惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
A
About on SuperTechFans
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
人人都是产品经理
人人都是产品经理
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
J
Java Code Geeks
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
IT之家
IT之家
腾讯CDC
月光博客
月光博客
量子位
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் செப...
2026-05-20 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்​டம்​பர் மாதம் டெல்லி வரு​கிறார்.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 2026-ம் ஆண்​டுக்​கான தலை​மையை இந்​தியா ஏற்​றிருக்​கிறது. இதன்​படி கடந்த 14-ம் தேதி பிரிக்ஸ் வெளி​யுறவு அமைச்​சர்​களின் மாநாடு டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில் உறுப்பு நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் பங்​கேற்​றனர்.

இதைத் தொடர்ந்து வரும் செப்​டம்​பர் 12, 13 ஆகிய தேதி​களில் டெல்​லி​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் பிரிக்ஸ் கூட்​டமைப்பு நாடு​களின் பிரதமர்​கள், அதிபர்​கள் பங்​கேற்க உள்​ளனர். இந்த மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செப்​டம்​பர் மாதம் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​கிறார். தென்​னாப்​பிரிக்​கா​வில் செயல்​படும் ரஷ்ய தூதரகம் ரஷ்ய அதிபரின் டெல்லி வரு​கையை உறுதி செய்​திருக்​கிறது.

அதிபர் புதினின் வரு​கைக்கு பிறகு பிரதமர் நரேந்​திர மோடி ரஷ்​யா​வில் சுற்​றுப் பயணம் மேற்​கொள்ள உள்​ளார். இதுகுறித்து ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் அண்​மை​யில் கூறும்​போது, “இந்​தி​யா, ரஷ்யா உச்சி மாநாடு ஆண்​டு​தோறும் நடத்​தப்​பட்டு வரு​கிறது. 2026-ம் ஆண்​டுக்​கான மாநாடு ஆண்டு இறு​தி​யில் ரஷ்​யா​வில் நடை​பெற உள்​ளது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​பார். அப்​போது இரு நாடுகளுக்கு இடையே பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும்’’ என்றார்.