惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
WordPress大学
WordPress大学
H
Help Net Security
D
Docker
B
Blog
腾讯CDC
A
About on SuperTechFans
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
有赞技术团队
有赞技术团队
C
Check Point Blog
Y
Y Combinator Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது சட்டப்படி சரியா, தவ...
2026-05-08 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தமிழகத்​தில் அதிக இடங்​களில் வெற்றி பெற்ற தவெக தலை​வர் விஜய்​யிடம் ஆளுநர் மாளி​கை​யிலேயே பெரும்​பான்​மையை நிரூபிக்​கக் கூறியது அரசி​யலமைப்பு சட்ட ரீதி​யாக சரி​யா, தவறா என சென்னை உயர் நீதி​மன்ற சட்ட நிபுணர்​கள் விளக்​கம் அளித்​துள்​ளனர்.

ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதி​மன்ற மூத்த வழக்​கறிஞர் அபுடு​கு​மார் ராஜரத்​தினம் கூறும்​போது, “பொது​வாக தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஒரு கட்சி தனிப்​பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​றுள்​ளது என்​றால் ஆளுநர் நேரடி​யாகவே அந்த கட்​சியை ஆட்​சி​யமைக்​கும்​படி அழைப்பு விடுப்​பார்.

தொங்கு சட்​டப்​பேரவை அமை​யும்​ போது கூட்​டணி ஆட்சி அல்​லது எந்த கட்சி அதிக இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளதோ அந்த கட்சி தனது பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டுமென அரசி​யலமைப்பு சட்ட பிரிவு​கள் 163 மற்​றும் 164 பிர​காரம் ஆளுநர் அழைப்பு விடுப்​பார்.

அப்​படி அழைப்பு விடுக்​கும்​போது முதலில் அக்​கட்​சி​யின் சார்​பில் தேர்வு செய்​யப்​படும் தலை​வருக்கு தமிழக முதல்​வ​ராக ஆளுநர் பதவிப்​பிர​மாணம் செய்து வைப்​பார். பிறகு தற்​காலிக சட்​டப்​பேர​வைத் தலை​வர் தேர்வு செய்​யப்​பட்டு சட்​டப்​பேர​வை​யில் அனைத்து எம்​எல்​ஏ-க்​களும் பதவிப்​பிர​மாணம் எடுப்​பர்.

அதன்​பிறகே அந்​தக் கட்​சிக்கு பெரும்​பான்மை பலம் இருக்​கிற​தா, இல்​லையா என்​பதை வாக்​கெடுப்பு முறை​யில் நிரூபிக்க வேண்​டும். இது​தான் எஸ்​.ஆர்​.பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தால் நிலை​நாட்​டப்​பட்ட சட்​டப்​பூர்வ வழி​முறை.

தவெக தற்​போது 108 இடங்​களில் வெற்றி பெற்று அதிக இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக முதலிடத்​தில் உள்ளது. இந்​தச் சூழலில் ஆட்​சி​யமைக்க உரிமை கோரும்​போது விஜய் தனக்​கான பெரும்​பான்மை பலத்தை சட்​டப்​பேர​வை​யில் நிரூபித்​தால் போதும்.

அதை ஆளுநர் மாளி​கை​யில் வைத்து நிரூபித்​துக்​காட்ட வேண்​டிய அவசி​யமில்​லை. விஜய் 118 எம்​எல்​ஏ-க்​களின் ஆதரவை சட்​டப்​பேரவை தளத்​தில் நிரூபித்​துக்​காட்டி விட்​டால் அவர் முதல்​வ​ராக தொடர சட்ட ரீதி​யாக எந்த தடை​யும் இல்​லை.

ஆனால் ஒரு​வேளை விஜய் தனது பலத்தை நிரூபிக்க முடி​யா​விட்​டால் அவரது தலை​மையி​லான ஆட்சி அரசி​யலமைப்பு சட்​டப்​பிரிவு 356 பிர​காரம் கலைக்​கப்​பட்​டு, தவெக-வுக்கு அடுத்​த​படி​யாக யார் பெரும்​பான்​மையை நிரூபிக்​கிறோம் எனக் கூறுகிறார்​களோ அவர்​களுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்​டும்.

தனக்​குரிய விருப்​புரிமை அடிப்​படை​யில் விஜய்யை முதலில் அழைக்க முடி​யாது என ஆளுநர் ஒரு​போதும் கூற முடி​யாது. அப்​படிக்​கூறி​னால் அது உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு முரணானது” என்​றார்.

மத்​திய அரசு தரப்பு மூத்த வழக்​கறிஞர்​கள் கூறும்​போது, “தவெக தலை​வர் விஜய், அதிக இடங்​களில் வெற்றி பெற்​றுள்ள கட்சி என்ற அடிப்​படை​யில் தங்​களை ஆட்​சி​யமைக்க அழைக்க வேண்​டுமென ஆளுநரிடம் நேரடி​யாக உரிமை கோர​வில்​லை.

அப்​படி கோரி​யிருந்​தால், இந்​நேரம் ஆளுநர் தவெக​வுக்கு அழைப்பு விடுத்​திருப்​பார். அவர்​களும் சட்​டப்​பேர​வை​யில் தங்​களது பெரும்​பான்​மையை நிரூபித்​துக் காட்​டி​யிருக்​கலாம். ஆனால், எடுத்த எடுப்​பிலேயே எங்​களிடம் 107 எம்​எல்​ஏ-க்​கள் உள்​ளனர்.

காங்​கிரஸ் கட்​சி​யின் 5 எம்​எல்​ஏ-க்​கள் எங்​களுக்கு ஆதரவு அளித்து கடிதம் அளித்​துள்​ளனர் எனக் கூறி கூட்​டணி ஆட்சி அமைக்​கிறோம் என ஆளுநரிடம் கூறியது​தான் சிக்​கல்.

காங்​கிரஸ் கட்​சி​யின் 5 எம்​எல்​ஏ-க்​களை​யும் சேர்த்​தால்​கூட ஆட்​சி​யமைக்க தேவை​யான 118 இடங்​கள் வரவில்​லையே என்​ப​தால் ஆளுநர் பெரும்​பான்​மையை முதலில் நிரூபி​யுங்​கள், அதன்​பிறகு அழைக்​கிறேன் எனக் கூறி தவெகவை அழைக்​க​வில்​லை.

இந்த விஷ​யத்​தில் போதிய முன்​அனுபவ​மில்​லாமல் தவெக​வினர் தங்​களுக்​கான வாய்ப்பை கோட்டை விட்​டு​விட்​டு, ஆளுநரை குறை​கூறு​வது அர்த்​தமற்​றது” என்​றனர்.

முன்னாள் நீதிபதி கருத்து

ஜம்மு காஷ்மீர் உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிப​தி​யான என். பால்​வசந்​தகு​மார், தமிழகத்​தில் தவெக தவிர வேறு எந்​தக் கட்​சி​யும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலை​யில், தவெகவை ஆட்சி அமைக்​கும்​படி ஆளுநர் அழைக்​காமல் இருப்​பது ஜனநாயக சட்​ட​விரோதம், என கருத்து தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார்​ கவுன்​சில்​ உறுப்​பின​ரான வழக்​கறிஞர்​ எம்​.வேல்​முரு​கன்​ தமிழக ஆளுநரின்​ செயலுக்​கு கடும்​ கண்​டனம்​ தெரிவித்துள்ளார்.

* தமிழகத்​தில் எந்​தக் கட்​சி​யும் 118 தொகு​தி​களை பெற்​றிருக்​க​வில்லை எனில் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 4 வழி​முறை​களை பின்​பற்றி ஆளுநர் அழைப்பு விடுக்​கலாம்.

* தேர்​தலுக்கு முன்பே அரசி​யல் கட்​சிகள் ஒன்​றாக சேர்ந்து கூட்​டணி அமைத்​திருந்​தால் அந்த கூட்​ட​ணியை அழைக்​கலாம்.

* அதிக இடங்​களை கைப்​பற்​றி​யுள்ள கட்சி போதிய ஆதர​வுடன் இருந்​தால் அந்த கட்​சிக்கு அழைப்பு விடுக்​கலாம்.

* தேர்​தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்​சிகள் தங்​களுக்​குள் கூட்​டணி அமைத்து இருந்​தால் அந்த கட்​சிகளை அழைக்​கலாம்.

* வெளி​யில் இருந்து பெறப்​படும் ஆதர​வுடன் பெரும்​பான்​மையற்ற மைனாரிட்டி ஆட்​சியை அமைக்​கும் கட்​சியை அழைக்​கலாம்.

* தற்​போது விஜய் அதிக இடங்​களை கைப்​பற்​றி​யுள்ள கட்சி என்ற அடிப்​படை​யில் ஆட்​சி​யமைக்க உரிமை கோராமல் கூட்​டணி ஆட்சி எனக்​கூறி காங்​கிரஸ் ஆதரவு கடிதத்​தை​யும் சேர்த்து ஆளுநரிடம் கொடுத்​ததுதான் வாய்ப்பை நழுவ விட்​டதற்​கான முக்​கிய காரணம் எனக் கூறப்​படு​கிறது.