惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏
Jina AI
Jina AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
美团技术团队
雷峰网
雷峰网
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
U
Unit 42
C
Check Point Blog
S
SegmentFault 最新的问题
Martin Fowler
Martin Fowler
Stack Overflow Blog
Stack Overflow Blog
云风的 BLOG
云风的 BLOG
L
LangChain Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
罗磊的独立博客
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மலைக்கோட்டையை ஆளும் இளம் படை - மாற்றங்களை எதிர்நோக்கும் த...
ர.செல்வமுத்துகுமார் · 2026-06-18 · via hindutamil

Updated on: 

திருச்சி: திருச்சி மாவட்ட நிர்வாகத்தில் தற்போது அமைச்சர், ஆட்சியர், எஸ்.பி., மாநகராட்சி ஆணையர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இளம் வயதினர் பொறுப்பேற்றுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தின் இதயமான திருச்சியில் முக்கிய கோயில்கள், பன்னாட்டு விமான நிலையம், பெல், தேசிய தொழில்நுட்பக் கழகம், பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சமீபத்தில் பிரத்திக் தாயள் பொறுப்பேற்றுள்ளார். சட்டப்படிப்பை முடித்து முதல் முயற்சியிலேயே குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று, 2017-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.

நிதித் துறை, பட்ஜெட் நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவத்துடன், தற்போது 33 வயதில் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். இதேபோல, திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வீர பிரதாப் சிங், மாநிலத்தின் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர்.

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான இவர், 2019-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து, தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளராகவும், மேட்டூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் முக்கிய நிர்வாக பொறுப்புகளையும் வகித்து, தற்போது 31 வயதில், திருச்சி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய மண்டல காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் உமேஷ் டோங்கரே, 39 வயதில் திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளார். மாவட்டத்தின் சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை, குற்றத் தடுப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை கையாளும் பொறுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், திருச்சி மாவட்ட வனத் துறையிலும் 2020-ம் ஆண்டு முதல் இந்திய வனப்பணி அலுவலராக எஸ்.கிருத்திகா பணியாற்றி வருகிறார். 33 வயதான இவர், மாவட்டத்தின் வன வளங்கள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடும் திட்டங்கள், உயிரின வள மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

அரசியலிலும்...

நிர்வாக அமைப்புகள் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் திருச்சியில் இளம் தலைமுறை முன்னணியில் உள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக உள்ள 31 வயதேயான ரமேஷ், மாநில அமைச்சரவையின் இளம் உறுப்பினர்களில் ஒருவராகவும், திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார்.

இவர் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திலேயே தமிழக கோயில்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

மக்கள் எதிர்பார்ப்பு

நகர்ப்புற விரிவாக்கம், போக்குவரத்து நெரிசல், குடிநீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுலா மேம்பாடு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திருச்சி அடுத்த சில ஆண்டுகளில் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கி உள்ளது.

இதுகுறித்து திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘தற்போது முக்கிய பொறுப்புகளில் உள்ள இளம் அதிகாரிகள், அரசுத் திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிப்பது முதல் பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்ப்பது வரை பல்வேறு துறைகளிலும், தொழில்நுட்ப பயன்பாடு, டிஜிட்டல் கண்காணிப்பு, மக்கள் தொடர்பு போன்ற புதிய அணுகுமுறையை கொண்டு மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் விரைந்து எடுத்துச்செல்ல வேண்டும்’’ என்றனர்.