





















பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் தயாரிக்கும் 3-வது படத்துக்கு ‘மொத ராத்திரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுபிரியா என பலர் நடிக்கின்றனர். சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்கிறார். பரத் சங்கர் இசை அமைக்கிறார். இப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。