத்தப்பட்டுள்ளது.

வழக்கம்போல மாதத்தின் 15-ம் தேதியே வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்வர் விஜய் தனது வாக்குறுதிப்படி ரூ.2,500 எப்போது வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் பெண்களிடம் எழுந்துள்ளது. புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் 14-ம் தேதி வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.