惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

A
About on SuperTechFans
G
Google Developers Blog
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
月光博客
月光博客
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理
P
Proofpoint News Feed
博客园 - 聂微东
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
The Cloudflare Blog
博客园_首页
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
B
Blog
IT之家
IT之家
Jina AI
Jina AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
C
Check Point Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தே.ஜ. கூட்டணியிலிருந்து விலகியது தமாகா: ஜி.கே.வாசன் அறிவி...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on: 

சென்னை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து தமாகா வில​கு​வ​தாக கட்​சி​யின் தலை​வர் ஜி.கே.​வாசன் அறி​வித்​துள்​ளார். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பல ஆண்​டு​களாக பயணித்து வரும் தமிழ் மாநில காங்​கிரஸ் (தமா​கா) 2019 மக்​களவை தேர்​தலில் ஒரு தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோல்​வியை தழு​வியது.

பின்​னர், அதி​முக ஆதர​வுடன் ஜி.கே.​வாசன் மாநிலங்​களவை எம்​.பி ஆனார். 2021 சட்​டப்​பேரவை தேர்​தலிலும் அந்த கூட்​டணி தொடர்ந்த நிலை​யில், 6 இடங்​களில் தமாகா போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தது.

2024 மக்​களவை தேர்​தலில் பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து அதி​முக வெளி​யேறிய போதும், தமாகா கூட்​ட​ணி​யில் நீடித்​தது. அந்த தேர்​தலில் 3 இடங்​களில் சைக்​கிள் சின்​னத்​தில் தமாகா போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தது.

சமீபத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் 5 இடங்​களில் தாமரை சின்​னத்​தில் போட்​டி​யிட்ட தமாகா அனைத்​தி​லும் தோல்​வியை தழு​வியது.

இந்​நிலை​யில், தேர்​தல் தோல்வி மற்​றும் உள்​ளாட்சி தேர்​தல் தொடர்​பாக தமா​கா​வின் மாநில நிர்​வாகி​கள், மாவட்ட தலை​வர்​கள், செயற்​குழு உறுப்​பினர்​களு​ட​னான ஆலோ​சனை கூட்​டம், கட்​சி​யின் தலை​வர் ஜி.கே.​வாசன் தலை​மை​யில் எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் அடுத்து வரு​விருக்​கும் உள்​ளாட்சி தேர்​தலில் மாவட்ட ரீதி​யாக வெற்​றி​ பெற என்ன தேவை? என்​பது குறித்து விவா​திக்​கப்​பட்​டது. தொடர்ந்து கட்​சி​யின் நிர்​வாக அமைப்பை சீரமைக்க ஜி.கே.​வாசனுக்கு முழு அதி​காரம், தேர்​தல் முடிந்த நிலை​யில் தமாகா தனி நிலைப்​பாட்​டில் பயணித்​தல் உட்பட 8 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

மாநில துணை தலை​வர்​கள் விடியல் சேகர், முனவர் பாஷா, சக்தி வடிவேல், பொருளாளர் ராமன், மாநில நிர்​வாகி​கள் வெங்​கடேசன், ரமேஷ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ஜி.கே.​வாசன் கூறிய​தாவது: தமிழகத்​தில் 60 ஆண்​டு​களுக்கு பின்பு அரசி​யலில் யாரும் எதிர்​பா​ராத வகை​யில் புதிய ஆட்சி மலர்ந்​திருக்​கிறது.

ஆனால் 2014 முதல் 2026 வரை தொடர்ந்து 12 ஆண்​டு​களில் நடந்த தேர்​தல்​களில், கூட்​ட​ணி​களில் தமாகா பங்கு பெற்​றும், எங்​களது இலக்கை எங்​களால் அடைய முடிய​வில்​லை. குறிப்​பாக கடந்த 3, 4 தேர்​தல்​களில் எங்​களது கூட்​ட​ணி​யும் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை.

மேலும் கூட்​ட​ணி​யில் இருக்​கும் போது கட்​சி​யின் பொறுப்​பாளர்​களுக்கு பொறுப்​பு​கள் குறைவ​தாக​வும், கூட்​டணி அரசி​யலில் கட்​சி​யின் வளர்ச்சி குறைவ​தாக​வும் நிர்​வாகி​கள் கருதுகின்​றனர். தேர்​தல் நேரத்​தில் கூட்​டணி அவசி​யம் என்​ப​தில் மாற்​றுக்​கருத்து கிடை​யாது.

அதே​நேரம் தேர்​தல் இல்​லாத நேரத்​தில் மாவட்ட தலை​வர்​களும், மாநில நிர்​வாகி​களும், பொறுப்​பாளர்​களும் தங்​களு​டைய கட்​சிப் பணியை பொறுப்​புணர்​வுடன் செய்​யக்​கூடிய நிலை ஏற்பட வேண்​டும்.

அதற்கு உள்​ளாட்சி தேர்​தல் வரும் வரை தமாகா தனித்​தன்​மையோடு செயல்பட வேண்​டும் என நிர்​வாகி​கள் விரும்​பு​கிறார்​கள். அதனடிப்​படை​யில் மத்​தி​யில் பாஜக, மாநிலத்தில் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து தமாகா நட்பு கட்​சி​யாகவே வில​கு​கிறது.

இனி எங்​களை வலுப்​படுத்தி கொள்ள நகரம் முதல் கிராமம் வரை மீண்​டும் கட்சி பணி​களை தீவிர​மாக மேற்​கொள்ள முடிவு செய்​துள்​ளோம் என்றார்.

தவெக​வா? திமுக​வா?

இதற்​கிடையே கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​களிடையே கேட்​ட​போது, அடுத்து தவெக அல்​லது தி​முகவுடன் கூட்​டணி வைத்து வரும் தேர்​தல்​களை சந்​திப்​பது குறித்து நிர்​வாகி​களிடம்​ ஆலோ​சனை நடத்​தி முடிவு செய்​யப்​படும்​ என தெரிவித்​தனர்​.