惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
J
Java Code Geeks
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net
腾讯CDC
GbyAI
GbyAI
I
InfoQ
博客园 - Franky
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
Visual Studio Blog
Vercel News
Vercel News
博客园_首页
MyScale Blog
MyScale Blog
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium
V
V2EX
T
The Blog of Author Tim Ferriss
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
大猫的无限游戏
大猫的无限游戏
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக அரசின் முதல் ஆளுநர் உரை: தலைவர்கள் வரவேற்பும், எதிர்...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் அர்​லேகர் உரைக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் பலர் வரவேற்​பும் எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர்.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்: ஆளுநர் உரை ஆளுங்​கட்​சிக்கு முழு ஆதரவை தெரிவிக்​கும் அறி​விப்​பாக மட்​டுமே இருந்​தது. இது​போன்ற அறி​விப்​பு​களை நிறைய பார்த்​து​விட்டோம்.

வெறும் அறி​விப்​பாக மட்​டுமில்​லாமல், அதி​காரப்​பூர்​வ​மான, ஆளு​மைமிக்க ஒரு ஆட்​சி​யாக இந்த ஆட்சி இருக்க வேண்​டும். பாலியல் குற்​ற​வாளி​களுக்கு என்​க​வுன்ட்டர்​தான் தீர்​வாக அமை​யும். சட்​டப்​பேர​வை​யில் தமிழ்த்​தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் ஆரம்​பத்​தி​லும், முடி​விலும் பாடப்​பட்​டதை நான் வரவேற்​கிறேன்.

பாமக தலை​வர் அன்​புமணி: மத்​திய அரசின் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புக்​குப்பின், `சமூகநீதி சர்​வே' நடத்​தப்​படும் என்ற ஆளுநர் உரையின் அறி​விப்பு வரலாற்​றுச் சிறப்​புமிக்​கது. பாட்​டாளி​களின் 46 ஆண்​டுக்​கால சமூகநீதி கோரிக்கை மற்​றும் கனவு நனவாக உள்​ளது மகிழ்ச்சி​யளிக்​கிறது.

கடந்த காலங்​களில் பல முதல்​வர்​களிடம் வலி​யுறுத்​தி​யும் சாத்​தி​ய​மா​காத இக்​கோரிக்​கையை நிறைவேற்​று​வ​தாக அறி​வித்​துள்ள முதல்​வர் விஜய்க்கு நன்​றி.

சிபிஎம் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம்: நிதிப் பகிர்​வுக்​கான சிறப்​புக் குழு, போதை ஒழிப்​பு, வெளிப்​படை​யான நிர்​வாகம், ஆசிரியர் மற்​றும் உதவிப் பேராசிரியர் காலிப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என்ற அறி​விப்​பு​களை சிபிஎம் வரவேற்​கிறது.

எனினும், தவெகவின் கொள்​கை​யான `சா​தி​வாரி இட ஒதுக்​கீடு' என்​பது இட ஒதுக்​கீட்​டின் அடிப்​படையையே கேள்விக்​குள்​ளாக்​கும் என்​ப​தால் அதை ஏற்க முடி​யாது.

சிபிஐ மாநிலச் செய​லா​ளர் வீர​பாண்​டியன்: தொழிலா​ளர் நலன், சட்ட உரிமை​கள், கண்​ணி​ய​மான வாழ்​வுக்​கான ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் உள்ளிட்ட உழைக்​கும் மக்​களின் எதிர்​பார்ப்​பு​கள் குறித்து ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரை​யில் இல்லை என்​பதும், மத்​திய அரசின் தொழிலா​ளர் விரோத நான்கு சட்​டத் தொகுப்​பு​கள் குறித்​தும் ஆளுநர் உரை அமைதி காத்​திருப்​பதும் பெரும் ஏமாற்​றம் அளிக்​கிறது.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: கனிமவளக் கொள்ளை தடுப்​பு, ஊழல் ஒழிப்​பு, அரசு இயந்​திரம் டிஜிட்​டல் மயமாக்​கல், போதை ஒழிப்பு மற்​றும் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களை இரும்​புக்​கரம் கொண்டு ஒடுக்​குதல் போன்ற அறி​விப்​பு​கள் சிறப்​பானவை.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: தவெக அரசு தயாரித்த ஆளுநர் உரை, வெறும் `தங்க முலாம் பூசப்​பட்ட தகரம்' ஆகும். இரு​மொழிக் கொள்​கை​யைத் திணிப்​பதும், தேசிய கல்விக் கொள்​கையை எதிர்ப்​பதும் மாணவர்​களின் எதிர்​காலத்​தைக் கேள்விக்​குறி​யாக்​கி​யுள்​ளது.

சட்ட ஒழுங்கு சீர்​குலைந்​துள்ள நிலை​யில், பெண்​கள் பாது​காப்பு குறித்த அறி​விப்பு கேலிக்​கூத்​தானது. மகளிர் திட்​டம், சிலிண்​டர், தாலிக்கு தங்​கம் உள்​ளிட்ட தவெக​வின் கவர்ச்​சித் தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்ற எந்த உத்​தர​வாத​மும் இல்​லை.

நிதி​நிலை​யைக் காரணம் காட்டி மக்​களை ஏமாற்​றி​யுள்​ளனர். சாதி​வாரி சர்வே அறி​விப்பு மட்​டுமே இதில் ஆறு​தல் தரும் ஒரே விஷ​யம்.

தவாக தலை​வர் வேல்​முரு​கன்: சமூகநீதி கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்ற அறி​விப்புக்கு நன்​றி. ஆளுநர் உரையில் எதிர்​பார்த்த திட்​டங்​களோ, தேர்​தல் வாக்​குறு​தி​கள் குறித்த அறி​விப்​பு​களோ இல்லை.

மஜக தலை​வர் தமி​முன் அன்​சா​ரி: ஆளுநர் உரை சடங்கு பூர்​வ​மான சம்​பிர​தாய உரை​யாக அமைந்​திருக்​கிறது. அது​வும் முந்​தைய தி​முக அரசின் கொள்​கைகளை அப்படியே வழிமொழிகிற வகை​யில்​ பல்​வேறு கருத்​துகள்​ இதில்​ இடம்​பெற்​றிருந்​தன.