惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
U
Unit 42
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
月光博客
月光博客
D
Docker
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
DataBreaches.Net
阮一峰的网络日志
阮一峰的网络日志
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
Visual Studio Blog
博客园 - 聂微东
A
About on SuperTechFans
腾讯CDC
Jina AI
Jina AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோவையில் இளம்பெண் சடலம் மீட்பு - போலீஸார் தீவிர விசாரணை
டி.ஜி.ரகுபதி · 2026-06-24 · via hindutamil

Updated on: 

கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலையில், மதுக்கரை அருகே இளம்பெண் ஆடைகள் இன்றி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மேற்கு புறவழிச்சாலையில், மதுக்கரை அருகே மஞ்சுப்பள்ளம் என்ற பகுதி உள்ளது. இங்கு தனியார் கலை அறிவியல் கல்லூரியின் பின்புறம் உள்ள ஓர் இடத்தில், இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக இன்று (ஜூன் 24) காலை குனியமுத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான குனியமுத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரி்த்தனர். இளம்பெண்ணின் சடலம் உடலில் ஆடைகள் இன்றி இருந்தன.

உயிரிழந்து கிடந்த இளம் பெண்ணுக்கு 22 முதல் 25 வயதுக்குள் இருக்கலாம் எனத் தெரிகிறது. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் பிரிவினர், துப்பறியும் மோப்ப நாயை அப்பகுதி முழுவதும் அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த இளம் பெண்ணின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. சடலமாக கிடந்த பெண்ணின் இடது கையில் எஸ் இதயம் வடிவிலான ஹார்ட்டின் குறியீடு ஆர் எனவும், வலது கையில் ஜெகன் எனக் குறிப்பிட்டு ஹார்டின் குறியீடு குத்தப்பட்டு இருந்தது. மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

இதற்கிடையே, மதுக்கரை கிராம நிர்வாக அலுவலர் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது, சடலம் கிடந்த இடம் மதுக்கரை காவல் எல்லைக்குட்பட்டது எனத் தெரியவந்தது.

இதையடுத்து மதுக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், மர்ம நபர்கள் இளம்பெண்ணை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதே சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாரும் சந்தேக உயிரிழப்பு பிரிவில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில், அந்த பெண் எவ்வாறு உயிரிழந்தார் எனத் தெரியவரும்.

இதற்கிடையே, மதுக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெண் மாயமான புகார்கள் ஏதாவது வந்துள்ளனவா, அவ்வாறு மாயமான பெண்களின் அடையாளமும், உயிரிழந்த பெண்ணின் அடையாளமும் ஒத்துப் போகிறதா, இந்த பெண்ணை கொலை செய்தவர்கள் யார் என்பன குறித்து மதுக்கரை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.