惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
IT之家
IT之家
博客园 - 【当耐特】
罗磊的独立博客
Stack Overflow Blog
Stack Overflow Blog
MyScale Blog
MyScale Blog
WordPress大学
WordPress大学
The GitHub Blog
The GitHub Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Hugging Face - Blog
Hugging Face - Blog
I
InfoQ
B
Blog RSS Feed
腾讯CDC
云风的 BLOG
云风的 BLOG
N
Netflix TechBlog - Medium
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
GbyAI
GbyAI
雷峰网
雷峰网
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
D
DataBreaches.Net
The Cloudflare Blog
V
V2EX
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மானவ் சுதர் அபாரம்: 152 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ-ஆன் பெற...
வேட்டையன் · 2026-06-08 · via hindutamil

Updated on: 

முலான்பூர்: இந்திய அணிக்கு எதிரான முலான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ-ஆன் பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இதில் இந்திய அணியின் அறிமுக வீரர் மானவ் சுதர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 127 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினர். சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பந்த் தலா 81 ரன்கள் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 52, மானவ் சுதர் 28, முகமது சிராஜ் 22 ரன்கள் எடுத்தனர்.

அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் ஆப்கன் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்தனர். அப்துல் மாலிக் 16, செதிக்குல்லா 17, குர்பாஸ் 12, ஹஸ்மத்துல்லா 20, அஃப்சர் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இன்று காலை இந்த போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு நேரத்துக்கு முன்பாகவே எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் ஆப்கானிஸ்தான் இழந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா, 60 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இந்திய அணி சார்பில் பந்து வீசிய அறிமுக வீரர் மானவ் சுதர், 22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா 3, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் கைப்பற்றினர்.

மானவ் சுதர் சாதனை: இந்த நூற்றாண்டில் அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் 5+ விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய பவுலராக மானவ் சுதர் உள்ளார். மேலும், அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்களில் அவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

ஃபாலோ-ஆன்: முதல் இன்னிங்ஸில் 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணிக்கு ஃபாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி. அதன்படி தற்போது ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. 3-ம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு நேரப்படி 4 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்துள்ளது ஆப்கன்.