惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
I
InfoQ
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
云风的 BLOG
云风的 BLOG
有赞技术团队
有赞技术团队
Martin Fowler
Martin Fowler
MyScale Blog
MyScale Blog
The GitHub Blog
The GitHub Blog
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
G
Google Developers Blog
WordPress大学
WordPress大学
B
Blog
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
量子位
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
N
Netflix TechBlog - Medium
Last Week in AI
Last Week in AI
博客园 - 聂微东
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: 111 நாட்கள...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன். படம்: பிடிஐ

Updated on: 

வாஷிங்டன்: அமெரிக்​கா - ஈரான் இடையே நேற்று அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் மின்​னணு முறை​யில் ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டனர். இதன்​படி ஹார்​முஸ் ஜலசந்தி திறப்பு உட்பட 14 அம்ச திட்​டத்தை அமல்​படுத்த இருதரப்​பும் உறுதி அளித்து உள்​ளன.

அமெரிக்​கா - ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்​காலிக போர் நிறுத்​தத்தை அமல் செய்​தன. ஆனால் தற்​காப்பு நடவடிக்கை என்ற பெயரில் இருதரப்​பும் அவ்​வப்​போது தீவிர தாக்​குதல்​களில் ஈடு​பட்டு வந்​தன. பாகிஸ்​தான், கத்​தார் உள்​ளிட்ட நாடு​கள் இருதரப்பு இடையே சமரச முயற்​சிகளில் ஈடு​பட்​டன. இதன்​காரண​மாக அமெரிக்கா ஈரான் இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது.

சுவிட்​சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் ஜூன் 19-ம் தேதி அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இந்த சூழலில் ஒரு​நாள் முன்​ன​தாகவே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அரு​கே​யுள்ள வெர்​சாய் அரண்​மனை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்​புக்கு நேற்று விருந்து அளிக்​கப்​பட்​டது. அப்​போது அவர் மின்​னணு முறை​யில் அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டார். இதே​போல ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் இருந்​த​படி அந்த நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்​னணு முறை​யில் அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘வரலாற்று சிறப்​புமிக்க அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்டு உள்​ளேன். உலக அமை​தி, பிராந்​திய அமை​தியை நிலை​நாட்​டு​வ​தில் ஈரான் உறு​தி​யாக இருக்​கிறது’ என்று தெரிவித்துள்ளார். சமரச தூதர் என்ற வகை​யில் அமெரிக்​கா, ஈரான் அமைதி ஒப்​பந்​தத்​தில் பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் மின்​னணு முறை​யில் கையெழுத்​திட்​டார். அவர் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாக ஆக்​கப்​பூர்​வ​மான பங்​களிப்பை வழங்​கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், ஜெராட் குஷ்னர், ஈரான் உச்ச தலை​வர் மொஜ்தபா கமேனி, ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, உள்​துறை அமைச்​சர் எஸ்​கந்​தர் மொமேனி ஆகியோ​ருக்கு நன்​றி.

சமரச முயற்​சிகளில் ஈடு​பட்ட கத்​தார், சவுதி அரேபி​யா, துருக்​கி, எகிப்து நாடு​களின் தலை​வர்​களுக்​கும் பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்​கும் நன்​றியை உரித்​தாக்​கு​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு: ‘அமெரிக்​கா - ஈரான் இடையே 111 நாட்​கள் நீடித்த பதற்​றம் தற்​போது முழு​மை​யாக தணிந்​திருக்​கிறது. குறிப்​பாக சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட வளை​குடா நாடு​களின் மக்​கள் நிம்​மதி பெரு​மூச்சு விடு​கின்​றனர். போர் காரண​மாக இது​வரை ரூ.122 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது.

உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எரி​வா​யு, உரங்​களுக்கு கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உள்​ளது. பல்​வேறு நாடு​களின் பொருளா​தா​ரம் முழு​மை​யாக சீர்​குலைந்​திருக்​கிறது. பங்​குச் சந்​தைகள் கடும் வீழ்ச்சி அடைந்து உள்​ளன. உரத் தட்​டுப்​ பாட்​டால் பல்​வேறு நாடு​களில் உணவு பஞ்​சம் ஏற்​படும் அபாய​மும் எழுந்​திருக்​கிறது. அமைதி ஒப்​பந்​தம்​ காரண​மாக அனைத்​து பிரச்​சினை​களுக்​கும்​ சுமுக தீர்​வு காணப்​பட்​டு உள்​ளது’ என்று சர்​வதேச பொருளா​தார நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.